அனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்

57

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டத்தை பொதுமக்களின் புகாரின்பெயரில் தடுத்து நிறுத்திய இந்துமுன்னணி. அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த சிலர் அனுமதியின்றி சிலரை அழைத்துவந்து ஜெபக்கூட்டம் நடத்தி வந்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அந்த பகுதியை சார்ந்த இந்து முன்னணியினரிடம் புகாரளித்தனர்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஜெபக்கூட்டத்தை நிறுத்துமாறு கூறினார். ஏழை இந்துக்களின் வறுமையை இவர்கள் உபயோகப்படுத்திக்கொண்டு இதுபோன்ற மதமாற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினார். மேலும் அந்த பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபடும் அவர்களை கைதுசெய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஹிந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கேஎம் பேச்சிமுத்து. மதுக்கரை மேற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமி.மதுக்கரை மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபு மதுக்கரை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் .பால்ராஜ் செயலாளர் R. விக்னேஷ் குமார் துணை தலைவர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here