எண்ணெய் தேய்த்துக் குளித்தல் எதற்காக?

33

விரத நாட்கள் நோம்பு நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக்  குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது.இதயத் தூய்மையுடன் உடல்தூய்மையும் மிக முக்கியமாக நம் மூதாதையர் கடை பிடித்திருந்தனர்.

நம் நாட்டில் காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமான இடம் பெற்றுள்ளது.அடி முதல் முடிவரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கிக் குளிப்பது நம் முன்னோர்கள் ஒரு சுவர்க்கிய சுகமாகக் கருதியிருந்தனர்.

ஆனால் எண்ணை தேய்த்து குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை. உடலுக்கு மேலாக கிடைக்கப் பெரும் சுக அனுபவத்தை எண்ணி எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர்.

இதை விட மேன்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றது. ஒன்றாவதாக எண்ணெயில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடம்பில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தில் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்கு தெரியாத நோயணுக்கள், எண்ணெய் பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here