இந்தியாவில் முதன்முறையாக-லேசர் சேனிடைசர்

கோவை, நவம்பர்28:

புற ஊதா ஒளியைக் கொண்டு கிருமிகளை அழிக்கும் கையடக்க லேசர் சேனிடைசர் கருவியை உருவாக்கியுள்ளது கோவையை சேர்ந்த ஒரு தனியார் நிருவனம்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கவிக்குமார் கந்தசாமி. ‘மை’ என்ற தனியார் நிருவனத்தினை நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தில் கையடக்க வடிவிலான புற ஊதா கதிர் கிருமினாசினியை தயாரித்துள்ளார்.

தற்போது கொரனா வைரஸ் பரவல் காரணமாக முக கவசம், கிருமினாசினிகளின் பயன்பாடு என்பது நம்மிடையே அதிகரித்து வருகிறது.

புற ஊதா கதிர்களைக் கொண்டு கிருமிகளை அழிக்கக்கூடிய கையடக்க கிருமினாசினியை முற்றிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக தனது நிருவனம் தயாரித்துள்ளதாக கூறுமகிறார் கவிக்குமார். இக் கருவியைக் கொண்டு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான கைபேசி, சாவி, பேனா, ரிமோட், மடிக்கணினி, கதவுகளில் கைபிடி மட்டுமல்லாது உணவுகளிலன் மீதும் இந்த புற ஊதா கதிர் பாய்ச்சி கிருமினாசினியாகப் பயன்படுத்த முடியும்.

மேலும் புற ஊதா கதிர்கள் நம் வெளிப்புற தோல் பகுதி மற்றும் உள் உருப்புகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்பாடுத்தாத வன்னம் சென்சார் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்காப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இக் கருவி குருகிய காலத்திலேயே இதுவரை 2000 விற்பனையாகியுள்ளது. இதுதவிர மேலும் 7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும். அது தவிர 14 நாடுகள் இவருடன் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக் கருவியை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி அரசுத்துறையினருக்கு வழங்குவது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் கவிக்குமார்.

இது தவிர 6 மாதம் உபயோகிக்க கூடிய முக கவசம் (மாஸ்க்) ஆக்டிவெட்டட் கார்பனை பயன்பத்தி உருவாக்கியுள்ளது இந்த நிறுவனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here