ஏமாற்றிய காதலன் மேல் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை , நவம்பர்27:

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்னை ஏமாற்றி குழந்தையை கொடுத்துவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி பாதிக்கபட்ட 21 வயது பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தார்.

பாதிக்கப்பட்ட பிருந்தா பத்ரிகையாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரிப்புத்தூரைச் சேர்ந்த செல்வம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்பமாக்கி குழந்தையை கொடுத்து விட்டு தற்போது தனது உறவு பெண்னை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும்.

இது தொடர்பாக ஏற்கனவே பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு செல்வம் சிறையில் அடைக்கபட்டதாகவும் டி.என்.ஏ சோதனையில் பிறந்த பெண் குழந்தை செல்வத்தின் குழந்தை தான் என ஊர்ஜிதமானது. ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது உறவு பெண்னை திருமணம் செய்துள்ளார்.

தன்னை ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கையில் கடந்த 5 வருடங்களாக காத்து இருந்த நிலையில் தற்போது வேறு பெண்னை செல்வம் திருமணம் செய்து உள்ளது தனது எதிர்காலத்தையும் குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என கண்னீர் மல்க தெரிவித்தார் பிருந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here