நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என இன்று (டிசம்பர் 29) பகிரங்கமாக அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம்.
சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.