தைப்பூசத்திருவிழா பொது விடுமுறை பட்டியலில் சேர்ப்பு கோவை மாவட்ட பாஜக சார்பில் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு. இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டம் .
வரும் ஜனவரி 28-ம்நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத்திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை கடந்த மதம் சிறப்பாக நடைபெற்றது. வேல் யாத்திரையின் போது தமிழக அரசுக்கு பாஜக சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அவற்றில் முக்கியமான கோரிக்கை தைப்பூசத்திருவிழாவை அரசு விடுமுறையாக்கவேண்டும் என்பதே இதனை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.
அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தைப்பூச திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாகவும் கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் மற்றும் பாஜக தொண்டர்கள் காந்திபார்க் அருகில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார் மேலும் அங்குள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
