இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 3,57,229: மொத்த பாதிப்பு 2 கோடியை கடந்தது

1

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 2,02,82,833ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

”இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,02,82,833ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 1,66,13,292 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,57,229 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 34,47,133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,22,408 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 15,89,32,921பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here