உலகத்தலைவர்களின் தரவரிசையில் பாரத பிரதமர் மோடி முதலிடம்..!

5

உலகத்தலைவர்களின் தரவரிசையில் பாரத பிரதமர் மோடி முதலிடம்..!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது. 17-06-2021 அன்று வெளியிட்டுள்ள தரவுகளின் படி உலகத் தலைவர்களில் திறமை வாய்ந்தவராக மோடி 66% ஆதரவுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு சிறிது சரிந்ததாக கூறப்படும் நிலையிலும், உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களைப் பெற்றிருக்கிற தலைவர்களும், அவர்களின் செல்வாக்கு சதவீதமும்:

இந்திய பிரதமர் மோடி 66 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 65 சதவீதத்துடன் 2வது இடத்திலும், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மேனுவல் லோபஸ் ஓபரடார் 63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

4வது இடத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் 54 சதவீதத்துடனும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலா 53 சதவீதத்துடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

ஆறாம் இடத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48 சதவீதத்துடனும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 44 சதவீதத்துடன் ஏழாம் இடத்திலும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 37 சதவீதத்துடன் எட்டாம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான் சேஸ் 36 சதவீதத்துடன் ஒன்பதாம் இடத்திலும், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ 35 சதவீதத்துடன் பத்தாம் இடத்திலும் உள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து. பிரான்ஸ், ஜெர்மன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து மோடி உலகத் தலைவர்களில் நம்பர்1 இடத்தில் மோடி இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here