நாடு எதிர்கொள்ளும் சர்வதேச தரத்திற்கு இணையான தொழில்நுட்ப பிரச்னைக்கு தீர்வு வழங்க இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாரத பிரதமர் மோடி.
தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் 23வது பெங்களூர் தொழில்நுட்ப மாநாட்டில் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் டெல்லியில் இருந்தபடியே பங்கேற்ற பிரதமர் மோடி தனது உரையின் போது, பாஜக ஆட்சியில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் பல்வேறு துறைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு தகவல்களை ஹேக் செய்யும் முயற்சிகள் நடந்துவருகிறது. ராணுவ கண்டுபிடிப்புகள், மருத்துவ ஆராய்ச்சி குறிப்பாக கொரானா தடுப்பூசி, செயற்கைகோள், ஏவுகனைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை திருட சில நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.
கணினி வாயிலாக புதிய வைரஸை பரப்பி தகவல்களை திருடுவது போன்ற பிரச்னைகளை சர்வதேச நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. நம் இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவு சர்வதேச அளவில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் உள்ளதே இதற்கு காரணம் இந்திய இளைஞர்களுக்கு நுண்ணறிவு மிகவும் அதிகம் என்று பாராட்டினார்.
இந்திய இளைஞர்களுக்கு அதிகமாவே இருக்கு..!
0