இறப்பிற்கு பிறகும் உதவும் ஈஷா!

83

ஒரு மனிதர் உயிருடன் இருக்கும் போது மட்டுமில்லாமல், அவர் உயிர் துறந்த பிறகும் அவரின் நல்வாழ்வுக்கு ஈஷா உதவி செய்கிறது.

நம் நாட்டில் பிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்துமே, ஏதாவது ஒரு வகையில் ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டதாகவே இருந்து வருகிறது. வேறு எந்த கலாச்சாரத்தில் இல்லாத வகையில் நாம் இறப்பிற்கான சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஏனென்றால், ஒருவர் உயிர் துறக்கும் போது எந்த மாதிரியான மனநிலையில் உயிர் துறக்கிறாரோ அந்த தன்மை இறப்பிற்கு பிறகு பல மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு, ஒருவர் உயிர் விடும் கடைசி சில ஷணங்களில் அச்சத்திலோ, பதற்றத்திலோ உயிர் துறந்தால், அது பல மடங்கு பெருகி அந்த உயிருக்கு துன்பத்தை விளைவிக்கும். சந்தோஷமாக உயிர் துறந்தால், அதுவும் பல மடங்கு அதிகரிக்கும். இதை தான் நாம் சொர்க்கம் என்றும், நரகம் என்றும் கூறுகிறோம்.

ஆகவே தான், இறப்பிற்கான சடங்குகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். தன்னை உணர்ந்த யோகிகளால் விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கப்பட்ட இந்த சடங்குகள் காலப் போக்கில் அதன் அறிவியல் தன்மையை இழந்து உறவினர்களுக்கு மனதளவில் ஆறுதல் தரும் வெற்று சடங்காக மாறி வருகிறது.

இதை உணர்ந்து தான், சத்குரு ஈஷா யோகா மையத்தில் ‘கால பைரவ கர்மா’ என்ற ஒரு ஆன்மீக செயல்முறையை உருவாக்கி இருக்கிறார். இது குறிப்பிட்ட பிரம்மாச்சாரிகளால் மிகுந்த அர்ப்பணிப்புடனும் புனித தன்மையுடனும் நடத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கோவை மற்றும் சென்னையில் சில மின் மயானங்களை ஈஷா தனது செலவில் பராமரித்து வருகிறது. அங்கு வேலை பார்க்கும் நபர்களுக்கு ஊதியம் வழங்குவது, சீருடை வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது.

கோவையில் இருக்கும் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்திற்கு சென்றால் அது சுடுகாடு என்ற நம்ப முடியாது. ஒரு அழகான தோட்டம் போல் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஈஷா பராமரிக்கும் சுடுகாடுகளில் வேலை பார்ப்பவர்களும் யாரும் மது அருந்தமாட்டார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெறமாட்டார்கள்.

முறையான பயிற்சியின் விளைவாக, இறந்தவர்களை மிகுந்த மரியாதையுடன் கையாள்வார்கள். ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடாகம்’ என்ற மந்திர உச்சாடனை ஒலித்து கொண்டே இருக்கும். அதுவே அந்த இடத்தில் ஒரு வித நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும். கூடுதலாக, அழகான கால பைரவர் சன்னிநிதியும் அங்கு இருக்கும்.

கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு, நேரம் கிடைத்தால் ஒரு முறை போய் பார்த்து வாருங்கள். சுடுகாட்டில் இருந்து தான் பலருக்கும் ஆன்மீக ஞானம் பிறந்திருக்கிறது. உங்களுக்கும் கூட பிறக்கலாம்.

(சத்குரு இறப்பு குறித்து பல ஆழமான விஷயங்களை மிக விரிவாகவும், தர்க்க ரீதியாகவும் பேசியுள்ளார். அந்த தகவல்கள் இப்போது ‘மரணம்’ என்ற தலைப்பில் தமிழிலும், ‘death’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் புத்தகமாக வெளிவந்துள்ளது)

0

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here