கோவை, பிப்ரவரி 06
நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியிடுவதை கண்டித்து தனுஷ் ரசிகர்கள் கோவை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
நடிகர் தனுஷ் நடித்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிட வேண்டாம் என தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் கோவையில் தனுஷ் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி ஓடிடி வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் “ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்குகளை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு நிறுவன தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.