அன்னியர் குளத்தில் குளிக்கலாமா?

55

அன்னியன் குளத்தில் குளித்தால் குளத்தின் உரிமையாளர் பாவத்தின் கால்பாகம் குளித்தவனை பாதிக்கும் என்பது பண்டைய காலத்து நம்பிக்கை.

அன்னியர் குளத்தில் குளிக்கவோ, வாகனம், படுக்கை, இருப்பிடம், கிணறு, பூந்தோட்டம் என்பவற்றை உபயோகிக்கவோ செய்தால், சொந்தக்காரர் பாவத்தின் கால்பாகம் உபயோகிப்பவனை சேரும் என்று மனுநூலிலும் கூறப்பட்டுள்ளது.

வறியோர்களையும் தாழ்த்தப்பட்டோரையும் செல்வந்தர்களின் உடைமைகளினின்று விலக்கி நிறுத்துவதற்காகவும் அவர்களுக்கு அசௌகரியங்கள் உருவாக்காமலிருக்கவே இவ்வகை தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று நம்பியிருந்தனர்.

உயர் நிலையிலுள்ளவர்கள் அவர்கள் அறியாத நேரம் பிறர் தமது குளங்களில் குளிப்பதைத் தவிர்ப்பதற்காக உரிமையாளர் பாவத்தில் கால் பாகம் குளிப்பவரைச் சேரும் என்று மூடநம்பிக்கைகளை பரப்பப்பட்டிருப்பதாகக் கருதியிருந்தனர்.

இக்காலத்தில் புதிய பெயர்களால் அறியப்படும் பல நோய்களும் பண்டைக் காலத்திலும் அறிந்திருந்தனர் என்று ஆயுர்வேத ஏடுகளில் உறுதியாகக் கூறப்படுகின்றன. இவையில் பலதும் நீர் வாயிலாக பரவும் நோய்கள்.

எனவே உரியவர் பாவத்தின் கால் பாகம் குளிப்பவனைச் சேரும் என்பதை, உரியவர் நோயில் கால்பாகம் உபயோகிப்பவனைச் சேரும் என்று பொருள் கொள்ள வேண்டும். உரியவர் சொந்தக்குளத்தில் குளித்திருந்த காலத்தில், அவரை பாதித்திருந்த தொற்று நோய் பிறரையும் அவர்கள் நோய் உரியவரையும் பாதிக்காமலிருக்க விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. அன்னியர் குளத்தில் குளிக்கலாகாது என்ற விதி முறை கடைபிடிக்கப்பட்டது.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here