0
400 கிலோமீட்டர்க்கும் மேல் சென்று எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைசோதனை வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமான சோதனை வெளியீட்டுடன் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது, இது மேம்பட்ட செயல்பாட்டு திறன்களையும் கூடுதல் உள்நாட்டு தொழில்நுட்பங்களையும் காட்டுகிறது. அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.