அம்மா உணவகமும்.! அராஜக திமுகவும்..!

பசியும் உணவும் பற்றி தமிழ் இலக்கியம் பாடிய அளவு அதுவும் ஓளவையர் பாடிய அளவு இன்னொரு புலவர் பாடியிருக்க முடியாது, இப்பாடல் அதை தெளிவாய் சொல்லும்
“ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது”
அதாவது ஒருநாள் கூட உண்ணாமல் இருக்கவும் முடியாது அதற்காக பலநாள் உணவை ஒருநாள் எடுக்கவும் முடியாது, இந்த வயிறை வைத்து கொண்டு எப்படி வாழ்வது என புலம்பியிருக்கின்றார்
அவளும் உணவுக்காக பலரிடம் காத்திருந்த காலமும் உண்டு அதில் ஏமாந்த பொழுது ” “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என சீறிய காட்சியும் உண்டு
“மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவமுயற்சி தாளாண்மை-தேனி்
கசிவந்த சொல்லயர்மேற் தாமுறுதல் பத்தும்
பசிவத் திடப்பறந்து போம்” “
என அவள் தன்னையே நொந்து அழுது சோகமும் உண்டு. அப்படியே ” ”பாழி னுடம்பை வயிற்றை கொடுமையால் நாழி யரிசிக்கே நாம்” என தன்னை அவள் சமாதானபடுத்திய காலமும் உண்டு.
பசி என்பது கொடுமையிலும் கொடுமையான ஒன்று, மானிட பிணிகளில் அது முதலாவது. பசியின் கொடுமையினை அனுபவித்து பார்த்தாலன்றி புரிந்து கொள்ள முடியாது
பசியும், நோயும் மானிட கொடுமைகள். நோயினை எல்லா மனிதனாலும் விரட்ட முடியாது என்பதை உணர்ந்த இந்து சமூகம் பசிபோக்க ஏகபட்ட வழிகளை அக்காலத்தில் செய்திருந்தது
மிக முக்கியமாக எல்லா வீடுகளிலும் திண்ணைகள் இருந்தன, அதில் வழிபோக்கர்கள் பசியாறினார்கள், அன்னதானம் என்பது இந்துக்களின் கடமையாய் இருந்தது
“ஐயமிட்டு உண்” என்பதே இந்துக்களின் தத்துவமாக இருந்தது
இதைத்தான் இந்து வள்ளுவனும் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என சொல்லியிருந்தான்
இந்து மரபில் வந்த பாரதியும் அதையே தன் பாடல்கள் பலவற்றில் சொன்னான் “வயிற்றுக்கு சோறிட வேண்டும்” என்பதும், “தனி மனிதனொருவனுக்கு உணவில்லையேல்” எனும் வரியும் அப்படி வந்ததே
அவன் இன்னும் ஆழமாக காக்கை குருவி எங்கள் சாதி என்ற அளவு எல்லா உயிருக்கும் உணவளிக்கவும் எண்ணினான்
பசியாற்றுவது பற்றி பல ஏற்பாடுகளை இந்து சமூகம் செய்திருந்தது
காகம் கத்தினால் விருந்தாளி வருவார்கள் என்றார்களே ஏன்?, காகங்கள் நுட்பமான அறிவுடையவை ஊருக்குள் புதிய முகங்களை காணும் பொழுது அவைகள் ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பும்
காகத்தில் ஒலியில் இருந்தே யாரோ அந்நியன் வந்திருக்கலாம் அவன் பசியோடு இருக்கலாம் என சுதாரித்த சமூகம் இது, காக்கையினை அதனால்தான் பித்ருக்கள் அதாவது முன்னோர் செய்த அன்னதான கடமைகளை சொல்ல வந்த வடிவங்கள் என கொண்டாடினார்கள்.
ஊரெல்லாம் அன்னசத்திரங்கள் அக்காலத்தில் இருந்தன, வழிபோக்கரும் ஆலய யாதிரிகர்களும் பசியாறும் இடமாக அவை இருந்தன‌
இன்னும் மிகபெரும் பசிபோக்கும் காரியத்தை இந்துமதம் ஆலயங்களில் செய்திருந்தது
இந்துமத ஆலய வழிபாடெலாம் சும்மா முணுமுணுத்து வருவதல்ல, அதில் தெய்வத்துக்கு படையல் நைவேத்தியம் என்பதெல்லாம் வழிபாடு முடிந்து எல்லோரும் பசியாறும் ஏற்பாடே
உலகில் எந்த நாட்டிலும் இல்லா அளவு தானியமும் அரிசியும் நெல்லும் இங்கு குவிந்திருந்தது, அதை கோவிலில் சாமிக்கு படையல் என சொல்லி ஊரெல்லாம் உண்ணும் வழக்கம் இங்கு இந்துக்களால் ஏற்படுத்தபட்டிருந்தது
இன்றும் எந்த மதத்திலும் இல்லா அளவு இந்து ஆலயங்களில் ஏதாவது ஒரு உணவு பக்தர்களுக்கு பிரசாதம் என வழங்கபடுவது இந்த ஏற்பாடே
யாத்திரை பக்தர்களும், மக்களும் இறைவன் முன்னால் பசியாறி செல்ல வேண்டும் என அம்மதம் பசிபோக்கும் பெரும் ஏற்பாடுகளை செய்திருந்தது
இந்த பாதிப்பில்தான் வள்ளலாரும் வந்தார் இன்னும் பலரும் வந்தார்கள், எல்லோருக்கும் சோறுபடைத்து பசியாற்றி மானிட சேவை செய்தார்கள்
இந்துமதம் எதையும் தனக்கோ தெய்வத்துக்கோ பார்ப்பானுக்கோ மட்டும் ஏற்படுத்தியது அல்ல, அதன் ஒவ்வொரு அசைவிலும் பொதுநலம் சமூக நலம் மானிட தேவை என எல்லாமும் கலந்திருந்தது
கிராம கோவில்களில் ஊர் கூடி கிடா வெட்டி உண்பது முதல் பெரும் ஆலயங்களில் வழங்கபட்ட வெண்பொங்கல் வரை பசிபோக்கும் ஏற்பாடே
அப்படிபட்ட தமிழகத்தில் ஆதீனங்களும், மடங்களும், அன்ன சத்திரங்களும் ஏராளமான மக்களின் பசி போக்கின‌
இந்துக்களின் ஆலயங்கள் அன்னதான கூடங்களாய் இருந்தன, மானிட பசியினை போக்கும் தரும காரியங்களுக்கு ஏகபட்ட விஷயங்களை இந்துமதம் செய்தது, பாவங்கள் கூட அன்னதானத்தில் தீரும் என அது ரகசியமாக அன்னதானத்தை ஊக்குவித்தது
புது புது ஆலயங்களை கட்டுதல், அதற்கு நிலமும் ஏரியும் எழுதி வைத்தல் என மன்னர்கள் செய்தது ஏன்?
மக்கள் தொகை பெருக பெருக அவை மக்களுக்கு உணவு அளிக்கும் பெரும் அட்சயபாத்திரமாக இருந்து கொண்டே இருந்தது
இந்த தர்மம் 13ம் நூற்றாண்டளவும் இங்கு இருந்தது
சிக்கல் ஆப்கானியர் ஆளவந்த காலத்திலும் அவனுக்கு பின் ஆங்கிலேயர் வந்த காலத்திலும் தொடங்கிற்று
அதற்கு முன் ஒருவரை கூட இத்தேசம் பிச்சைக்காரன் என உணவுக்கு அலையவிட்டதில்லை
பாண்டியர் காலத்தில் வந்த மார்க்கோ போலோ, சந்திரகுப்தன் காலத்தில் வந்த மெகஸ்தனீஸெல்லாம் இதை சொல்கின்றார்கள்
துக்ளக் காலத்தில் வந்த இபின் படுத்தா கூட இங்கு பிச்சைக்காரர் இல்லை என்பதை தெளிவாக சொல்கின்றான்
ஆம் இங்குள்ள இந்து தர்மம் அப்படி சக மானிடனின் பசியாற்றும் உன்னததை செய்திருந்தது, வள்ளலார் அதன் தொடர்ச்சியே
அப்படிபட்ட இந்து மண்ணில் “அம்மா உணவகம்” அதற்கு மாற்று பெயராக “கலைஞர் உணவகம்” “ஸ்டாலின் உணவகம்” என்பதெல்லாம் உச்சகட்ட காமெடி
உண்மையில் “இந்து உணவகம் “வள்ளலார் உணவகம்” அவ்வையார் உணவகம்” என்றுதான் அவைகளுக்கு பெயர் வந்திருக்க வேண்டும்
இந்து ஆலயங்களின் நிலங்களையும் வருமானங்களையும் சொத்துக்களையும் இந்து ஆலயங்களுக்கே கொடுக்க வழி செய்தால் இந்த உணவகங்களை அந்த ஆலயங்களே எளிதாக நடத்தும்
உண்மையில் தமிழகத்தில் என்ன நடக்கின்றது?
இந்து ஆலய சொத்துக்களும் காணிக்கையும் இன்னபிறவும் அரசுக்கே செல்கின்றது, அதில் அரசு அரிசி முதல் உணவகம் வரை நடத்தி வெட்டி விளம்பரம் செய்கின்றது
இது மாபெரும் அநீதி, உச்சபட்ச அநீதி
கோவில்களை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் அரசு , கோவில்கள் செய்யவேண்டிய அன்னதானத்தை தன் பெயரில் செய்து விளம்பரம் தேடுவதெல்லாம் தமிழகத்தின் கோமாளித்தனம்
ஆலயங்களை அவற்றின் முழு சொத்தோடு சுதந்திரமாக விட்டால் அவை ஆயிரம் உணவகங்களை அனுதினமும் நடத்தும்
இந்த உண்மையினை சொன்னால் நாம் சங்கி அல்லது காவி தீவிரவாதி
இந்து ஆலயங்கள் மீட்கபட்டு அவைகளின் சொத்துக்கள் அவைகளுக்கே முழுவதும் மீட்டு கொடுக்கபட்டால் உலகிலே மிகபெரிய அன்னதான மையமாக தமிழகமே திகமும்
முக்காலத்திலும் இப்பூமிதான் அப்படி திகழமுடியும், இந்துமதம் எனும் பெரும் ஞானமதம் செய்திருக்கும் ஏற்பாடு அப்படி
மற்றபடி இலவச அரிசி ,உணவகம் என திராவிட அரசுகள் செய்ததெல்லாம் மாபெரும் கோமாளிதனம், இந்து பெருமைகளும் பாரம்பரியமும் மறந்த தமிழனை ஏமாற்றிய அயோக்கியதனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here