இந்தியா ஒரு ஹிந்து நாடு… தேவாரம் பாடி பெற்ற சுதந்திரம்

இந்தியா ஒரு இந்து நாடு என்பதில் வெள்ளையன் மிக சரியாக இருந்தான், அதுவும் பாகிஸ்தான் என ஒரு இஸ்லாமிய தேசம் உருவாக்கபட்டபின் இது இந்து நாடு என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை

1947ல் இதே நாளில் அதாவது ஆகஸ்டு 14ம் தேதி பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் அவர்கள் மார்க்க நெறி சொன்னபடி மலர்ந்தது, அதில் அர்த்தமும் இருந்தது. இஸ்லாமிய நாட்டின் பிறப்பு அவர்கள் மார்க்க வழியில்தான் நடக்க வேண்டும் அப்படித்தான் நடந்தது

இப்பக்கம் இந்தியாவின் அதிகாரமாற்றம் ஆகஸ்டு 15ம் நாள் நடந்தாக வேண்டும், வெள்ளையனான மவுண்ட்பேட்டன் இந்து முறைப்படி ஆட்சி மாற்றம் நடக்க நேருவுக்கு ஆலோசனை சொன்னான்

ஆம் வெள்ளையன் நேருவுக்கு அந்த நல்ல விஷயத்தை சொன்னான், இது இந்து தேசம் என்பது அவனின் சரியான நம்பிக்கை. ஆத்திரகரான நேரு விஷயத்தை ராஜாஜியிடம் விட்டுவிட்டார்.

ராஜாஜி தேர்ந்த ஞானி , திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு டெல்லிக்கு அழைத்தார்

திருவாடுதுறை ஆதீனமே செங்கோல் மாறும் நிகழ்வினை நடத்தி வைத்தது

அப்பொழுது திருஞான சம்பந்தரின் தேவார வரிகள் ஓதபட்டன‌

திருநனிப்பள்ளி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்

“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து
இன் இசையால் உரைத்த பனுவல்,
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே “

என்றும்.

திருவேதிக்குடி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்

“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்-
வெய்தி இமையோர் அந்தவுலகெய்தி
அரசாளும் அதுவே சரதம்
ஆணை நமதே”

கோளறுபதிகத்தில் இருந்து இந்த வரிகளும்

“தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”

என ஓதப்பட்டன‌

ஆம், மும்முறை ” அரசாள்வார் ஆணை நமதே” என உரக்க சொன்னபடி செங்கொல் கைமாறி ஆட்சி இந்தியாவிடம் ஒப்ப்படைக்கபட்டது

எவ்வளவு பெருமை இது? எவ்வளவு அர்த்தமான வரி இது?

“அரசாள்வார் ஆணை நமதே” என டெல்லியில் உரக்க தமிழில் பாடபட அதன் அர்த்தம் இதர மொழிகளில் சொல்லபட மிக உருக்கமான நெகிழ்ச்சி கண்ணீர் அங்கே பெருகிற்று

வெள்ளையனே அந்த அர்த்தம் கண்டு புன்னகை சிந்தினான்

ஆம், இப்படி இந்து முறைபடி தமிழ் தேவாரம் பாடித்தான் “அரசாளும் ஆணை நமதே” என்ற திருஞான சம்பந்தரின் வார்த்தையோடுதான் சுதந்திரம் பெற்றோம்

இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, டெல்லி மியூசியத்திலும் உண்டு

இப்படியெல்லாம் தமிழ் இந்து டெல்லிவரை கோலோச்சி, தமிழ் தேவாரம் பாட பெற்ற சுதந்திரம் இது “அரசாள்வார் ஆணை நமதே” என சொல்லி விடுதலை பெற்ற தேசமிது

ஆனால் தமிழனிடம் கேளுங்கள், அவனுக்கு இதெல்லாம் தெரியாது மாறாக சென்னை கோட்டையில் தேசிய கொடியினை ஏற்றும் உரிமையினை பெற்று தந்தவர் கருணாநிதி என கண்ணீர் வடிப்பான்

அவர் திராவிடவாதி, பல இடங்களில் பிரிவினை பேசியவர். அவருக்கு ஏன் தேசியகொடி ஏற்றுவதில் அவ்வளவு ஆர்வம் என்றால் அதுதான் “டிரவிடியன் ஸ்டோக்”

அவர்களை விடுங்கள், அந்த நாடக கம்பெனி அப்படித்தான்

சுதந்திர நாளை ஒவ்வொரு தமிழக இந்தியனும் “அரசாள்வார் ஆணை நமதே” என சம்பந்தர் வார்த்தையால் வரவ்வேற்று கொண்டாட வேண்டும்

உரக்க சொல்வோம், உற்சாகமாக சொல்வோம், இந்நாளில் அந்த தேவார வார்த்தையினை வாய்நிறைய சொல்லி நாட்டின் திருநாளை வரவேற்போம்

“அரசாள்வார் ஆணை நமதே”
“அரசாள்வார் ஆணை நமதே”
“அரசாள்வார் ஆணை நமதே”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here