ஆக்சிஜன் அரசியலும் போலி போராளிகளும்.

இந்தியாவில் போர்கால வேகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீர்க்கபட்டுகொண்டிருக்கின்றது, மோடி அரசின் மின்னல் வேக நடவடிக்கைகளுக்கு உலகெங்கும் இருந்து ஆதரவுகள் குவிகின்றன‌

இந்தியாவின் அரசியல் நிர்வாகம் குழப்பமானது, அங்கு மாநில அரசுகளுக்கு உரிமை அதிகம், மாநில அரசுகள்தான் சுகாதார மருத்துவ துறை எல்லாம் கையில் வைத்திருக்கும், அவை கேட்டு கொண்டால்தான் மத்திய அரசு தலையிட முடியும்

சிக்கல் பெரிதாகும் வரை மவுனம் காத்த மாநில அரசுகள் திடீரென மத்திய அரசை நோக்கி ஓலமிட்ட பொழுது ஒரு நொடி ஸ்தம்பிப்பு வரத்தான் செய்தன, ஆனால் மத்திய அரசு தலையிட்ட பின் நிலமை சுமூகமாகின்றது

நிச்சயம் இது மாநில அரசியலின் படுதோல்வி, இந்தியாவில் மாநில அரசுகளே தேவையில்லை மாறாக கவர்ணர் ஒருவரே நிர்ணயிக்க போதுமானவர் என்பதும் மற்றபடி மாநில அரசு என்பது தேவையில்லா வீண் அரசியல் என்பதும் இப்பொழுது அழகாக விளங்குகின்றது

மாநில கட்சிகள் இருக்க கூடாது என்பதுதான் 1940களில் இந்திய எதிர்பார்ப்பாகவும் பரிந்துரையாகவும் இருந்தது, மாநில கட்சிகள் வளர வளர அது பலவித குழப்பங்களை ஏற்படுத்தும் எனும் பயம் அன்றே இருந்தது

நேரு எனும் அந்த மிக தாரளமான ஜனநாயகவாதிதான் , எதிர்கால சிந்தனை அறவே இல்லாத அந்த நேருதான் இவைகள் வளர அனுமதித்தார், அதன் விளைவுதான் ஏகபட்ட சிக்கல்கள்

இப்பொழுது மத்திய அரசு உலகெல்லாம் இருந்து ஆக்ஸிஜனை வாங்குகின்றது

கச்சா எண்ணெய் போல திரவ ஆக்ஸிஜனை எளிதாக கொண்டுவர முடியாது, அதற்கென பிரத்யோக டாங்கர்களும் இன்னும் பல நுட்பமான பாதுகாப்பும் இருந்தால்தான் அதை கொண்டுவர முடியும்

விமானம் ரயில் என மத்திய அரசு போர்கால அடிப்படையில் ஆக்ஸிஜனை குவித்து கொண்டிருப்பதால் சிக்கல் இல்லை

இந்நிலையில் தனியார் ஆலைகளான அம்பானி, அதானி, டாட்டா, ஜிண்டால், லஷ்மி மிட்டல் ஆகியவை தங்கள் நிறுவணங்களின் ஆக்ஸிஜன் தயாரிப்பினை அதிகரித்து அப்படியே நாட்டு மக்களுக்கு கொடுக்கின்றன‌

இதில் டாடாவின் பங்களிப்பு மகத்தானது, அவர்களின் வியாபார அடிப்படை கொள்கை என ஜே.ஆர்.டி டாடா சொன்ன வாக்கியம் புகழ்பெற்றது

“எந்த சமூகத்திடம் இருந்து பெற்றாயோ அந்த சமூகத்துக்கே திருப்பி கொடு”

அதை மிக சரியாக செய்கின்றது டாடா நிறுவணம், இன்னும் ஏகபட்ட நிறுவணங்கள் அள்ளி கொடுக்கின்றன‌

இதில் தமிழக நிறுவணங்கள் ஏதும் உண்டா அதாவது தமிழக தனியார் நிறுவணங்கள் ஏதும் உண்டா என்றால் டி.வி.எஸ் நிறுவணம் மட்டும் இருக்கின்றது

எந்த டி.வி.எஸ்?

கருணாநிதியால் 400 பஸ்களை பார்பானிய கம்பெனி என பிடுங்கி விரட்டபட்ட அந்த டி.வி.எஸ்

இது தவிர தமிழக நிறுவணம் ஏதும் களத்தில் இல்லை

காரணம் தமிழக தொழிலதிபர்களுக்கு தெரிந்ததெல்லாம் இல்லாததை எழுதி சம்பாதிப்பது, அரசியலில் சம்பாதிப்பது இல்லை கல் மண் என கடத்தி சம்பாதிப்பது

மற்றபடி பெரிய கனரக தொழிலோ, கார் கம்பெனியோ, லாரி, கப்பல் உள்ளிட்ட பெரும் கம்பெனியோ செய்யும் ஆசையும் அறிவும் தேடலும் அவர்களுக்கு இல்லை

அப்படி ஒருவனுக்கு இருந்தால் அவன் திமுக அதிமுகவுக்கு கப்பம் கட்டுவதை நினைத்து பார்த்தே தூரம் தலைதெறிக்க ஓடிவிடுவான்

தமிழகத்தில் மிகபெரிய கம்பெனிகள் உலகளாவில் கனரக தொழிலுக்கு வரவேண்டுமானால் அது திமுக அதிமுக எனும் இரு திமிங்கில கட்சிகளும் இருக்கும் வரை நடக்காது

அம்பானி, அதானி, டாடா என்பவர்களின் தொழில் பெரிது. கப்பல் முதல் ஹெலிகாப்ட்ர் வரை என்னவெல்லாமோ அவர்களால் கட்ட முடிகின்றது

தமிழன் “மான்டா மயிலாட” “பிக் பாஸ்” “அறிவாலய கனவுகள்” “விஜயண்ணா” “திராவிடம்” “தமிழ் தேசியம்” என ஏக கனவில் இருப்பதால் அவனுக்கு இதெல்லாம் புரியாது

புரிந்து கொள்வதற்கு தெளிவும் அறிவும் வேண்டும், அதை திராவிட கட்சிகள் கொடுக்காது

மாறாக சும்மா அம்பானி, அதானி, கார்பரேட்டுகள் என கத்திகொண்டே இருப்பார்கள். அப்படி கத்துபவர்களின் பத்திரிகை டிவியில் கார்பரேட் கம்பெனிகளின் விளம்பரம் வரும் அதில் சம்பாதிப்பார்கள் என்பதையெல்லாம் தமிழன் கண்டுகொள்ள மாட்டான் அல்லது புரியாது

இப்பொழுது அரசுடன் சேர்ந்து கார்பரேட்டுகளும் அம்பானியும் டாட்டாவுமே நாட்டு மக்களுக்கு உதவி கொண்டிருக்கின்றார்கள்

இங்கு எந்த பணக்காரனும் மக்கள் இன்றி இயங்க முடியாது, எல்லா பணத்தையும் அவன் சுமந்து செல்லவு முடியாது, டாடா சொன்னபடி எந்த சமூகத்திடம் இருந்து பெறுகின்றோமோ அதே சமூகத்துக்கு திருப்பி கொடுக்காவிட்டால் நிலைக்க முடியாது

இதுதான் இப்பொழுது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது, மக்களிடம் இருந்து பெற்றதை மக்களுக்கே திரும்ப கொடுத்து உயிர்காத்து கொண்டிருக்கின்றார்கள்

இதனை புரிந்து கொள்ள முடிபவன் புரிந்து கொள்ளட்டும், முடியாதவன் வழக்கம் போல் ஏதாவது பேசிகொண்டே இருக்கட்டும் ஆனால் அவனால் யாருக்கும் எதுவும் செய்யமுடியாது, அவனால் சல்லிக்கு பிரயோசனமில்லை என்பதுதான் நிஜம்

1 COMMENT

  1. நீ எதை எங்கிருந்து எடுத்தாயோ அதை அங்கேயே தான் விட்டு விட வேண்டும். என்ன கொண்டு வந்தாய்? கொண்டு செல்ல என்கிற கீதை உபதேசத்தை அவர்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பிடுங்குகிறவர்களுக்கு புரியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here