அக்டோபர் 15 தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்தியஅரசு அனுமதியளித்துள்ளது !

அக்டோபர் 15 தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்தியஅரசு அனுமதியளித்துள்ளது
அக்டோபர் 15 தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்தியஅரசு அனுமதியளித்துள்ளது

கோவிட் -19 காரணமாக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா அரங்குகள் அக்டோபர் 15 முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (06/10/2020)செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

“கடந்த ஏழு மாதங்களாக சினிமா அரங்குகள் மூடப்பட்டுள்ளன. அவை இப்போது அக்டோபர் 15 முதல் திறக்கப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பிற்காக, சினிமா அரங்குகள் பின்பற்ற வேண்டிய SOP உடன் வந்துள்ளோம்” என்று ஜவடேகர் கூறினார்.


சினிமா தியேட்டர்களில், ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும், கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.

அனைவரும் மாஸ்க் அணிந்தபடி படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

தியேட்டர் உள்ளே பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்கு தீனிக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

தியேட்டரில் 24 முதல் 30 டிகிரியில் ஏ.சி., அளவை பராமரிக்க வேண்டும்

இடைவேளைகளில் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை ஒளிபரப்ப வேண்டும். இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here