ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கோவிட் சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது

22

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கோவிட் சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கோவிட் பெருந்தொற்றுக்கு சித்த மருத்துவ நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் வியப்பூட்டும் வகையில் பலன் அளித்து வருகின்றன. இதையடுத்து, அரசு சார்பிலேயே சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகின்றன.

இந்நிலையில்,கோவையில்,கொங்கன் சித்தர் மருத்துவமனை மற்றும் சாய்கிராம் ஆயுர்வேத மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆயுஷ் கோவிட் சிகிச்சை மையத்தை துவங்கியுள்ளனர். இதற்கான துவக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் ஆச்சிஜன் ஆதரவுக் கருவிகள், படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுடன் இம்மையம் செயல்பட உள்ளதாக, கொங்கன் சித்தர் மருத்துவமனையின் நிறுவனர் பண்டிட். ஸ்டீஃபன் சந்திரசேகரன் தெரிவித்தார்.

விழாவில் சித்தா மருத்துவர்கள் தீனதயாளன், ஸ்ரீனிவாசன், சதீஷ்குமார், போஸ் பிரியன், சுபாஷினி மற்றும் சாய்கிராம் மருத்துவமனையின் தலைவர் ரவீந்திரன் சி.இ.ஓ.ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here