இலங்கையில் பாதிரியார்களின் பேரணி-பின்னணியில் உள்ள பயங்கரசதி!

இலங்கையில் சமீபத்தில் P2P பேரணியானது இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பொலிகண்டி வரை என சுருக்கமாக குறித்துள்ளார்கள். உண்மையில் பாதிரியார்கள் பொலிகண்டி வரை P2P என்பதுதான் உண்மையான பெயராக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் தங்களது ஏறக்குறைய 400 ஆண்டு கால காலனித்துவ ஆட்சியில் நூற்றுக்கணக்கான ஹிந்து ஆலயங்களை தரைமட்டமாக்கினார்.

திருக்கேதீச்சரம் என்னும் சிவ ஆலயத்தை சுவடு தெரியாமல் அழித்தனர். கீரிமலை சிவாலயத்தை அழித்தனர். இன்று மன்னாரில் உள்ள மடு சர்ச் என்பது கண்ணகி அம்மன் ஆலயத்தை அழித்தே அமைக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை சர்ச்சும் அம்மன் கோவில் மீது எழுப்பப்பட்டுள்ளது. அந்த சர்ச்சில் தான் சமீபத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. கிறிஸ்தவ காலனி ஆதிக்கத்தின் பிற்பகுதியில் ஆலய அழிப்பு போன்ற விஷயங்களைத் தவிர்த்து ஹிந்து சமயத்திற்கு எதிரான விமர்சனங்களையும் பொய்களையும் கட்டவிழ்த்தனர். மதமாற்றத்திற்கான இவர்களின் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆறுமுகநாவலர் என்னும் மகான் தனிமனிதராக சுக்குநூறாக உடைத்தார்.

காலனி ஆதிக்கம் நிறைவு பெற்ற போது மிஷனரிகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. புதிய சித்தாந்தங்களையும் தந்திரோபங்களையும் உருவாக்கினார்கள். நமது கைகளாலேயே நம்மை குத்தும் ஒரு கொடூரமான வஞ்சகத்தை அரங்கேற்ற துணிந்தார்கள். தம் கண்ணை தாமே குத்துபவர்கள் கூட யார் குத்த தூண்டுகிறீர்கள் என்பதை கூட அறிய விழையாத அறியாமைலேயே அவர்கள் வைத்திருப்பது தான் கிறிஸ்தவர்களின் பலே கில்லாடி வேலை.

இதற்கென பல அமைப்புகளை உருவாக்கினார்கள். இதில் குறிப்பாக உலக தமிழர் பேரவை. இதன் தலைவர் பெயர் பாதிரியார் இமானுவேல். ஜெர்மனியில் இருந்து இயங்கும் இவர் தான் ஆசியாவை கிறிஸ்தவ மயமாக்கல் என்ற திட்டத்தின் சூத்திரதாரி. இவர்கள் நன்கு படித்த ஹிந்து பெயர்களை கொண்ட ஹிந்து அடையாளங்களை கொண்டவர்கள் மூலமே தங்களது நகர்வுகளை மேற்கொள்வார்கள். இலங்கையில் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின் நிற்பதும் இவ்வமைப்பே. இலங்கையில் ஹிந்து ஆலயங்கள் அமைப்புகள் மாத்திரமல்ல.

சர்வதேச அளவில் பரவியுள்ள புலம்பெயர் தமிழர்களின் ஆலயங்களிலும் ஊடுருவி தங்களின் கருத்துருவாக்கங்களை செயல்படுத்துவதில் திறமையானவர்கள். இந்தியாவின் தமிழ்(ஹிந்து) அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாகவே சில பத்திரிக்கைகளும், அரசியல் தலைவர்களும் உணர்ச்சி வசத்தால் பெருத்த சிங்கள எதிர்ப்பை பிரதிபலிக்கின்றனர் . இது ஜெகத்கஸ்பர், எஸ்.ரா.சற்குணம் போன்றோரையும் ஹிந்து இயக்கங்களில் ஆலோசனை குழுவில் இணைப்பதை போன்றது.

இலங்கையில் தொடக்க பகுதியில் கடந்த கால சூழலில் மன்னார் என்ற சிவபூமி மறைமாவட்டமாகியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுநியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தில் 30 % ஹிந்துக்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

மிஷனரிகளின் இந்த நிகழ்ச்சி நிரலில் முக்கிய கருவிகளாக இருப்பது சிவில் சமூக அமைப்புகள், காணாமல் போனோர் அமைப்புகள், தமிழ் சங்கங்கள், சர்வசமய அமைப்புகள் ஆகியனவாகும். மேல் சொன்ன அத்தனை அமைப்புகளையும் பாதிரிகளே நடத்துகிறார்கள். ஆனால் இதன் மூலமாக பொது வெளியில் தெரிபவர்கள் உணர்வுமிக்க திருநீர் அணிந்த ஹிந்துக்களே ஆவார்கள். இது தான் கிறிஸ்தவர்களின் குள்ளநரித்தனம்.

இப்பொது நடைபெற்றுள்ள க2க பேரணி கிறிஸ்தவ மிஷனரிகள் இயக்கமான சிவில் சமூக அமைப்பு சார்பாகவே நடைபெற்றது. இதன் உள்நோக்கம் தமிழன் சிங்களர் இடையே எப்பொழுதும் பகை உணர்வு இருந்து கொன்டே இருக்க வேண்டும். எங்கு பகையும், போராட்டமும், பட்டினியும் இருக்கிறதோ அங்கு தான் மதமாற்றத்திற்கு சாதகமான சூழல் நிலவும் என்பது கிறிஸ்தவர்களின் செயல்முறை.

P2P போராட்டத்தினை பாதிரிகள் இயக்கினாலும் கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒருங்கிணைத்தாலும் இதன் வெளிப்புற தோற்றப்பாட்டின் முகமாக ஒரு ஹிந்து துறவியையே முன்னிறுத்தி பொம்மலாட்டம் ஆடினார்கள். இவர்களும் சூழ்ச்சியை அறியாமல் ஜனாதிபதியின் அரச குரு ஆனது போல் புளங்காகிதம் அடைந்தார்கள். பாதிரியர்களோடு இணைந்து சங்கிலிய மன்னன் ஆறுமுகநாவலர் ஆகியோரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டனர். மதமாற்றத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்தது தான் வஞ்சகத்தால் வீழ்ந்த எம் மக்கள் செய்த தொண்டு.

இந்த போராட்டத்தில் பேசிய செபமாலை என்ற பாதிரியார் இலங்கை சிங்கள பௌத்தர்களின் சொத்தா என கேள்வி கேட்டுள்ளார். இந்த போராட்டத்தில் வெளி வந்த இதுபோன்ற கருத்துக்கள் 70% பெரும்பான்மையாக உள்ள ஒவ்வொரு பௌத்த ஆலயங்களிலும் முருகன், விநாயகர், அம்மன், விஷ்ணுவை வைத்து வழிபடுகின்ற பௌத்தர்களை ஹிந்துக்களுக்கு எதிராக தூண்டும் ஒரு சூழ்ச்சி தான். இதே சமயம் இலங்கை பௌத்த நாடு என்று கிறிஸ்தவர்கள் இலங்கைக்கான பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் கொழும்புவில் கூறினார்.

ஹிந்துக்களிடையே பௌத்தர்களுக்கு எதிராக தமிழ் தேசிய உணர்வைத் தூண்டுவதும் சிங்கள மக்களிடையே
தமிழர்களுக்கு எதிரான துவேசத்தை விதைப்பதும் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல் திட்டம் என்தை எமது சமூகம் உணர வேண்டும்.

சிங்கள வெறுப்புணர்வை பரப்பிவிட்டு மன்னாரின் மடு ஆலயத்தில் சிங்கள ஆராதனையை செய்யும் பாதிரிகளின் சூழ்ச்சியை எமது மக்கள் உணர வேண்டும்.

P2P என்பது பாதிரிகளின் போராட்டமே என்பது எள்ளளவும் ஐயமில்லை.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here