இனவெறி இங்கிலாந்து!

71

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவில் நடந்து வரும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க அனுமதிக்கும் போது, விரைவில் தம் நாட்டில் நடந்து வரும் இனவெறிக்கு எதிராக இந்திய பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்று இங்கிலாந்து அரசு எதிர்பார்த்திருக்காது.

ஆம் ராஷ்மிசமந்த் என்ற இந்திய வம்சாவளி பெண் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக கிளம்பிய இனவெறி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து இந்திய பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இனவெறியை பொருத்துக் கொள்ளமாட்டோம்… தேவைப்பட்டால் இதில் தலையிடுவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி நகரை பூர்வீகமாக கொண்ட ராஷ்மி சமந்த், தனது தேசியம், மதம், குடும்பம் பற்றிய உயர்வான எண்ணங்களை வெளியப்படுத்தியதால், அவருக்கு எதிராக திட்டமிட்டு கடுமையான விமர்சனங்களை வெள்ளையர்கள் வைத்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்வராஜ்யா இணைய இதழுக்கு அவர் அளித்த பேட்டி தமிழில்…

கேள்வி: நீங்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்தீர்கள்?

பதில்: எல்லோரும் நான் வென்றவுடன் என்னைப்பற்றி பேசுவதில் ஆர்வம் காட்டினர். ஆதரவு
இருந்தால் நிச்சயம் எதிர்ப்பும் இருக்கும். அப்படிப்பட்ட எதிர்ப்பால், என் வாழ்க்கையையும்,
குடும்பத்தையும், நண்பர்களையும் கேலி செய்தனர். என்னை மனதளவில்
கொடுமைப்படுத்தினால், நிச்சயம் ராஜினாமா செய்துவிடுவேன் என்பதை அவர்கள் முன்பே
அறிந்திருந்தனர்.

கே:நீங்கள் கூறிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா?
ப: இதற்கு முன்பு பல முறை எனது வார்த்தைகளால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை நான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை. அதற்கான தேவையும் இல்லை.

கே: நீங்கள் ‘முதல் இந்தியப்பெண்’ என்ற வார்த்தையை கூறியபோது, ‘இந்து’ என்ற வார்த்தைக்கு
முக்கியத்துவம் கொடுத்து பேசியதாக கண்டனம் எழுந்துள்ளதே?

ப: ஆரோக்கியமான வாதத்தின் மூலமாக ஒரு மாற்றத்தை கொண்டுவரவே நான் முயன்றேன்.
அதற்கு அவர்கள் இடமளிக்க விரும்பவில்லை என்றால், அதை பற்றி சொல்வதற்கும்
இனிமேல் எதுவுமில்லை.

கே: நீங்கள் ராஜினாமா செய்ய எடுத்த இந்த முடிவுக்கு முன்னால் எத்தகைய பாதிப்பை
சந்தித்தீர்கள்?

ப: நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இணையவாசிகள் என்னை
மனதளவில் துன்புறுத்தவே தனிமையில் இருப்பது போல் உணர்ந்தேன், கவலைப்பட்டேன்.
எனது சுயசிந்தனையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக நான் இப்படியொரு
முடிவையும் எடுத்தேன்.

கே: பிரவுன் தேசி என்று விமர்சித்துள்ளனரே?

ப:ஆசிரிய குழுவால் என் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, எந்த மாணவரும்
கவலைப்பட்டதாக தெரியவில்லை. எனக்கு இந்த விஷயத்தில் எவ்வளவு ஆதரவு
கிடைக்குமெனவும், பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுக்குமெனவும் கூட எனக்கு
தெரியவில்லை.

கே: இந்த விபரீதத்தில் பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு தான் என்ன? இதனால் உங்கள்
படிப்புக்கு பாதிப்பு ஏற்படுமா?

ப:இன்ஜினியரிங் சைன்ஸ் டிபார்ட்மென்ட் இது போன்ற சூழலை ஏற்காது. சூழல் சார்ந்த
முழு ஆதரவையும் அளிப்பார்கள். அவர்கள் சிறந்தவர்களும் கூட. ஆனால், வேறொரு
துறையை சார்ந்தவர்களால் ஏற்பட்ட விபரீதத்துக்கு இதுவரை பல்கலைக்கழகம் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கே: இது போன்ற சிக்கலை எந்த நிறுவனமானது சட்டபூர்வமாக அணுகியுள்ளதா?

ப: இதுவரை இல்லை,

கே: கடைசியாக ஒரு கேள்வி, இந்து என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ப: என்னை பொறுத்தவரை, இந்து மதம் என்பது வாழ்வியல் முறை. இது தான் என்
அடையாளத்தின் ஒரு பகுதி. நான் அதை பற்றி யோசிக்க தவறியதில்லை.
கலாச்சாரம், எந்தவொரு மாற்றத்தையும் திறமையாக தடுத்துள்ளது.

கருத்து சுதந்திரம் என்பது சூழலுக்கு தகுந்தாற்போல், யார் சொல்கிறார் என்பதை பொறுத்தே
பார்க்கப்படும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன!

+4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here