அகில பாரத இந்து மக்கள் சேனா உயர்மட்டக்குழு ஆலோசனைக்கூட்டம் மற்றும் கொடி அறிமுக விழா!

ABHMS Flag reveal

கோவை: ஆக்டொபர் 4 (ஞாயிற்றுக்கிழமை) அகில பாரத இந்து மக்கள் சேனா உயர்மட்ட ஆலோசனைக்குழு மற்றும் கொடி அறிமுக விழாவானது கோயம்புத்தூர் நல்லாம்பாளையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் டாக்டர் திரு. கருப்பையா தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் திரு. S. பிரேம்குமார் முன்னிலை வகித்தார். இவர்களுடன் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் திரு. கனகவேல் பாண்டியன், இளைஞரணி தலைவர் திரு. M.P. நமச்சிவாயம், மகளிரணி தலைவி திருமதி. J. பாக்யலக்ஷ்மி, கொள்கை பரப்பு செயலாளர் திரு. S. கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சக்தி சேனா நிறுவன தலைவர் திரு. அன்பு மாரி, அகில பாரத இந்து மஹா சபா மாநில தலைவர் திரு. தா. பாலசுப்ரமணியம் மற்றும் இந்து மக்கள் கட்சி மாநில இணை செயலாளர் காலணி பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here