எந்த திசையை நோக்கி நின்று குளிக்க வேண்டும் ?

எப்போது குளிப்பது, எப்படி குளிப்பது என்றெல்லாம் போதித்த நம் முன்னோர் எத்திசை நோக்கிக் குளிக்க வேண்டும் என்றும் விதித்திருந்தனர். பண்டைக்காலத்தில் நிறைந்தொழுகும் நீரோடைகளும் நதிகளும் குளங்களும் குளிப்பதற்குப் பயன்படுத்தியிருந்தனர். மேற்குத் திசை நோக்கிக் நின்று மூழ்கிக் குளிக்கலாகாது என்று நம்பிக்கை இருந்தது.

கிரகங்களும் நட்சத்திரங்களும் கிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு பூமியை சுற்றிலும் வலம் வருகின்றன என்பது சாஸ்திரம். அவற்றிலிருந்து வந்து சேரும் காந்த சக்தி பூமிக்கு சுற்றிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

மேற்குத் திசை நோக்கி மூழ்கி எழுந்தால் நம் முதுகு புறத்தில் படிகின்றது. ஆனால் கிழக்கு நோக்கி மூழ்கி எழும்போது நம் இருதயம் அடங்கியிருக்கும் முன்பாகத்தில் உடல்நலத்துக்கு நன்மை விளைவிக்கும் காந்த சக்தி படிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here