அரங்கன் சிலைக்கு அஞ்சிய ஆப்கானிய சுல்தான்…!

இதுவரை உலகம் தங்கள் அடையாளத்தை காக்க பெரும்பாடு பட்ட இனம் என இஸ்ரேலிய யூதர்களைத்தான் சொல்லும்
மிகபெரிய போராட்டத்தை நடத்தி உலகெல்லாம் சிதறடிக்கபட்ட நிலையிலும் தாய்நாடு அடைந்தவர்கள், விடாத போராளிகள், எல்லாம் அழிந்த நிலையிலும் ஒரு குலத்தில் ஒரு தளிரில் இருந்து உருவாகி வந்தவர்கள் என அவர்களின் பிரசித்தி அலாதியானது

ஒரு யூதன் எக்காலமும் இரு விஷயங்களை விட்டு கொடுப்பதில்லை முதலாவது மோசே மூலம் கடவுள் வழங்கிய 10 கட்டளைகளின் கல்வெட்டு பெட்டகம், இரண்டாவது ஜெருசலேம் நகரம் இதில் துரதிருஷ்டவசமாக அவர்கள் ஈராயிரம் வருடமாக காத்த அந்த பெட்டகம் தொலைந்துவிட்டது, எவ்வளவு தேடியும் அவர்களால் அதை கண்டறிய முடியவில்லை
ஆனால் என்னவிலை கொடுத்தாலும் ஜெருசலேமை விட முடியாது என ஓரளவு மீட்டு இன்று அதை ஆண்டுகொண்டிருக்கின்றார்கள்

உலகளவில் அவர்களின் விடாபிடியான போராட்டமும், அந்த ஜெருசலேம் எங்கள் அடையாளம் என அவர்கள் வரிந்து கட்டுவதும் இன்றும் மோசே பேழை காணாமல் போனவருத்தமும் சிலாகிக்க கூடியது.அவர்களை தவிர இன்னொரு இனம் அப்படி இல்லை, தங்களை அடையாளபடுத்தும் ஒரு விஷயத்தை இழக்க விடாபிடியாக போராடும் இன்னொரு இனம் இல்லை என்றுதான் எண்ணிகொண்டிருந்தோம் “அரங்கன் உலா” எனும் நாவலும் , அந்த நாவலின் உண்மை வரலாற்றின் தரவுகளையும் படித்தபொழுது அப்படியே அந்த பிம்பம் நொறுங்கிற்று. நெபுகாத் நேச்சர், அலெக்ஸாண்டர், ரோமையர், துருக்கியர் என அவர்கள் ஆட்சியில் யூத இனம் என்னவெல்லாம் பட்டு அழிந்ததோ அதை எல்லாம் 13ம் நூற்றாண்டின் ஆப்கானிய படையெடுப்பில் ஸ்ரீரங்க பகுதி மக்களும் மிக கடுமையாக பெற்றிருகின்றார்கள்

அழிவென்றால் அப்படி ஒரு அழிவு

வறண்ட ஆப்கானில் எதுவுமே கிடைக்காமல் வழிப்பறி கும்பலாய் வாழ்ந்த அந்த இனம், பச்சை பசேல் என்ற வயல்களையும், வளமான ஆறுகளையும், முதல் முறையாக கடல்வழி முத்து முதல் அதில் கொட்டிய வருமானத்தையும் தங்கத்தையும் கண்டு வாய்பிளந்தன‌ அற்ப சில்லறைகளுக்காக பாலை நிலத்தில் மோதி கொண்ட அவை தங்கமும் வைரமும் கொட்டி கிடந்த ஆலயத்தை குறிவைத்தன‌ அதிலும் அவைகளின் கணக்கு சரியாக இருந்தது, சிவாலயங்களை விட வைணவ ஆலயங்களே பொன்னும் பொருளும் ஆடம்பரமும் மிக்கதாக இருந்ததை உணர்ந்திருந்தன

அங்கு மாபெரும் அவலத்தை அவை நிகழ்த்தின, கஜினி சோமநாதபுரியில் செய்த கொடூரத்துக்கு கொஞ்சமும் குறையாதது மாலிக்காபூரும் துக்ளக்கும் ஸ்ரீரங்கத்திலும் மதுரையிலும் தஞ்சையிலும் ஆடிய வெறியாட்டம்
இதில் மாலிக்காபூர் கிளம்பிவிட்டான், ஆனால் துக்ளக்கோ என் ராஜ்யம் மதுரை வரை உண்டு என ஆள ஆரம்பித்துவிட்டான்
ஸ்ரீரங்கம் ஆலயத்தை 13ம் நூற்றாண்டில் காரிருள் இப்படி சூழ்ந்தபொழுது அவர்கள் குறி எல்லாம் அந்த ரங்கன் விக்ரகம் மேல் விழுந்திருக்கின்றது.

துலுக்க நாச்சியாரிடம் இருந்து மீண்ட அரங்கன் அவர்களுக்கு ஒரு சவால் ஆனார், அது போக அரங்கன் இருக்கும் வரை இந்த வைணவ கும்பல் அணிதிரளும் அவர்கள் போராட்டமெல்லாம் அரங்கனை காப்பதே, அதை ஒழித்துவிட்டால் எதிர்ப்பு இருக்காது என அந்த விகரகத்தை குறிவைத்தது ஆப்கானிய சுல்தான் தலமை
ஒரு உலோக விக்ரகம் தங்களுக்கு மக்களை திரட்டி எதிர்ப்பு கொடுக்க விடகூடாது என முதல் முறையாக ஒரு சிலைக்கு அஞ்சியிருக்கின்றார்கள் அதை மிக கொடிய அடக்குமுறையில் அவர்கள் தேடுவதும், வைணவர்கள் மிகபெரிய போராட்டமாக கண்ணீரோடு நாடு நாடாக காடு காடாக அதை எடுத்து சென்று காத்திருக்கின்றார்கள்
சுமார் அரைநூற்றாண்டு காலம் ஆகும் வரை காடுகளிலும் மலைகளிலும் ரங்கனை யார் கண்ணிலும் படாமல் காத்து நின்றிருக்க்கின்றார்கள் இவ்வளவுக்கும் ஆப்கானிய கும்பல் மிக கடுமையாக அச்சிலையினை தேடிய காலம்
அரங்கனுக்கும் அவர்களுக்கும் இடையே பெரும் போரே நிகழ்ந்திருக்கின்றது, ஆனால் அரங்கன் தோற்கவுமில்லை அகபடவுமில்லை

அரங்கன் காவேரியின் மேற்கு கரைபக்கம் ஒளிந்திருந்தபொழுதுதான் விஜயநகர பேரரசு எழுந்து ஒளிவீசிற்று, காளியின் பக்தர்கள் என்றாலும் அவர்கள் வைணவர்கள் அவர்கள் பலம் பெற பலம்பெற பாமினி சுல்தான் அரசுக்கும் மதுரை சுல்தான் அரசுக்கும் இடையில் வெட்டி ஒரு இந்து அரசை நிறுவினார்கள்

அரங்கன் தங்களோடு இருப்பதால் வெற்றி கிடைக்கின்றது என நம்பினார்கள் , அதில் உண்மை இருந்தது
அவர்களை அழைத்து கொண்டு மறுபடி ஸ்ரீரங்கத்தை கைபற்றி அரங்கனை நிறுவி இன்றளவும் வைராக்கியமாக அந்த ஆலயத்தை காத்து நிற்கின்றது வைணவ இனம் இதெல்லாம் உலக வரலாற்றில் எங்கும் கிடைக்கா காட்சிகள், ஏன் ஆனானபட்ட யூத இனம் கூட தன் புனிதமான பேழையினை தவறவிட்ட உலகமிது அந்த உலகில் தங்களின் ஒரே அடையாளமான அரங்கனை அவர்கள் சுல்தானிடமிருந்து காத்து மீட்டு வந்த வகையெல்லாம் மாபெரும் வரலாறு
ஜெருசலேம் ஆலயமும் அந்த உடன்படிக்கை பெட்டியும் இருக்கும்வரை யூதர்கள் ஒற்றுமையாய் போராடுவார்கள் அதை அழித்தால் சிதறுவார்கள் என்றுதான் எதிரிகள் அந்த இரண்டையும் குறிவைத்து ஒழித்தனர்.

அதேதான் திருவரங்க ஆலயத்துக்கும் நடந்தது மக்கள் ஒன்று கூடி தங்களை எதிர்ப்பதை தடுக்க ஆலயத்தையும் ரங்கன் சிலையினையும் முடக்க வேண்டும் என மிக துல்லியமாக திட்டமிட்டனர் ஆப்கானியர்கள்., அதில் அரசியல் அழகாக இருந்தது உண்மையில் ஜெருசலேமுக்கு உண்டான வரலாற்று பெருமையும் வைராக்கியம் ஸ்ரீரங்கத்துக்கும் மதுரைக்கும் உண்டு ஆனால் இதையெல்லாம் யாரும் நினைத்துபார்க்க முடியாதபடி அவர்கள் கண்கள் கட்டபட்டுள்ளன, அது அவிழ்க்கபட வேண்டும்.

எப்படியெல்லாம் ஸ்ரீரங்க ஆலயமும் மதுரை ஆலயமும் மீட்கபட்டது என்பது பற்றி மாபெரும் நினைவு கூடங்கள் கட்டபட வேண்டும் அதில் ராமாயண மகாபாரத காட்சிகள் போல ஸ்ரீரங்கம் மீட்பும் , மதுரை மீட்பும் சிலைகளாகவும் படங்களாகவும் நிறுவபட வேண்டும் அப்பொழுதுதான் காலம் காலமாக இங்கு அவை அன்றுகண்ட வலிக்கும், அதிசயமாக அரங்கன் மீண்டுவந்து ஒளிவீசும் காட்சிக்கும் சான்றாய் அமையும் மதுரையில் அதை காந்தி மியூசியத்தை அகற்றிவிட்டு அந்த மங்கம்மாள் அரண்மனையின் ஒரு பகுதியினை இந்த சித்திர கூடமாக்கலாம் ஸ்ரீரங்கத்து கொடும் வலியினை, பக்தி மிக்க வரலாற்றை அங்குள்ள திருச்சி மங்கம்மாள் மாளிகையும் இன்று அரசு அலுவலமாக இருக்கும் அந்த மாளிகையில் சித்திர கூடமாக வைக்கலாம் ஆம் , 13ம் நூற்றாண்டில் நடந்தது மாபெரும் வரலாறு அதை பல்வேறு தரவுகளுடன் “வேணு கோபாலன்” எனும் நெல்லைக்காரர் அழகாக எழுதியிருக்கின்றார்.


நாவலுக்காய் சில பாத்திரங்களை சேர்த்திருக்கின்றாரே தவிர மற்றபடி நடந்த வரலாறுகளில் ஒரு புள்ளியினை கூட அவர் கூட்டவோ குறைக்கவோ இல்லை இந்த வேணுகோபாலனே “புஷ்பா தங்கதுரை” என நாவல்களை எழுதியிருக்கின்றார், ஆனால் அவரின் ஆகசிறந்த உழைப்பு இது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு விசித்திரம் உண்டு, அது இதுவரை புரியாத ரகசியம் ராஜராஜ சோழனும், இந்த அரங்கன் விக்ரஹகத்தை மீட்டு கொண்டுவந்த பக்தி மிக்க வைணவ பெரியோரும் வரலாற்றை மாற்றியவர்கள் ஆனால் இவர்களின் கதை ஏதும் விருது வென்றதாக தெரியவில்லை
பாலகுமாரனின் உடையார் நாவலெல்லாம் இனி ஒருவன் எழுதமுடியா இதிகாசம், அரங்கன் உலா இனி வாய்ப்பே இல்லா அட்டகாசமான நாவல் ஆனால் இதற்கெல்லாம் சாகித்த்ய அகாடமியும் கிடைக்கவில்லை, ஞானபீடமும் கிடைக்கவில்லை
மாறாக முட்டுசந்தில் மூத்திரவாடை என எழுதிய நாவலெல்லாம் பெரும் விருதுகளை பெறுகின்றன
ஆம், இங்கு இந்துக்களையோ அவர்களின் ஆலய அரச வரலாறுகளையோ சொல்லும் நாவல்களுக்கு விருது இல்லை எனும் கடும் முகம் காட்டபடுகின்றது, அப்படி ஒரு விதி ரகசியமாக வெள்ளையனால் ஏற்படுத்தபட்டு பின் காங்கிரசால் நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

முதலில் அந்த இம்சை கட்டுபாடுகளை மாற்றி உடையார் நாவலுக்கும், அரங்கன் உலா நாவலுக்கும் பெரும் விருதுகளை அறிவித்தல் வேண்டும் இந்த மண்ணுக்கான மதம், அரசியல் வரலாறுகளை சொல்லும் நாவலுக்கு விருது கொடுக்காமல் எந்த இலக்கியத்துக்கு கொடுக்க முடியும்?

எது மக்களை தங்கள் மதம், நாடு வரலாறு என சிந்திக்க வைக்குமோ அதுதான் நல்ல இலக்கியமாக இருக்க முடியும், வேறு எல்லாம் குப்பைதொட்டி ரகமே நிச்சயம் வைணவர்கள் ஸ்ரீரங்கத்தில் நடத்திய போராட்டமும் பின் நாடு நாடாய் அலைந்து அரங்கனை காப்பாற்றி பின் மறுபடியும் ஸ்ரீரங்கம் வந்து ஆலயம் அமைத்து இன்றுவரை காப்பதும் உலகில் எந்த இனத்துக்கும் இல்லா அதிசயம் அதன் தொடர்ச்சியாக ராமர்கோவிலை வேண்டுமானால் வடக்கே சொல்லலாம்
ஆம், ஸ்ரீரங்கம் ஆலயம் அருகே கலைகூடம் அமைத்து சுல்தானிய கொடுமைகளை சித்திரமாக சிலைகளாக தீட்டி வைத்து அந்த வலிமிகு வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று தொடர்ந்து ஆலயத்தை காக்க வைராக்கியம் வளர்பது அவர்கள் கடமை அப்படியே வரலாற்று பாட புத்தகத்தில் இதை பெரும் பாடமாக வைத்து மாணவர்களை கற்க வைப்பதும் தலையாய கடமை இதைவிட படிக்க வேண்டிய வரலாறு வேறு எதுவுமில்லை.

எப்படிபட்ட விஷேஷமான ஆச்சரியம் கொண்டது ஸ்ரீரஙகம் ஆலயம்?

ஆனானபட்ட கில்ஜியும் துக்ளக்கும் இன்னும் பல மாமன்னர்களும் தோற்று ஓடிய அந்த ஆலய வாசலில் ஒரு சிலையாக ராம்சாமி அமர்ந்திருப்பதெல்லாம் கால கொடுமை மாபெரும் மன்னாதி மன்னர்களின் காலடியே அங்கிருந்து அகன்றபொழுது ராம்சாமி சிலையெல்லாம் காலத்தால் ஊதி தள்ளபடும், அரங்கனின் புன்னகை அதை ஒரு காலத்தில் செய்யும் அந்த “அரங்கன் உலா” நாவலை படித்து முடித்து வரலாற்று தரவுகளை சரிபார்த்தபொழுது ஒரு நிறைவும் மகிழ்ச்சியும் உருக்கமும் வந்தது யூத இனத்திடம் மட்டுமல்ல தமிழக வைணவ இனத்திடமும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பாடம் உண்டு என்பதை திருரங்க ஆலய வரலாறு சொல்கின்றது.

எப்பொழுது இந்தியாவில் கால் வைக்கின்றோமோ அப்பொழுது முதலில் பார்க்க வேண்டியது அந்த அரங்கனின் சிலை , அது மாபெரும் வரலாற்றின் புன்னகையினை தன்னுள் புதைத்தபடி ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிரித்து கொண்டிருக்கின்றது
அந்த மாபெரும் அடையாளத்தையும் அது மீண்டு வந்த போராட்டத்தையும் நினைக்கும் பொழுது இப்பொழுதே கண்ணீர் பெருகுகின்றது, அரங்கனை சந்திக்கும் நாளில் அது இன்னும் கூடலாம்.

(வரலாற்றில் யூத இனம் தொலைத்துவிட்ட அவர்களின் தங்க‌ பேழை , வைணவம் அரும்பாடுபட்டு போராடி காத்து மீட்டு கொண்ட அரங்கன் சிலை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here