இலங்கை இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறுமுக நாவலர்!

ஆறுமுக நாவலர் 18 டிசம்பர் 1822ஆம் ஆண்டில்; பிறந்தார். ஒரு வருடத்திற்கு பிறகு பாரதத்தில் தயானந்த  சரஸ்வதி பிறந்தார். நாவலர் – தயானந்தர் இருவரும் இந்து சமய மறுமலர்ச்சிக்கு பாடுபட்டனர். நாவலர்  1889 ம் வருடம் இறைபதம் அடைந்தார். தயானந்தர் 1883ஆம் வருடம் இயற்கை எய்தினார். இருவருமே  அவர்கள் காலத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட சாதனையாளர்கள். நாம் ஒன்றை தெரிந்து கொள்ள  வேண்டும் உலகில் முதல் இந்து மறுமலர்ச்சி இயக்கம் ஆறுமுக நாவலராலேயே ஆரம்பிக்கப்பட்டது. தயான ந்த சரஸ்வதியும் அதன் பிறகே இந்து மறுமலர்ச்சி பணியில் ஈடுபட்டார்.

அமரிக்க கிருஸ்துவ மிஷனரி மிகவும் தீவிரமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தனர். அவர்கள் இந்து  சமயத்தையும் சைவநெறியையும் இந்து கடவுளர்களையும் தாக்கி பிரசாரம் செய்தார்கள். அதற்கென பல  பிரசுரங்களையும் வெளியிட்டனர். ஆவர்கள் ’மார்னிங் ஸ்டார்’ என்ற பத்திரிக்கையையும் நடத்தினர். அந்த  பத்திரிக்கையில் இந்து சமயத்தை பற்றியும் இந்து கடவுளர்களை பற்றியும் தாக்கி எழுதினார்கள்.

இந்து சமயத்தில் தார்மீக கோட்பாடும் உண்மையான தத்துவங்களும் இல்லை. இந்துக்கள் பொய்யர்கள்;  சகோதர ஏழைகளுக்கு எதிரானவர்கள் என எழுதினார்கள். மார்னிங் ஸ்டார் இதழில் தொடர்ச்சியாக இந்துக்கள்  முக்தி அடைய வேண்டும் என்றால் ஏசுவிடம் செல்ல வேண்டும் என எழுதினார்கள். இந்துக்கள் ø பத்தியக்காரத்தமான சடங்குகளை கடைபிடித்து இருளில் வாழ்பவர்கள் என்றும் குறிப்பிட்டனர். நீங்கள் இ ந்துக்கள் உங்கள் கண்மூடித்தனமான இருள்மயமான சமயத்தை விடுத்து இயேசுவிடம் இரட்சிப்பிற்காக  வரவேண்டும் என்றும் எழுதினர். அவர்கள் அச்சமயத்தில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டனர். அவை  கிறிஸ்துவத்தின் இன்பத்துவம், இந்து மத கண்டனம் ஆகியன ஆகும். இப்புத்தகங்களில் சிவபெருமானைப்  பற்றியும் எமது பெண்தெய்வங்களைப் பற்றியும் மோசமாக எழுதினார்கள். இந்த சூழலில் நாவலர் கல்வி கற்று  மெதடிஸ்ட் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக சேர்ந்தார். பின் பைபிளை தமிழில் மொழிபெயர்த்து பிர பலமடைந்தார். ஆனால் கிருஸ்துவர்களின் நடவடிக்கையால் கவலையடைந்தார்.

1847 டிசம்பர் 18 இவரது இருபத்தைந்தாவது அகவையில் நாவலர் வண்ணார்பண்ணை சிவன்கோயிலில்  பிரச்சாரங்களையும் சொற்பொழிவுகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார். அச்சமயத்தில் கிருஸ்துவர்கள்  ஆறுமுகநாவலரின் பிரச்சாரத்தால் எதிர்கொள்ள நேரிடும் சவால்களை பற்றி எழுதினார். அதேசமயம்  கிருஸ்துவர்கள் இந்துக்களை கீழ்த்தரமாக விமர்சிப்பதால் தான் நாவலர் துணிச்சலோடு தமது சமயத்திற்காக  குரல்கொடுக்கிறார் என்ற கருத்தும் பரவியது. 14 வருடகால பணிக்கு பிறகு 1848ல் ஆசிரியர் பணியை  துறந்தார். தனது வாழ்வை முழுமையாக இந்து சமயத்தின் விழிப்புணர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் அர்ப் பணித்தார். தான் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்தார். இந்துக்கள் தங்கள் கிரந்த ங்கள், ஆகமங்கள், சாஸ்த்திரங்கள், வேதங்கள் பற்றிய அறியாமையில் இருப்பதை உணர்ந்தார். அதற்கென  சமஸ்கிருத மொழியை கற்றார். ஆங்கிலத்தில் புலமை பெற்றதைப்போல சமஸ்கிருதத்திலும் புலமைமிக்கவர்  ஆனார். ஒருவிஷயம் மிக முக்கியமானது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாவலர்  வாழ்ந்தார். ஆகவே திராவிட இயக்கங்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் சமஸ்கிருத முரண்பாடுகள் ஆறுமுக  நாவலர் காலத்தில் இல்லை. தமிழ் பழமையானதா சமஸ்கிருதம் பழமையானதா என்ற கேலியான விவாதம்  அப்போது இல்லை.

எப்படி மொழி ஆரம்பித்தது? பழங்காலத்தில் பல மொழி இலக்கணங்கள் இருந்தன. சைவப்த இலக்கணம்,  பாரஸ்பத இலக்கணம் என்ற பல வகைகள் இருந்தன. இன்று நாம் இந்துக்கள் பயன்படுத்தும் மொழிகள்  சைவப்த இலக்கணத்தை சார்ந்தது. இதன் வரலாறு என்ன? சிவனின் உடுக்கை ஒலியிலிருந்து எழுத்துக்கள்  உறுவெடுத்தன. ஹை உன், ரீன், ஹின் என தொடங்கும் எழுத்துக்கள் வந்தன. இந்த எழுத்துக்களை  மையமாக வைத்து இந்திரன் ஐந்திரம் என்ற ஒரு இலக்கணத்தை வகுத்தார். இதனை ஆதாரமாக வைத்து  பாணினி அக்காலத்தின் நவீன இலக்கணத்தை வரையறுத்தார். இதற்கு சமஸ்கிருத இலக்கணம் என்று ö பயர். அதே ஐந்திரத்தை வைத்து தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண வரையறையை  எழுதினார். இரண்டிற்க்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த இரு மொழிகளின் ஆதாரம் ஒன்றுதான்.  இந்த மொழிகளுக்கிடையில் எவ்வித முரண்பாடும் இல்லை. திராவிட இயக்கங்களும் கட்சிகளும் ஏற் படுத்தியுள்ள முரண்பாடான கருத்துக்கள் போலியானது. நாவலர் இதுபோன்ற பொய்யான கருத்துக்களால்  குழம்பவில்லை. அதனால் அவர் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நிபுணர் ஆனார். நாவலர் 1848 ஆம் ஆண்டு  ; வேத மற்றும் ஆகம பாடசாலையை நிறுவினார். சைவபிரகாச வித்யா சாலையைதத் தொடங்கினார். வேத  ஆகமங்களை இளைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இப்பாடசாலை  ஆரம்பிக்கப்பட்டது.

அக்காலத்தில் கிருஸ்துவர்களுக்கு அச்சகம் இருந்தது. இந்துக்களுக்கு அச்சக வசதியில்லை. அந்த அச் சகத்திலிருந்து தான் ‘மார்னிங் ஸ்டார்‘ அச்சிடப்பட்டது. 1849ம் ஆண்டு இந்துக்களுக்கு  அச்சகம் தேவை என்பதை நாவலர்  உணர்ந்தார். சென்னை சென்று அதற்குறிய ஏற்பாடுகளை செய்து அச் சகத்தை ஆரம்பித்தார். வித்யா அனுபாலன அச்சு இயந்திர சாலை இதன் பெயராகும். தொடர்ச்சியாக ö சாற்பொழிவுகளை நடத்தியதோடு அச்சகத்தில் பிரசுரித்த பிரசுரங்கள் மூலமாக இந்துசமயம்; நமதுகடவுள்,  பூஜை, சடங்குகள், சம்பிரதாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதே நேரத்தில்  கிருஸ்துவத்தின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் பிரசுரங்களையும் வெளியிட்டார். இது  கிருஸ்துவர்களுக்கு பெறும் சாவாலாக விளங்கியது. நாவலர் கிருஸ்துவர்களின் பொய் பிரசாரத்தை வெளுத்து  வாங்கினார். இவர் கிருஸ்து பாடசாலையில் கிருஸ்துவர்களை பற்றி தாக்கி பேசும் போது ஏனைய  கிருஸ்துவர்கள் பாடசாலை அதிபரிடம் புகார் செய்தனர்.

தமிழ் பண்டிதராக இருந்து கொண்டு இந்து சமயத்தை உயர்வாகவும் கிருஸ்துவத்தின் ÷ பாலித்தன்மைகளையும் வெளிப்படுத்தும் நாவலரின் பிரச்சாரங்களால் கிருஸ்துவர்கள் கலக்கமடைந்தனர்.  தொடர்ச்சியாக கிருஸ்துவர்களின் பொய் பிரசாரத்திற்கெதிரான நாவலரின் சொற்பொழிவுகளில் மக்கள் பெரு ந்திரளாக கலந்துகொண்டனர். இந்து சமுதாயத்திலிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. அந்த சமயத்தில்  இந்து சமுதாயத்திற்கு எதிராக கிருஸ்துவர்கள் பிரசுரித்த புத்தகங்களிற்கு எதிராக நூல்களை பிரசுரித்தார்.  குறிப்பாக இரு புத்தகங்களை வெளியிட்டார். ‘சைவ தூஷண பரிகாரம்‘ அதாவது சைவ நெறியை  கிருஸ்துவர்கள் இகழ்ந்ததற்கு எதிராக வெளியிடப்பட்டது. மற்றொன்று ‘சைவப்பிரகாசம்‘ எனும் நூல். அந்த  சமயத்தில் ஒரு சொற்பொழிவில், சிவனை தூஷிக்கும் கிருஸ்துவர்களை எதிர்ப்பது நமது  கடைமை. அதெ போல் கிருஸ்துவத்தின் பிச்ச்சாரங்களை முறியடிப்பதும் இந்து சமயத்தை நிலை  நிறுத்துவதும் நமது கடமை என்றார். அவர் இந்து சமுதாயத்திற்கு முன் ஏழு விதமான விஷயங்களை முன்  வைத்தார்.

1. அனைவரும் இறைவன் சிவனை வழிபடவேண்டும்.

2. ஒவ்வொறு இந்துவும் ஏனைய துயரப்படும் இந்துக்களுக்கு உதவ வேண்டும்.

3. தனது நூல்களை வாங்கி கவனமாக கற்று அதை ஏனையோருக்கும் விநியோகிக்க வேண்டும்.

4. இந்த நூல்களை கற்று கிருஸ்துவத்தின் பொய்யான தன்மை பற்றி விளக்க வேண்டும். ஏனையோர்கள்  கிருஸ்துவ சூழ்ச்சிக்கு இரையாகாமல் இருக்கவும் செய்ய வேண்டும்.

5. எங்கெல்லாம் கிருஸ்துவர்கள் சிவனை இகழ்கின்றனறோ அங்கு எதிர்த்து நில். எக்காரணம் கொண்டும்  பெறுந்தன்மையோடும் தயவோடும் இருக்காதே. எதிர்த்து நின்று அவர்களின் கருத்துக்கு தக்க பதிலடி  கொடு, அவர்களின் பொய் பிரச்சாரத்தை கண்டனம் செய். சிவனை இகழும் போது எதிர்த்து நின்று கண்டித்து  அவர்கள் வாயை அடைத்து வெளியேற்று.

6. இந்துக்கள் தங்கள் பிள்ளைகளை கிருஸ்துவ வலையில் வீழாமல் தங்கள் சமயத்தை சரியாக கற்பிக்க  வேண்டும். ஆகமம் கடவுள்கள் பற்றி விளக்க வேண்டும்.

7. உயர்ந்த அறிவுடன் சைவ பிரச்சாரகர்களை உருவாக்க வேண்டும். இந்து பிள்ளைகளை வழிநடத்த  வேண்டும்.

பாடசாலைகளில் கல்விக்காக கிருஸ்துவர்கள் கட்டணம் வசூலித்தனர். 1855ல் நாவலரால் கோப்பாய் இ ந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இலவசமாக கல்வியளித்தது. மக்களிடம் பணம் சேர்த்து இலவச  கல்வியளித்தார். இந்து சமூகத்தவர் இலவசமாக கல்வியளிக்கும் அதிகமான பாடசாலைகளை உருவாக்க  அறைகூவல் விடுத்தார். அந்த வகையிலேயே யாழ்ப்பாணம் இந்து பாடசாலை தொடங்கப்பட்டது. நாவலரின்  கல்விக்கான பங்களிப்பு அலாதியானது. ஒரு ஆங்கில கட்டுரையாளர் 19ம் நூற்றாண்டில் வடக்கு கிழக்கில்  150 இந்து பாடசாலைகள் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். நாவலரின் பணியால் உத்வேகமுற்று  கிழக்கிலங்கையிலும் சைவப்பிரகாச சமாஜம் போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நாவலர் ஒட்டுமொத்த கிருஸ்துவ மதமாற்ற சாம்ராஜ்யத்திற்கே சிம்ம சொப்பனமாக இருந்தார். ஒரு  கிருஸ்துவ ஆயரின்  அறிக்கையில் அவர்களின் மதமாற்றும் திட்டம் இலங்கை  முழுவதுமாக தோல்வியடை ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மிஷன் அறிக்கைப்படி சைவம் கிருஸ்துவ சூழல்களிலும் வளர்கின்றது. மிஷனரிகளின் பல  கல்விப்பணிகளை தகர்த்து வளர்கின்றது. கிருஸ்துவ நிறுவனத்தில் பயின்ற நாவலர் இன்று கிராமங்கள்  தோறும் பாடசாலைகளை நிறுவி அச்சுப்பணி, பிரச்சாரங்கள் மூலம் பிரச்சாரகர்களை உருவாக்கியும் தனது  பணிகளை ஆற்றி வருவது நமக்கு பெரும் தோல்விதான். கிருஸ்துவத்தை பரப்ப நாம் மேற்கொண்ட  முயற்சிகள் ஆரம்பித்த நிறுவனங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே என்றும் புலம்பினார்கள். பெரும்பாலான  கிருஸ்துவ பாடசாலைகளில் கற்றவர்கள் தங்கள் ஆசிரியருக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்தனர். தமிழ்  மாணவர்களுக்கு நாம் கற்பித்ததே நமக்கு வினையாக வந்தது என நொந்தனர்.

தற்கால சூல்நிலையில் நாவலரின் முக்கியமான பணிகளையும் நினைவுகூற வேண்டும். இலங்கை பிரிட்டிஷ்  கவுன்சிலில் ஆங்கிலேயர்கள் சமயத்தில் ஆறு பிரதிநிதிகளை நியமிப்பது வழக்கமாக இருந்தது. இதில் ö பளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழ் இந்துக்கள் அடங்குவர். அந்த சமயத்தில் முத்துகுமாரசாமி உறுப்பினராக  இருந்தார். அப்போது ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இருவர் போட்டியிட்டனர். ஒன்று பிரிட்டோ என்ற  கிருஸ்துவர் மற்றவர் பொன்னம்பலம் ராமநாதன். நாவலர் பிரிட்டோவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம் பித்தார். நாவலர் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இலங்கையின் பெறும்பான்மை சமூகங்கள். இவ்விரு  இனமக்களும் கலை கலாச்சார பாரம்பரிய விழுமியங்களால் ஒன்றிணைந்தவர்கள். அதனால் பிரிட்டோவை  ஆதரிக்கக் கூடாது ஏனென்றால் அவர் ஒரு கிருஸ்துவர் என்றார். பிரிட்டோ அச்சமயத்தில் மிகவும் பிர பலமானவர். ராமநாதன் அதிகம் பிரபலம் இல்லாதவர். ஆனாலும் பொன்னம்பலம் ராமநாதனுக்கு ஆதரவாக  எல்லா இடங்களிலும் நாவலர்  பிரச்சாரம் செய்தார்.

பிரிட்டோ கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றவர். பின் சட்டம் பயின்று மட்டக்களப்பு மாவட்ட நீ தாவானாகவும் பணியாற்றினார்.

சமூக செயற்பாடுகளில் பங்கு கொண்டவர், ராமநாதன் அந்த அளவுக்கு பிரபலம் இல்லாதவர். ஆனால் அவர்  ஒரு இந்து. 22 மே 1879 யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகளின் பெறும் கூட்டத்தை நாவலர் கூட்டினார். ö பான்னம்பலம் ராமநாதன் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய காரணத்தையும் கூறினார்.

நீங்கள் அனைவரும் ராமநாதனுககு ஆதரவாக அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.  மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பொன்னம்பலம் ராமநாதனுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தீர்மானத்தில் அனைவரும் கையொப்பமிட்டு கவர்னருக்கு அனுப்பினர். நிறைவாக கவர்னர்  இத்தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு பொன்னம்பலம் ராமநாதன் அவர்களை நியமனம் செய்தார். பிரிட்டோ  தோற்கடிக்கப்பட்டார்.

நாவலர் பன்முக தன்மை கொண்டவர். தமிழ் மற்றும் சைவத்தின் நவீன மறுமலர்ச்சியின் அடையாளமாகத்  திகழ்ந்தார். பலவிதமான மொழி, ஜாதி, பகுதி, பிராந்தியம், என அடையாளம் இருந்தாலும் நமது சமய  அடையாளமே முதன்மையானது என வலியுறுத்தினார். நாவலர் கிருஸ்துவர்களை தகர்த்தவர் என்ற பெயர் ö பற்றார். கிருஸ்த்துவ மத கண்டனத்திற்காக ’கண்டனப் பேருரை’ என்ற புத்தகத்தையும் எழுதினார்.

இலங்கையில் இந்து தமிழர்களை ஆங்கிலேயேர்களின் மதமாற்றத்திலிருந்து காப்பாற்றிய ஆறுமுக நாவலர் 1879 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ம் தேதி முக்தியடைந்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here