ஆகஸ்ட் வரை அபராதம் இல்லீங்களாம்.. இந்த பட்டியலுக்கும் விதிவிலக்காம்..!

புதுடில்லி : இந்தியாவில் விற்பனை செய்யப்படும்  தங்க நகைள் மீது, பிஎஸ்ஐ முத்திரைப் பதிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வேர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் தங்கை நகைகளில், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைப் பதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் இந்த கட்டாய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்றைய சூழலில் நாட்டில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளில் 30 சதவீத நகைகள் மட்டுமே இப்போது பிஎஸ்ஐ ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, ஒவ்வொருவரும் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிஎஸ்பிஐ ஹால்மார்க் கட்டாயம் என்ற நடைமுறை வந்துள்ளது. எனினும், இப்போதைக்கு நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் முத்திரையிடும் மையங்கள் உள்ளன. இது பின்னர் படிப்படியாக ஹால்மார்க் முத்திரை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற சூழல்களை கருத்தில் கொண்டு, ஹால்மார்க் கட்டாயம் என்ற நடைமுறையில் இருந்து சில வகையான நகைககள் மற்றும் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக ஹால்மார்க் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டும், ஆகஸ்ட் 31ம் தேதிவரை, அபராதம் விதிப்பு நடவடிக்கை தவிர்க்கப்படுகிறது.

மேலும், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்குள் தங்க நகை விற்பனை செய்யும் நகைக் கடைகளுக்கு, இந்த கட்டாய ஹால்மார்க் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், மத்திய அரசின் வர்த்தக கொள்கைகளுக்கு உட்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் நகைகள், மறு இறக்குமதி செய்தல் மற்றும் சர்வதேச நகை கண்காட்சிகளுக்கான நகைகள், உள்நாட்டில் அங்கீகாரம் பெற்ற பி 2 பி கண்காட்கிளுக்கான நகைகள் ஆகியவற்றுக்கு, கட்டாய ஹால்மார்க் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் முறையான அடையாளம் இல்லாமல் வைத்துள்ள பழைய நகைகளை வாங்குவதில் தடையேதும் இல்லை. அந்த நகைகளை மறு சுழற்சி செய்யும்போது, அவற்றை பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையுடன் அடையாளப்படுத்தலாம்.

இவ்வாறு நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here