கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்..!

மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல

மாறாக ஒரு பேப்பர் ஒரு பென்சில் போதும், அவர் போக்கில் சமன்பாடுகளை எழுதிகொண்டே இருப்பார். ஏதாவது ஒரு விஞ்ஞானி ஆய்வகத்தில் அதனடிப்படையில் சோதனை செய்தால் அது மிக சரியாக வரும்
அவரின் ஆராய்ச்சி இப்படித்தான் எளிமையாக இருந்தது

ஜெர்மனியில் பிறந்தார், ஐரோப்பா எங்கும் அவர் குடும்பல் அலைந்தது, பின் சுவிட்சர்லாந்தில் வசித்தார்.
ஒரு அலுவலகத்தில் கிளர்க் வேலையில்தான் இருந்தார், ஆனால் இயற்பியல் கட்டுரைகளை அவர் சமர்பிக்க, சமர்பிக்க உலகம் அவரை அறிந்துகொண்டது
ஒளிமின் விளைவு என்பதை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசினை வாங்கினார், அதன் பின் இயற்பியல் ஆராய்ச்சியில் இறங்கினார்

சார்பியல் கொள்கை என ஒன்றை சொன்னார், நமது கமலஹாசனின் பேட்டி போல அது சாதாரண மக்களுக்கு புரியாது, காலம், பொருள், இடைவெளி என என்னவெல்லாமோ வரும், அதில்தான் ஓளியே உலகின் வேகமான விஷயம் என்பதை சொன்னார்

அதாகபட்டது இப்படி சொல்லலாம், ஒருவனை ஒளியின் வேகத்தில் ராக்கெட்டில் வைத்து விண்வெளியினை சுற்றிவர செய்யலாம், அதற்குள் பூமி சூரியனை எத்தனை சுற்றும் சுற்றிவரட்டும்

அவன் ஆகாயத்தினை சுற்றிவந்து பூமிக்கு வரும்பொழுது அவன் அப்படியே இருப்பான், ஆனால் பூமி சூரியனை 1000 சுற்று சுற்றியிருகும், அதாவது இங்குள்ள மனிதருக்கு 1000 வருடம் கடந்திருக்கும், சென்றவன் அப்படியே இருப்பான்

அதாவது பூமி சூரியனை சுற்றுவது நேரம், மனிதன் விண்வெளிக்கு சென்றது காலம், இப்படியாக செல்லும் தத்துவம் அது

ஒன்றும் பிரமாதமில்லை, இந்து புராணங்களில் ஏற்கனவே வரும் சம்பவம் இது, இந்துமதம் நிச்சயமாக அறிவியல் சார்ந்தது, அந்த விண்வெளி உண்மையினை தகுந்த சமன்பாடுகளோடு ஐன்ஸ்டீன் சொன்னார்

ஆம் இந்து புராணம் அதை தெளிவாக சொல்லும், விஷ்ணுவின் பக்தன் ஒருவனை தேவர்களின் தேர் அழைத்து செல்லும், அவர் ஒருநாளில் விண்ணகத்தை சுற்றிவிட்டு பூமிக்கு வரும்பொழுது அப்படியேதான் இருப்பார்

ஆனால் அவரின் 300ம் தலைமுறை 1000ம் ஆண்டாக ஆண்டுகொண்டிருக்கும், அதாவது வானத்தில் ஒரு நாள் என்றால் பூமிக்கு ஆயிரம் ஆண்டு என்பது அன்றே இந்துக்கள் சொன்னது

ஐன்ஸ்டீனின் கொள்கையினை என்றோ சொன்னமதம் இந்துமதம்

அடுத்ததாக அவரின் கண்டுபிடிப்புதான் புகழ்பெற்ற e=mc2 என்ற சமன்பாடு, அதாவது நியூட்டனின் கொள்கைகளில் சில திருத்தம் செய்தார், புதிய சமன்பாடு கிடைத்தது. சொன்னாரே தவிர சோதித்து பார்க்க இயலா தத்துவம் அது

இவை எல்லாம் சாதிக்கும்பொழுது அவருக்கு வயது 30க்குள்தான் ஆகியிருந்தது, பிறவிமேதைக்கு எல்லாம் சாத்தியம்

இந்நிலையில்தான் ஹிட்லரின் எழுச்சி தொடங்கி அப்பகுதியில் யூதர்கள் வாழமுடியா நிலை தோன்றியது , அமெரிக்காவிற்கு அகதியாய் தப்பினார் ஐன்ஸ்டீன்

சும்மாவே விஞ்ஞானி, அதுவும் யூத மக்களை ஹிட்லர் கொடூரமாக அழித்துகொண்டிருந்த பொழுது அவருக்கு உள்ளே இருந்த யூத ரத்தம் கொதித்தது, அணுகுண்டு செய்யும் திட்டத்தின் ஆலோசகர் ஆனார்

அப்பொழுது ஆளாளுக்கு அணுகுண்டு ஆசையில் இருந்தனர், ஹிட்லர் கிட்டதட்ட அணுகுண்டின் பாதியினை நெருங்கியிருந்தார், காரணம் ஐன்ஸ்டீனுடன் பணியாற்றிய ஜெர்மன் விஞ்ஞானிகள் அவன் வசம் இருந்தனர்
இந்நிலையில்தான் இன்னொரு யூதரான ஒபர் ஹைமருடன் இணைந்து ஐன்ஸ்டீன் தன் e=mc2 தத்துவத்தை செயல்படுத்தினார், அது அணுகுண்டாய் வெடித்தது

யுரேனியம் எனும் சாதாரண மணல்கட்டியினை, ஒரு மந்திரம் சொல்லி அணுகுண்டாய் மாற்றிய வித்தகர் ஐன்ஸ்டீன்

ஏதோ ஒரு பேப்பரில் பென்சிலால் ஐன்ஸ்டீன் கிறுக்கிய சமன்பாடு அங்கே பேரழிவாய் வெடித்தது, அணுகுண்டு அமெரிக்க அரசின் கைகளுக்கு சென்றது

ஹிட்லரை ரஷ்யா வீழ்த்த, அணுகுண்டு ஜப்பானுக்கு வீசபட்டது, அந்த அழிவினை கண்ட ஐன்ஸ்டீன் கண்ணீர்விட்டார், அரசுகள் கையில் விஞ்ஞானம் சிக்குவது தவறு என வாய்விட்டு சொன்னார்

அதன் பின் அவர் இம்மாதிரியான ஆராய்ச்சிகளில் மனம் செலுத்தவில்லை, இனி அமைதியே அணுகுண்டை வெல்லும் ஆயுதம் என சொல்லி அமைதியானார்

பின் அவரின் ஆராய்ச்சி வானுலகிற்கு சென்றது, நியூட்டனின் கொள்கைளை திருத்திகொண்டிருந்த அவர், பின் கோபர்நிக்கஸ், கெப்ளர் என திசைமாறினார்

எல்லோரும் ஒரு விஷயத்தை பார்ப்பதற்கும் ஐன்ஸ்டீன் பார்ப்பதர்கும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு, அவர் பிரபஞ்சத்தை வேறுமாதிரி பார்த்தார்

இதனை போல பல பிரபஞ்சங்கள் இருக்கலாம், ஒரு பிரபஞ்சத்திற்கும் இன்னொரு பிரபஞ்சத்திற்கும் ஒரு இணைப்பு இருக்கலாம், அதன் வழியே அடுத்த பிரபஞ்சத்திற்கு எளிதில் சென்று வரலாம்

இன்றும் ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் அவ்வழியே வரலாம் என நம்பபடுகின்றன

அணுவுல் எலெக்ட்ரான்கள் உட்கருவினை சுற்றுவதற்கும், சூரியனை பூமி சுற்றிவருவதற்கும் பொதுவான விதி உண்டு, அதனை நான் கண்டுபிடிப்பேன் என அது சம்பந்தமாக ஆராய்ந்த ஐன்ஸ்டீன் அதனை உலகிற்கு சொல்லாமலே மறைந்தார்

அவர் இறந்தபின் அவர் மூளையினை ஆராய்ந்தார்கள், பிரமாதமாக ஒன்றுமில்லை, ஆக ஆன்மா அவரை இயக்கியிருக்கின்றது என சொல்லிகொண்டார்கள்.

அந்த மூளையில் அல்ல விஷயம், அந்த ஆத்மாவில் இருந்திருக்கின்றது விஞ்ஞானம்.

இறுதிவரை விஞஞானியாகவே வாழ்ந்தார், இஸ்ரேல் அமைக்கபட்டபொழுது இஸ்ரேலின் பிரதமராக அமர அவரை யூதர்கள் அழைத்தனர், யூத அறிவின் சிகரம் நீங்கள். இந்த நாற்காலி உங்களுக்கானது என்றபொழுது அவர் மறுத்தார்

விஞ்ஞான உலகம் வேறு, அரசியல் உலகம் வேறு என மறுத்தார்

இதுதான் யூதர்கள், இதே தமிழ்நாடு என்றால், விஞ்ஞானி கிடக்கின்றான் வெங்காயம், எவன் நல்ல நடிகனோ அவனை அமரவை என கிளம்பமாட்டார்களா? பின் எப்படி தமிழகம் உருப்படும்.

கடந்த‌ நூற்றாண்டின் நம்பர் 1 விஞ்ஞானி என உலகம் அவரை ஒப்புகொண்டிருக்கின்றது, அப்படி ஒரு அசாத்திய அறிவாளி இனி பிறப்பது சிரமம்

மாமன்னன் சாலமோனுக்கு பின் எதனையும் புரிந்துகொள்ளும் பெரும் அறிவாளி என வரலாறு ஐன்ஸ்டீனைத்தான் சொல்கின்றது, எதுவும் அவருக்கு சிரமம் இல்லை.

திருமண வாழ்க்கைகள் தோற்கும் போதும், தன் குழந்தைகள் தன்னை போல் வராத பொழுதும் அவருக்கு கவலையே இல்லை, அப்படி அவர் தன் வாழ்க்கை பற்றி கவலைபட்டிருந்தால் இந்த உலகம் ஒரு ஐன்ஸ்டீனை கண்டிருக்காது

மனிதநேயம் மிக்க விஞ்ஞானி அவர், அணுகுண்டு இப்படியான விளைவுகளை உருவாக்கும் என்றிருந்தால், அந்த சமன்பாட்டை கொடுத்திருக்கவே மாட்டேன், உலகின் பெரும் பாவி நான் என அவர் கதறிய தருணமும் உண்டு

யூதர்தான்,ஆனால் கடவுளை வேறுவிதமாக பார்த்தார்

“இந்த பிரபஞ்சம் மிக பெரிது, இவ்வளவு பெரிய கோள்கள், விண்மீன்கள், அண்டங்கள், சூரியன்கள் என உருவாவதும், அவை துளி ஓசையின்றி இயங்குவதும், மிக மிக சரியாக இயங்குவதும் கடவுள் இருப்பதை குறிக்கின்றன

நிச்சயம் அப்படி ஒரு சக்தி உண்டு, அதுவே விண்வெளியினை இயக்குகின்றது என மிக தீர்க்கமாக சொன்னார்

அவர்தான் உலகின் பல சிக்கலான விஷயங்களை சொல்லி அதற்கு தீர்வும் சொன்னவர், அவருக்கு யார் பதில் சொல்வார்.

எப்படி இவ்வளவு அறிவு சாத்தியம் என கேட்டதற்கு அவர் சொன்னார்

“நான் நியூட்டன் விட்ட சில தவறுகளை திருத்தினேன், அதனால் புதுகொள்கைகளை சொன்னேன்
வருங்காலத்தில் என் தவறுகளை திருத்தி வேறு கொள்கைகளை வெளியிட இன்னொருவன் வருவான்,
இவ்வுலகில் அப்படித்தான் புதுபுது விஞ்ஞான தத்துவம் உருவாகும், இன்று என்னை கொண்டாடலாம், நாளை நான் பின்னுக்கு தள்ளபடுவேன் இது உலக நியதி”

எவ்வளவு தன்னடக்கமான பதில், நிறைகுடம் நீர்தளும்பல் இல் என்பது இதுதான்
அந்த மாபெரும் விஞ்ஞானியின் நினைவுநாள் இன்று, மானிடகுலத்தின் பெரும் விஷயங்களை சாத்தியபடுத்திய, புதிய விஞ்ஞான வாசலை திறந்துவிட்ட அந்த அறிவுபிரபஞ்சத்திற்கு இன்று நினைவுநாள்

அணுவில் தொடங்கி அண்டம் வரை அலசி சொன்ன பெரும்வித்தகனின் நினைவுநாள், மானிடசாதிக்கு புது பாய்ச்சலை கொடுத்த ஒரு விஞ்ஞான நினைவுநாள்.

அவரால் அறிவுபெற்ற மானிடர்களில் ஒருவராக அவரை நினைவுகூறலாம், வாழ்த்தலாம்
என்னை வருங்காலத்தில் ஒருவன் பின்னுக்கு தள்ளுவான் எனும் ஐன்ஸ்டீனின் வார்த்தை, ஒரு இந்திய விஞ்ஞானி மூலம் பலிக்கட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here