எல்லைத் தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிப்பதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது – ராஜ்நாத் சிங்

ராஜ்நாத்

டிசம்பர் 30

டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். அதில் அவர், பாகிஸ்தான் தோன்றியது முதலே, எல்லையில் தீங்கை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்திய ராணுவ வீரர்கள் நமது நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளை மட்டும் அழிப்பதோடு அல்லாமல், தேவைப்பட்டால் எல்லைத் தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிப்பார்கள் என்று கூறிய அவர், அதற்கான திறன் இந்தியாவிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுயமரியாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலையும் இந்தியா சகித்துக் கொண்டிருக்காது என்றும், மென்மையாக நடந்து கொள்வதால் நாட்டின் மீது (pride) தாக்குதல் நடத்துகையில் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்போம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என ராஜ்நாத்சிங் எச்சரித்தார். இந்தியா தனது கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எச்செயலிலும் சமரசம் செய்து கொள்ளாது எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here