இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதங்களில் அச்சடிக்கப்படாத பட்ஜெட் !

பட்ஜெட்

காகிதங்களில் அச்சடிக்கப்படாத பட்ஜெட் இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, உரை விபரங்கள் காகிதங்களில் அச்சடிக்கப்படாத பட்ஜெட், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது .

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், வரும், 29ல், ஜனாதிபதி உரையுடன் துவங்குகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம், 1ம் தேதி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடரை பாதுகாப்பாக நடத்தும் பணிகளில், பார்லி., ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஊழியர்கள், தொலைபேசி வாயிலாக, எம்.பி.,க்களை தொடர்பு கொண்டு, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, எம்.பி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத் தொடர் துவங்குவதற்கு, 24 மணி நேரத்திற்கு முன்னதாக, டில்லியில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட, எம்.பி.,க்கள், அதற்கான சான்றிதழை கட்டாயம் எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத எம்.பி.,க்களுக்கு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, கட்டாயமாக தடுப்பூசி செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.,க்கள், கூட்டத்தொடரில் பங்கேற்க தயங்குவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, 60 வயதுக்கு மேற்பட்ட, 18 எம்.பி.,க்கள் உள்ளனர்.இவர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதை தவிர்க்க நினைப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த, காங்., – எம்.பி., வசந்தகுமார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததும், மூத்த எம்.பி.,க்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பார்லி., வளாகம் முழுதும், தினமும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த பணியை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கவனித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here