இளைஞர்கள் நம்ம பக்கம் தான் – அண்ணாமலை பாஜக

கோவை,டிசம்பர் 24

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது என பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை குறிச்சி குளம் அருகே உள்ள அருள்மிகு பொங்காளி அம்மன் திருக்கோயிலில் வழிபாடு செய்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது எனவும், கூட்டணி தொடர்பாக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பார் எனவும் கூட்டணியில் அதிமுக பாஜக இடையே எவ்வித குழப்பமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஊழல் கட்சி எது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். கருமத்தம்பட்டியில் பாஜகவினர் கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் பாஜகவில் தொண்டர்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்படுவது இல்லை என மறுப்பு தெரிவித்தார்.

கருமத்தம்பட்டி கூட்டத்தில் கார் டயரை பார்த்து கும்பிடுபவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு மக்களின் அனுமானத்துக்கே அதனை விட்டு விடுவதாக கூறினார். 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சவால்கள் அதிகரித்து வருவதாகவும், 2021ல் யார் எழுச்சி பெற்ற கட்சி என்பது தெரிந்துவிடும் என்றார்.

மு.க அழகிரியின் தேர்தல் பங்களிப்பு தொடர்பான கருத்து வரவேற்பதாகவும், அவர் கட்சி தொடங்கிய பின்னர் அல்லது ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்த பின்னர் தனது கருத்தை கூறுவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here