அதிமுக நண்பர்களும் புரிந்து பேச வேண்டும் – அண்ணாமலை மாநில துணை தலைவர் பாஜக

கோவை பா.ஜ.க மாநகர் மாவட்ட பழங்குடி அணி செயற்குழு கூட்டம் கொடிசியா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் அக்கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

பா.ஜ.க தேசிய தலைமை பிஸியாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் மாநில தலைவர் முருகன் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளபட்டுள்ளது. கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் அறிவிக்க முடியும் என்பதை முருகன் சொல்லி இருந்தார்.

அதிமுக நண்பர்கள் பார்த்து பேச வேண்டும் புகழேந்தியும், அதிமுக நண்பர்களும் புரிந்து பேச வேண்டும் ஜே.பி.நட்டா தமிழகம் வரும் போது அனைத்து குழப்பங்களும் தீரும் முதல்வர் மீது எந்த புகாரும் தெரிவிக்கவில்லை கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

கூட்டணி சம்மந்தப்பட்ட விடயங்களை முடிவு பாராளுமன்ற குழு முடிவு செய்யும் அமித்ஷா கட்சி தலைவர் கிடையாது என்பதால் அவர் தமிழகம் வந்த போது கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here