இதுவா உண்மையான மதசார்பின்மை?

38
mamta



மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் இந்திய மதச்சார்பின்மை முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.அப்பாஸ் சித்திக்கி என்ற தீவிர முஸ்லீம் மதவாதியின் கட்சி தான் இது. இந்தியாவில் குறைந்தது 40 முதல் 50 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பரவவேண்டும் என்று பகிரங்கமாக பேசியவர் இவர். இவருடன் கூட்டணி வைத்திருப்பது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிரானது, மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஆனால் அதையெல்லாம் காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தவில்லை. கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் தீவிர முஸ்லீம் மதவாத கட்சிகளுடன் ஏற்கனவே கூட்டணியில் சேர்த்திருக்கிறது. ஏன் தீவிர மதவாதியான அசாவுதீன் ஓவைசியுடனேயே 2012 ம் ஆண்டில் கூட்டணி வைத்து ஓவைசியை மதச்சார்பற்ற தலைவராக காட்டியது தான் காங்கிரஸ் கட்சி. தன்னால் தானாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் ஓவைசி கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார்.

ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸின் மதச்சார்பின்மை கொள்கை அவ்வப்போது புது அவதாரம் எடுக்கும் என்பது அறிந்ததே. தீவிர இந்துத்துவா கட்சியான சிவசேனா 2019 ல் மதச்சார்பற்ற கட்சியாக மாறியது.

நம்நாட்டில் உண்மையான மதசார்பின்மை என்ற ஒன்று இல்லவே இல்லை, உண்மையாகவே ஒரு கட்சி மதசார்பற்று உண்டு என்று கூறும் நிலையும் இதுவரை வரவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வை சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பலவகையில் உருவாக்கி வந்துள்ளன. சிறுபான்மையினரை தங்களுடைய ஓட்டுவங்கியாக மாற்றிக் கொள்ள வசதியாக இந்த சதி செய்யப்பட்டு வருகிறது.

1947க்கு முன்னர், இந்திய முஸ்லீம்கள் முகமது அலி ஜின்னாவுக்கு வாக்களித்தனர். 1947க்கு பிறகு, இவர்கள் மாநில கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் வாக்களித்தனர். மதச்சார்பின்மை என்ற போலி கோஷத்திற்குள் தீவிர முஸ்லீம்கள் புகுந்து தற்போது புதிய ஜின்னாக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகி வருகின்றனர்.

2004 ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை சோனியாகாந்தி வழிநடத்த தொடங்கியதிலிருந்தே சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கு அதிகரித்தது. அனைத்து வளங்களிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற நிலைப்பாடை எடுத்த மன்மோகன்சிங், மக்களின் எதிர்ப்பு கண்டு, சத்தமில்லாமல் பின் வாங்கினார்.

அதற்கு பிறகு, கல்வி உரிமை சட்டம் முதல் வகுப்புவாத வன்முறை சட்டம் வரை என அனைத்து மசோதாக்களும் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேண்டுமென்றே கொண்டு வந்தது. பெரும்பான்மை பிரிவினருக்கு ஒரு நியாயம், சிறுபான்மை பிரிவினருக்கு ஒரு நியாயம் என சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி பிரிவினைவாதம் ஏற்பட்டது.

நம் நாட்டில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை ‘இந்து மதச்சார்பின்மை அல்லது இந்துக்களுக்கு எதிரான நிலை’ என்ற பதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் உண்மையாகவே ஒரு மதசார்பற்ற கட்சியாக இருந்திருந்தால், இந்துக்கள் உரிமையை இழந்து பா.ஜ.க பக்கம் சாய்ந்திருக்க மாட்டார்கள்.

மதசார்பின்மை என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்கிறார்கள். இந்தியாவில் மதசார்பின்மை என்பது சிறுபான்மை அரசியலை ஊக்குவிப்பதற்கான ஒரு குறியீடாக மட்டுமே இருந்து வருகிறது. இதனால் இதுவரை இந்தியாவிற்கு எந்த நன்மையும் உண்டானதில்லை மாறாக மக்களிடையே பிளவையே ஏற்படுத்தியுள்ளது.

  • ஸ்வாராஜ்யா

அகில இந்திய அளவில் போலி மதச்சார்பின்மை பேசுவதைப்போலவே தமிழகத்திலும் திமுக, அதிமுக கட்சிகள் முஸ்லீம் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. தீவிர முஸ்லீம் மதவாத கட்சியான மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் நிரந்தர இடம் உண்டு. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம் பங்கு இருக்க வேண்டும் என்று கருதும் முஸ்லீம் மதவாத கட்சிகள், இரு கூட்டணியிலும் இடம் பிடித்துவிடுகின்றன. கடந்த முறை தமீமுன் அன்சாரி அதிமுக கூட்டணியில் எம்எல்ஏ ஆனது இப்படித்தான். இதையெல்லாம் தாண்டி தேசிய அளவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள எஸ்டிபிஐ கட்சியை அமமுக தினகரன் கூட்டணியில் சேர்த்து வருகிறார். திருமாவளவன் போன்றவர்கள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லீம்களை வைத்து இந்து மதத்தை விமர்சனம் செய்து மதச்சார்பற்றவர்களாக காட்டிக் கொள்கின்றனர். தமிழகத்தில் இந்து மத எதிர்ப்பே மதச்சார்பின்மை என்று உருவாக்கப்பட்டுள்ளது.

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here