இந்து விரோத திமுகவும்! அதன் கூட்டணி கட்சிகளும்!

75

திமுக மற்றும் அதன் தாய் அமைப்பாக காட்டிக் கொள்ளும் திராவிடர் கழகம், முழுக்க முழுக்க ஹிந்து விரோத போக்கை மட்டுமே, மூலதனமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

திமுக என்ற அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கு பிறகு, இந்து விரோத போக்கு, மிக நுண்ணிய அளவில், மக்களிடையே விஷ விதையை விதைத்து பலன் அடைந்தது.

கோவில் சொத்துகள் பராமரிப்பின்றி பாழடைந்து போயின. கோவில் நிலங்கள் ஆக்கிரமித்து மற்றும் வருமானங்களை சீர்குலைந்து, கோயில்களின் செல்வங்களை சூறையாடும் வேலையை செய்தனர்!
திராவிட கழக நிறுவனர் ஈ. வே. ராமசாமி, இந்து தெய்வங்களை, கேலியும், கிண்டலும் பேசி, “இந்துக்களை மற்றும் தமிழனை காட்டுமிராண்டி”, “தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி” என்றும், ஸ்ரீராமரை அவமதிக்கும் போராட்டம் செய்து, இந்து விரோத போக்கினை வெட்ட வெளிச்சமாக செய்தார்.

இதன் மூலமாகவே, இன்றைக்கு, திமுகவுடன் பயணிக்கின்ற அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், கருப்பர் கூட்டம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பலர் உருவாகி உள்ளனர். மத சார்புள்ள இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள், எஸ்.ரா சற்குணம் போன்ற பாதிரியார்கள், ஆளூர் ஷா நவாஸ், தமிமுன் அன்சாரி போன்ற மதப் பற்றுள்ள அரசியல் கட்சி நடத்தும் தலைவர்கள், திமுகவின் கூட்டணியாக ஓரணியில் நின்று, இந்து விரோத போக்கை ஓரணியாக முன்னின்று நடத்துகின்றது. ஆனால் இன்று, திமுக, நாங்கள் இந்து விரோத போக்கை கடைபிடிக்கவில்லை என்று வாய் கூசாமல் பொய் பேசுகிறது.

ஈ.வே.ராமசாமி, அதன் பிறகு வந்த அண்ணாதுரை மீனாட்சி அம்மனை “கள்ளி” என்று கேவலமாக பேசியது, கருணாநிதி “ஸ்ரீரங்கநாதரை பீரங்கி வைத்து தகர்க்கும் காலம் எப்போது வரும்” என்ற பேச்சு, “இந்துக்கள் என்றால் திருடர்கள்” என்று கூறியது, ராமரை, இராம சேது பாலத்தை மேற்கோள்காட்டி “ராமர் என்ன என்ஜினியரா?” என்று கேலி பேசியது, அரசியல் லாபத்திற்காக ஹிந்து வாழ்க்கை முறையை, சனாதன தர்மத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை கேலியும், கிண்டலும் பேசுகின்ற இவ்வாறான சுய சிந்தனையற்ற தலைவர்களின் இந்தப் போக்கை, இந்து விரோத நடவடிக்கைகளை, இந்துக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், இந்து திருமண முறையை மாற்று மத திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தரம் தாழ்த்திப் பேசியது, “இந்து என்றாலே எரிகிறது” என்றும், “சமஸ்கிருத மந்திரங்களில் உடல் நடுங்கும் பொருள் இருப்பதாக” அறியாமையில் பிதற்றியது, கனிமொழி, உதயநிதி போன்றவர்கள் பிள்ளையாரைப் பற்றியும், திருப்பதி கோவில் பற்றியும், அநாகரிக முறையில் பேசியது போன்றவற்றை மக்கள் மறந்து விடவில்லை.

திருமாவளவன் போன்றவர்கள் பொதுக் கூட்டங்களில் பேசும் போது மிகவும் தரம் தாழ்ந்த முறையில், இந்துக்களையும், இந்து வாழ்க்கை முறையையும் கேவலமாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்மையில் தேவாலயம், மசூதி போன்றவற்றை கூறி வருகையில் கோயில்களைப் பற்றி கூறும் போது, “ஆபாசம் நிறைந்த பொம்மைகள் இருந்தால், அது இந்து ஆலயம்” என்று பேசியது, இந்துக்களின் மனதை வெகுவாக புண்படுத்தியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த, ஆளுர் ஷா நவாஸ், தமிழர்கள் போற்றிக் கொண்டாடும், தைப் பொங்கல் பண்டிகையை, விமர்சனம் செய்தது நமக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். அவருக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பும் வழங்கி இருக்கின்றது.

பல பேட்டிகள் தரும் போது, தான் ஒரு இந்து என்றும், கிறிஸ்தவர் என்றும், ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதாகவும், மாறி, மாறி பேசி, திருமாவளவன், மதம் மாறியாக காட்டிக் கொள்கிறார். இவரை போன்ற போலி கொள்கையாளர்களை, மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்துக்கள் இவரை போன்ற போலிகளை ஒதுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டங்களில் ராமர் கோவில், ராம சேது, கைலாஷ் யாத்திரை, சபரி மலை தரிசனம், திருப்பதி மலையேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் மேலும், மேலும் தழைப்பதை பார்க்கும் போது, இந்த போலியான மதசார்பு, வெகு விரைவிலேயே கிழித்து எறியப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும், தங்களை மதச் சார்பற்ற அணி என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால், திமுக கூட்டணியில், மதங்களை முன்னிறுத்தி செயல்படும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் அரசியலில் போட்டியிடுகின்றன. தங்கள் கட்சியிலேயே, மதத்தின் பெயரை வைத்துக் கொண்டு, மேலும், அதையே பிரதானமாக கொண்டு இயங்கும், இது போன்ற கட்சிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, தங்களை மதச் சார்பற்ற இயக்கம் என்று கூறிக் கொள்வதில் இயல்பாகவே அவர்களின் அறியாமை மற்றும் மக்களை முட்டாளாக்கும் செயல் கண் கூடாகத் தெரிகிறது.

டிசம்பர் 20, 2020 அன்று, கு. இனிகோ இருதயராஜ் தலைமையில் “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்” நடத்திய, அனைத்து மதம் தலைவர்களும் கலந்து கொண்ட “ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்” நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் மேடையில் அமர்ந்து இருந்து, முழு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார். இது போல, ஏதேனும் ஒரு இந்து மத பண்டிகைக்காவது வந்து இருக்கின்றாரா? இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி இருக்கின்றாரா? சொல்லிய வாழ்த்தை திரும்பப் பெற்றார் என இந்துக்கள், திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர் .

கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய கு இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு, சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட வாய்ப்பு வழங்கி, திமுக அழகு பார்க்கின்றது.

கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக இருந்து, அவர்களுக்கு பின்வாசல் வழியாக உதவியும் செய்து, அவர்களை வெளியே கொண்டு வர முயற்சி எடுத்தனர் என, தமிழக மக்கள் மத்தியில், திமுக மீது மிகுந்த கோபம் காணப் படுகின்றது.

மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமலஹாசன் அவர்கள், பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு ஹிந்து‘ என இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசினார். சில சந்தர்ப்பங்களில், ‘தான் ஒரு கிறிஸ்துவர்‘ என்றும் பேசிய காணொளி, சமூக வலைத் தளங்களில் உலா வந்து கொண்டு இருக்கின்றது. ஒரு பக்கம் குழப்பத்தையும், மறு பக்கம் இந்துக்கள் மத்தியில் அச்சத்தையும், கமலின் பிரிவினை பேச்சுக்கள் ஏற்படுத்தி வருகின்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முருகப்பெருமானுக்கு, ஒரு புது அடையாளத்தை உருவாக்கி உள்ளார். காலங்காலமாக நாம் அனைவரும் வணங்கி வரும் முருகரைப் போல் அல்லாமல், வேறு ஒரு புதிய வடிவத்தில், ஒரு புதிய கோணத்தில், முருகரை உருவாக்கி, ‘அவர் தான் முருகர்‘ என மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார். இந்து மதம் சம்பந்தமாக, சீமான் பேசிய பழைய காணொளிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. அதுவும் சமூக வலைத் தளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்து மதத்திற்கு அநீதி ஏற்பட்டால், அதை முன் நின்று தீர்க்க நினைக்கும், சரியான நபர்களுக்கு, நாம் நமது வாக்கை அளிக்க வேண்டும். நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும், நம்மை நேசிப்பவர்களுக்கும், நம்மை காப்பவர்களுக்காகம் மட்டுமே இருக்க வேண்டும்.

நமது ஓட்டு… நமக்கு கிடைத்த… வலிமையான ஆயுதம்…
அதை முறையாக பயன்படுத்தி, நல்ல வேட்பாளரை தேர்ந்து எடுத்து, நமது ஒற்றுமையை உலகறியச் செய்வோம்…

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே..
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே

+2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here