இலங்கையில் அஜித்தோவல்! அதிரடி இந்தியா!!

இலங்கையில் இந்தியாவின் நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றன, இலங்கையின் சில நகர்வுகள் இந்தியாவுக்கு அதிருப்தியினை கொடுத்தவகையில் களமிறக்கபட்டார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்
அதாவது ஜெய்சங்கரையும் தாண்டி அஜித்தோவாலை நேரடியாக களமிறக்கிவிட்டது மோடி அரசு, இது இலங்கைக்கான மிகபெரிய எச்சரிக்கை

கடந்த நவம்பர் மாதமே தோவல் சென்றுவந்த நிலையில் இப்பொழுது வேகமாக காட்சிகளை மாற்றுகின்றது இந்தியா
தோவல் இலங்கைக்கு நேரில் சென்று பல விஷயங்களை பேசினார், அதன் பின் இலங்கையின் போக்கில் மாற்றம் தெரிந்தது, இப்பொழுதெல்லாம் இலங்கை கனத்த அமைதி இந்நிலையில், இலங்கை விமானபடையின் 70ம் ஆண்டை முன்னிட்டு நடக்கும் விழாவில் இந்திய விமானபடையின் விமானங்கள் பங்கேற்க இருக்கின்றன.

இதற்கு இந்தியாவின் ஹெர்குலிஸ் ரக விமானங்களும், தாக்குதல் விமானங்களும், தேஜஸ் ரக விமானங்களும் அனுப்பபட்டு அங்கு நிறுத்தபட்டிருகின்றன. ஏன் விமான படை விழாவுக்கு ஹெர்குலிஸ் போன்ற ராணுவ போக்குவரத்து விமானமெல்லாம் செல்ல வேண்டும் என்பதில்தான் எச்சரிக்கை இருக்கின்றது.

இதோ பார், ஒரே நேரத்தில் பல டாங்கிகளையும் பல நூறு பாராசூட் வீரர்களையும் ஏற்றி செல்லும் விமானம் இது, இதோ பார் ஒரே நேரம் பல வகையான குண்டுகளை வீசி மறையும் விமானம் இது, நீர் எம் நண்பன் என்பதால் உங்களிடம் சொல்கின்றோம், வேறொன்றுமில்லை” என்பது போன்ற தந்திரமான மிரட்டல் இது.

இப்பொழுது கண்காட்சி என சென்றிருக்கும் இந்திய போர்விமானங்கள் இனி திரும்ப வருமா அல்லது அங்கேயே நின்று தொலைக்குமா எனும் வகையில் பரிதவிப்பில் இருக்கின்றது இலங்கை

இலங்கையில் அஜித்தோவால் களமிறக்கபட்டிருப்பது இந்தியாவின் பெரும் அதிரடியினை காட்டுகின்றது, இனி காட்சிகள் வேகமாக மாறலாம் இந்திரா காலத்துக்கு பின் மிக வலுவான முன்னெடுப்பினை மோடி அரசு லங்காபுரியில் செய்ய தொடங்கிவிட்டது, இது தேசபாதுகாப்புக்கு நல்லது என்பதால் மோடி அரசினை வாழ்த்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here