ஒரு நடிகன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் தல அஜித் …!

ஒரு நல்ல நடிகன் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு அவர் உதாரணம் அவரை திரையுலகுக்கு அப்பாவோ அண்ணனோ அழைத்துவரவில்லை. அவர் அடிபட்டால் கேட்க யாரும் கிடையாது , அவர் உண்டாரா உறங்கினாரா என கேட்க கூட அன்றுயாருமில்லை.

இதனிடையே அடிக்கடி விபத்துக்கள் வேறு இதை எல்லாம் தாண்டி அவரை ஒரு சக்தி தாங்கிற்று, வளரும் நடிகனுக்குரிய காதல் விவகாரங்களை கூட சச்சின் டெண்டுகர் பெண்களை கையாண்டது போல ஒதுங்கி சென்றார்,
பெரும் சர்ச்சைகளில் அவர் சிக்கவில்லை , குடிதகறாறோ இல்லை வேறு சில்லறை பிரச்சினைகளில் அவர் பெயரை பார்த்திருக்க முடியாது ஏகபட்ட பெண் ரசிகைகள் இருந்தும் ஒரு சர்ச்சையினை கேள்விபட்டிருக்க கூட முடியாது
கொட்டி கொடுக்கும் ரசிகர்கள் இருந்தும் ஒரு பைசா முறையற்ற வசூலை யாரும் பார்த்திருக்க முடியாது.
இதெல்லாம் ஒருவகை உன்னத மனநிலை, குணங்களில் உயர்குணம், தொழிலில் மட்டும் கவனம் ஒரு அர்பணிப்பு என்பதை தவிர வேறு எதுவுமில்லா மகோன்னத குணம் அவருக்கு பெரும் நடிப்புதிறமை உண்டு என்றோ, வரலாறு கண்ட மாபெரும் நடிகன் என்றோ நிச்சயம் சொல்லமுடியாது, ஆனால் எது தேவையோ அல்லது இப்பொழுது இருக்கும் கதை பஞ்சத்துக்கும் கலை உலகில் இருக்கும் கலை தரித்திரியத்துக்கும் எது தேவையோ அதை தெளிவாக கொடுக்க முடிகின்றது. மனிதரிடம் பிடித்த விஷயம் அவரிடம் பேராசை என்பது இல்லை, வருடத்துக்கு 5 படம் விட்டு காசு பார்க்கும் அந்த குணம் இல்லை
ரசிகர்களை மறைமுகமாக தூண்டிவிட்டு அரசியல் வித்தை காட்டும் அந்த தந்திர முகம் இல்லை

தமிழக நடிகர்களிலே “சும்மா” எதையாவது வம்பாக சொன்னால் மன்றத்தை கலைப்பேன் என சொல்லும் தைரியம் அவர் ஒருவருக்குத்தான் உண்டு, ரஜினிக்கு கூட அந்த தில் இல்லை அவர் நினைத்தால் வருடம் பல நூறு கோடிகள் சம்பாதிக்கலாம், சொத்துக்களை குவிக்கலாம், ரசிகர்களை தூண்டிவிட்டு குழப்பம் நிகழ்த்தலாம்
அட அவ்வளவு ஏன் “டமிலனுக்கு மதமில்லை, கடவுள் வேண்டாம் மனிதம் காப்போம்” என கிளம்பினால் கூட அவரின் வங்கி கணக்குக்கு பல லட்சம் டாலர்கள் வரும், தமிழக இயல்பு அது ஆனால் என் நிம்மதியான வருமானம் எனக்கு போதும் என மெல்ல நகர்ந்து செல்கின்றார், தன் குடும்பத்தை கூட அவர் எங்கும் முன்னிறுத்தி நீங்கள் பார்த்திருக்க முடியாது.
இதனிடையே அடிக்கடி விபத்துக்கள் வேறு வீணான பேட்டிகள், இம்சை முழக்கம், பொறுப்பற்ற பேச்சுக்கள் என ஒரு வார்த்தை கூட அவர் சொல்லியதில்லை, பத்திரிகை கவனம் பெற அவர் முயன்றதுமில்லை மாறாக தவிர்க்கின்றார்
பணம் போடும் முதலாளி முதல் தன்னை தேர்ந்தெடுத்த இயக்குநர், திரையரங்கு முதலாளிவரை நஷ்டபடாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை கவனமாக செய்கின்றார்.

சினிமா என் தொழில் அவ்வளவுதான், என்னை ரசிக்கும் ரசிகன் கைதட்டினால் மகிழ்ச்சி அதற்காக அவனை எனக்காக‌ பலிகொடுக்கமாட்டேன், என்னிடம் இருப்பது மக்கள் கொடுத்த பணம் அதை நலதிட்டங்களுக்கும் அரசின் உதவிகளுக்கும் கொடுத்து கொண்டே இருப்பேன் கொடுப்பேனே தவிர அதனால் என்ன பிரதிபலன் என எதிர்பார்க்கவும் மாட்டேன். வந்தது பெற்றேன், தேவையில் கொடுத்தேன்” என நகர்வது அவரின் மகா முக்கியமான குணம் இப்படி எல்லா நடிகனும் இருந்தால் சிக்கலே இல்லை, ஆனால் எல்லோரும் அப்படி இருந்தால் அவர் தனித்து தெரிவதில்லை.

எப்படி இம்மனிதனுக்கு இவ்வளவு பெரும் ஆதரவும், மக்கள் அபிமானமும் கிடைத்தது?

புராணத்தில் ஒரு கதை உண்டு, பாற்கடலை கடைந்தபொழுது லட்சுமி வந்தாளாம், எல்லா தேவர்களும் அவள் தனக்கு மாலையிட வேண்டும் என அருகே சென்று தங்கள் அருமை பெருமைகளை சொல்லிகொண்டே இருந்தார்களாம்
திருமகளே என்னிடம் வந்துவிடு என ஆளாளுக்கு ஆசையில் ஏங்கி நிற்க, ஒரே ஒரு உருவம் எந்த எதிர்பார்ப்புமின்றி தள்ளி அதன் போக்கில் இருந்ததாம் இதென்ன? சர்வ வளங்களும் அருளும் என்னை ஆளாளுக்கு காலில் விழுந்து அழைக்க இந்த உருவம் ஆசையற்று இருக்கின்றதே, இவரல்லவா மகா உயர்ந்த மனதுக்காரர் என உருகிய திருமகள் அவர் காலில் சரணடைந்தாளாம், அவர்தான் திருமால் ஆம் ஆசைகள் அற்றவனுக்கு, பெரும் எதிர்ப்பார்ப்பும் பேராசையும் இல்லாதவனுக்கு திருமகள் கடாட்சம் எக்காலமும் உண்டு. அது அஜித்குமார் என்பவருக்கும் பெருக கிடைத்திருக்கின்றது
ஒரு விஷயம் எம்மால் உறுதியாக சொல்லமுடியும், தெரிந்தோ தெரியாமலோ திராவிட சதியில் தமிழக அரசியல் சினிமாவில் கலந்துவிட்டது இதனால் சினிமாவில் எப்பொழுதும் கடவுள் மறுப்பு விஷமும், இந்திய பிரிவினைவாதமும் இருக்குமாறு ஒரு கறுப்பு சக்தி பார்த்து கொண்டே இருக்கும் இதை முதலில் உணர்ந்து ஓரளவு அடக்கி வைத்தவர் எம்.ஜி ராம்சந்தர். சினிமாவின் சகல மர்மங்களையும் அறிந்ததால் சினிமாவினை அவர் அடக்கி வைத்திருந்தார்
அதை அப்படியே செய்தவர் ஜெயலலிதா கருணாநிதி என்பவர் வேறுமாதிரி கையாண்டார், தமிழக சினிமாவில் விஷத்தை கலந்தது அவர்தான்.

விஷத்தை விஷமே முறிக்கும் என்பது போல அவர் கலந்த விஷமே ராமசந்திரன், ஜெயா என சினிமா விஷத்துக்கு பதில் மருந்தாய் இருந்தது இப்பொழுது அந்த சமநிலை உடைந்தது, சிவகுமார் குடும்பம் ,விஜய் சேதுபதி எல்லோரும் சொந்தமாக பேசுகின்றார்கள், வாய்ப்பு கிடைத்தால் விஜயண்ணா என்னவெல்லாமோ சொல்கின்றார் என்பதெல்லாம் மிக துல்லியமான கணக்குகள் இவர்கள் எல்லோருக்கும் பொதுவான தலமை உண்டு, உத்தரவு அங்கிருந்துதான் வரும். இதெல்லாம் சாமான்ய கண்களுக்கு தெரியாது ஜெயா ஓய்ந்த நிலையில், விஜயகாந்தும் சரிந்த நிலையில், ரஜினி மட்டுமே அவர்களுக்கு பெரும் புதிராகவும் சவாலாகவும் இருக்கின்றார்.

ஆம் ஆன்மீகவாதியும் தேசியவாதியுமான ரஜினி அந்த கறுப்பு சக்திகளுக்கு ஒரு சவால், மிக பெரும் சவால்
ஆனால் அவரின் அரசியல் குழப்பங்களும், முதிர்ந்த வயதும் இச்சக்திகளுக்கு கொஞ்சம் தெம்பை கொடுக்கின்ன்றன, கடவுள் மறுப்பு தமிழனுக்கு மதமில்லை, தேசபிரிவினை போன்றவற்றை விதைக்கலாமா என அவை ஆழம் பார்க்கின்றன‌
அந்த கறுப்பு சக்திகளை நோக்கும் பொழுதுதான் இப்பக்கம் பெரும் சக்தியாக யானை பலத்துடன் அமைதியாக நிற்கின்றார் அஜித்குமார் அதில் தெய்வமும் தமிழரின் பிரார்த்தனையும் ஆன்ம பலமும் முன்னோர் ஆசியும் தெரிகின்றது
ஆம் அஜித்குமார் என்பவர் இங்கு ஒரு காவல், ஒரு பலம். அப்பக்கம் அத்துமீறினால் இப்பக்கம் ஒரு சக்தி பலமாய் இருக்கின்றது எனும் ஒரு சவால் இது கடவுளின் விளையாட்டு, தமிழகத்தை காத்து நிற்கும் தர்மத்தின் விளையாட்டு
அந்த அஜித்குமாருக்கு இன்று பிறந்தநாள். இப்பொழுது இருப்பதை போல எப்பொழுதும் அவர் இருக்கட்டும், பேசி தமிழகத்தை மிரட்டும் போலிகள் கூட்டத்தின் முன் பேசாமலே அவர் தமிழகத்தை காப்பது போல் எக்காலமும் காக்கட்டும்
தேவைபட்டால் ஒருவார்த்தையில் தர்மத்தை சபையேற்றும் பெரும் பலத்தை இறைவன் அருளட்டும் தமிழகத்தின் மிக நல்ல இந்திய குடிமகனாய், நல்ல நடிகனாய், நல்ல முன்மாதிரியாய் , தமிழகத்தின் பலமாய் நிற்கும் அந்த அஜித்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அந்த தலை மேல் சுமத்தபட்டிருக்கும் பொறுப்பும் காவலும் ஏராளம், அதை அவர் இக்காலம் போல் எக்காலமும் சுமந்து நாட்டுக்கும் தமிழகத்துக்கும் காவலாய் இருக்கட்டும் தமிழகத்தின் எல்லா தெய்வங்களும் அவரை ஆசீர்வதிக்கட்டும், அவரின் அழகான சிரிப்பு போலவே சகலமும் அவருக்கு நல்லதாய் நடக்கட்டும் பில்லா படத்தில் அவர் பத்துமலை முருகனுக்கு ஒரு பாடல் பாடி ஆடுவார், அவரின் மிக அமர்க்களமான முத்திரை அது. மலேசிய இந்து தமிழரிடம் இடைவிடாமல் ஒலிக்கும் பாடலது அந்த பத்துமலை முருகன் அவருக்கு எல்லா வளங்களையும் அளித்து தன் கையில் சேவல் கொடிபோல் காக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here