இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13-ஆம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் எந்தவொரு வீரர்களும் இந்திய அணியில் விளையாடமாட்டார்கள். மிக முக்கியமாக கேப்டன் கோலி தலைமை தாங்கமாட்டார். அதேபோல இலங்கை செல்ல இருக்கும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிகிறது.
அதன்படி இந்தியா – இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25 தேதிகளில் நடைபெற இருப்பதாக போட்டிகளை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.