கல்லாக்கட்ட வேற கான்செப்டே கெடைக்கலயா? தண்டவ் தொடர் ஏற்படுத்திய சர்ச்சையும் விமர்சிக்கும் ஆடியன்ஸும் – ஓர் பார்வை

கல்லாக்கட்ட வேற கான்செப்டே கெடைக்கலயா? தண்டவ் தொடர் ஏற்படுத்திய சர்ச்சையும் விமர்சிக்கும் ஆடியன்ஸும் – ஓர் பார்வை

இப்போது பெரிய அளவு பெட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல வெப் சீரியல்களை வெளியிடுவதில் அமேஷான் ப்ரைம் ஆர்வம் காட்டிவருகிறது. அந்த வரிசையில் மிர்ஷாபூர், மேட் இன் ஹெவன், இன்சைடு எட்ஜ், பேமிலி மேன் – தண்டவ் ஆகியவை குறிப்பிடும்படியான இந்தி தொடர்கள்.

சுல்தான் – டைகர் ஷிண்டா ஹை ஆகிய திரைப்படங்களின் மூளையாக இருந்த அலி அப்பாஸ் ஷாபரால் எடுக்கப்பட்ட  வலைத்தொடர் தான் இந்த தண்டவ்.

அலி அப்பாஸ் ஷாபரை பாலிவுட் திரையுலகம் புறக்கணித்துவிட்டதால் வெப் சீரியல் இயக்கும் வந்து, கடுமையான எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் ஒரு தவறான படைப்பை வழங்கியிருக்கிறார்.

இந்த தொடரில் பாலிவுட்டில் பிரபலமான ஷைஃப் அலி கான், டிம்பிள் கம்பெடியா (மிகுந்த எதிர்பார்ப்புகளை கடந்து வெளியான கிறிஸ்டோபர் நோலன் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தவர்), சுனில் க்ரோவர், குமுத் மிஸ்ரா, திக்முன்ஷு தூலியா ஆகியோரும், 2000 – 2010 ஆண்டுகளில் டிவி தொடர் பிரபலங்களான கௌஹார் கான், அனுப் சோனி, கிருத்திகா கம்ரா, சந்தியா மிருதுல், ஹித்தன் தேஜ்வானி ஆகியோரும் பல வருடங்களுக்கு பிறகு தங்களுடைய முகத்தை இந்த தொடர் மூலம் பதிவு செய்தனர்.

மெட்ராஸ் காஃபே, யுவா, சர்க்கார், ஷாங்காய், ராஜ்நீதி, குலால், ரங் தி பாஸந்தி, நாயக், ஆரக்ஷன் போன்ற எண்ணற்ற நல்ல படைப்புகளை தந்த சினிமாத்துறை தான் எடுக்கப்படக்கூடாத இது போன்ற படைப்புகளுக்கு உதாரணமாகவும் அமைந்துவிடுகிறது.

யார் செய்கிறார் என்பதை பொறுத்து எப்போதும் சினிமாவின் வெற்றியும் தோல்வியும் இருக்கக்கூடாது. எதை செய்கிறார்? எப்படி செய்கிறார் என்பதை பொறுத்தே அது அமைய வேண்டும். அதுவே உண்மையான கலைஞனுக்கு இந்த உலகம் சூட்டும் மணி மகுடம். அதுவே இத்தொடரின் முடிவை இப்போது தீர்மானித்துள்ளது.

‘நான் ராஞ்சனாவை தியேட்டரில் பார்த்தேன். இந்த தண்டவ் தொடரை என்னால் வீட்டில் அமர்ந்து கூட நிம்மதியாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள்’ என்கின்றார் ஒரு ரசிகர்.

அமேசான் பிரைம் மார்க்கெட்டிங் குழு இந்த தொடரை இறுதிவரை பார்த்தபோதே நிச்சயம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை முடிவு செய்திருக்கும். அதுவே இப்போது நடந்துள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் இதன் டிரெய்லரே ரிலீஸ் ஆனது.

இத்தொடர் இந்து கடவுள்களை இழிவு செய்வதில் ஆரம்பமாகிறது. இருப்பினும், இதனை கண்டித்து எந்த நடவடிக்கையும் படைப்பாளருக்கு எதிராக இதுவரை பாலிவுட்டில் எடுக்கப்படவில்லை.

இந்து கடவுள்கள் மட்டுமல்ல, பிராமணர்கள் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் அசிங்கப்படுத்தப்படுகின்றன, இந்திய காவல் துறையும் இழிவுப்படுத்தப்படுகிறது, டெல்லி போலீசையும் தவறாக சித்தரித்து தாக்குகிறது, பிற ஜாதிகளையும் விட்டுவைக்கவில்லை, அதோடு பா.ஜ.க – அதன் வாக்காளர்களும் தாக்கப்படுகின்றனர்.

இது ஒன்றும் எதார்த்தமாக நடந்ததாக தெரியவில்லை.  பிறர் மனதை புண்படுத்த போகிறேன் என்பதை இத்தொடரின் இயக்குனர் நன்றாகவே அறிந்து தான் எடுத்துள்ளார். டிரெண்டிங்கில் இருக்க ஆசைப்பட்டுக்கொண்டு கடவுள் நம்பிக்கை உடையவர்களின் மனதை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கேலி செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இரண்டாவதாக,

ஜெ.என்.யு-வில் நடந்த அந்த உண்மை நிகழ்வு, சுவாமி விவேகானந்தாவுக்கு எதிராக மாணவர்கள் நடந்துக்கொண்டதை அப்படியே வி.என்.யு என மாற்றி விவேகானந்தா நேஷனல் யுனிவர்சிட்டி என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இந்த சின்ன லாஜிக்கை கூட பார்வையாளர்களால் புரிந்துக்கொள்ள முடியாத முட்டாள் என நம்மை எல்லாம் இத்தொடரின் இயக்குனர் நினைத்துவிட்டார் போலும்.

இத்தொடரில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவார்கள். எங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்றும் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றும் குரல் கொடுப்பார்கள். ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலமும் கார்ப்பரேட் கம்பெனிகளும் வேண்டாம் என்றும் குரல் கொடுப்பார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? நம் நாட்டில் வேலை பார்ப்பவர்களில் 50% பேர் கார்ப்பரேட் கம்பெனி தான் என்பதை இயக்குனர் மறந்துவிட்டார் போல.

ஒரு கதாப்பாத்திரம் எதற்காக கோபம் கொள்கிறது, அவர்களின் தேவை என்ன, யார் மூலமாக இந்த பிரச்சனை தீர்க்கப்படும் இப்படி எந்த ஒரு அரசியல் அடிப்படை முன் அனுபவம் கூட இல்லாமல் தேசத்தை எதிர்க்க வேண்டும், குறிப்பிட்ட மக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுமே படைப்பாளர் இருந்திருப்பதாகவே தெரிகிறது. அதனால் தான் விவசாய பிரச்சனையையும் கிளறிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார்.

1,300 மில்லியன் இந்தியர்கள் இருக்கும்போது வெறும் 40 மில்லியன் டிவிட்டர் வாசிகளை வைத்து ஒரு பிரதமரை முடிவு செய்வது எல்லாம் ரொம்ப ஓவர்.

இடத்தைவிட்டு நகராமலே ஒரு பிரதமரை கொல்வதென்பது எளிது என்றும் ஒரு பிரதமர் இறப்பிற்கு மற்ற நாட்டு தலைவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதெல்லாம் அபத்தமான காட்சி அமைப்பின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

நொய்டா – தேசம் முழுவதிற்குமே ஒரே ஒரு நியூஸ் சேனல் என்பதெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளாகவே இருக்கிறது. மாநிலத்தை விட மாநில ரகசியங்களை தெரிந்து வைத்திருக்கும் ஒரு தனிப்பட்ட காவலர், ‘இப்படியெல்லாம் சினிமா எடுத்தால் இன்னும் கொஞ்ச நாளில் நல்ல திரைக்கதைகள் வராமலே போய்விடும் என்றே மனதில் தோன்றுகிறது.’

34 வயதுடைய ஒருவர் பாதுகாப்பு மந்திரி என்றும் அவர் விமானத்துறையில் இருந்ததாகவும் குறிப்பிடுவதெல்லாம் லாஜிக் இல்லாத காட்சியாகவே அமைந்துள்ளது. 1.3 பில்லியன் மக்கள், 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் இருக்கும்போது வெறும் 100 பிடிவாதம் கொண்ட மாணவர்களை வைத்து அரசியல் தலையெழுத்தை மாற்றுவது எல்லாம், காட்சிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக மட்டுமே அமைக்கப்பட்டது போல அப்பட்டமாக வெளிப்படுகிறது.

அமைச்சரவை இலாகாக்களை டம்மியாக சித்தரித்திருக்கும் இந்த தொடர், வி.என்.யு என்ற பல்கலைக்கழகத்தில் நடப்பதை எதிர்கட்சியோ, எந்த ஒரு முதலமைச்சரோ, எந்த ஒரு பிராந்திய கட்சியோ கண்டுகொள்ளவே இல்லை என்பதெல்லாம் உண்மையிலேயே இவர் படைப்பாளி தானா என்ற எண்ணத்தையே மனதில் ஏற்படுத்துகிறது.

‘எல்லா கார்ப்பரேட் கம்பெனியையும் இழுத்து மூடு’ என்பது போலவே காட்சிகள் காரணமின்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் நாம் அன்றாட வாழ்வில் செய்யும் விஷயங்களை கூட அரசியல் அடிப்படை புரிதல் இல்லாமல் கண்மூடித்தனமாக எதிர்த்தால் என்ன அர்த்தம் இயக்குனரே என்றே கேட்க தோன்றுகிறது.

எப்படி வேண்டுமென்றாலும் தொடர் எடுக்கலாம், யார் கேட்க போவது என்பது போன்ற பிம்பமாகவே இத்தொடர் இருக்கிறது. எப்படிப்பட்ட கதையையும் பூசி மொழுகி மக்களிடம் கொண்டு சேர்த்துவிடலாம் என்ற எண்ணம் படைப்பாளர் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பதாகவே இது பலரால் பார்க்கப்படுகிறது.

அதற்காக 1% கூட பார்க்கும்படியான காட்சிகள் அமைக்கப்படாவிட்டால் எப்படி?

இத்தொடரின் ஒரே நோக்கமாக இந்துக்களின் தெய்வங்கள் அவமதிக்கப்பட வேண்டும். இது ஏற்புடைய கதையம்சம் அல்ல என்றாலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதால் குளிர் காய்வோரை நிச்சயம் இந்த தொடர் சென்றடையும் என்ற எண்ணமே பிரதிபலிப்பதாக டிவிட்டரில் பலரும் தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

தண்டவ் தொடரை அமேஷான் ஒ.டி.டி தளம் வாங்கிவிட்டதால் அது விதிமுறைகளுக்கு உட்பட்டதாக நினைத்துக்கொள்கிறது. இந்துக்களையும் அவர்கள் தினமும் வழிபடும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது எந்த விதத்தில் விதிமுறைக்கு உட்பட்டிருக்க முடியும், கருத்து சுதந்திரம் என்பது சரியான கருத்தை கொண்டு சேர்ப்பது தானே ஒழிய, தவறான கருத்தை கொண்டு சேர்ப்பதை எப்படி சரியாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் தான் ஒ.டி.டி தளங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமெனவும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓரிரு காட்சிகளை நீக்குவது மட்டுமே தணிக்கை குழுவின் வேலை இல்லை என்றும் படம் அல்லது தொடர்களின் காட்சிகள் பிறர் மனதை புண்படுத்தும் பட்சத்தில் அவை அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆரம்ப காட்சியே இந்துக்களை இழிப்படுத்துவது போல் அமைக்கப்படும்போது கடவுளை நம்புபவர்கள் வெறுப்பவர்கள் என இருதரப்பினரிடமுமே இத்தொடர் சென்று சேரும் என்ற யுக்தி கையாளப்பட்டிருப்பது தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது. அதற்காக மற்றவர் மனதை காயப்படுத்தி கல்லா கட்ட நினைப்பது சரி தானா எனவும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமேஷான் பிரைம் இது போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளை மட்டுமே வழங்காமல் ஒரு சில பொருளை வேகமாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கவும் செய்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் தவறான கருத்துக்களை பிரதிபலிக்கும் படம் மற்றும் தொடர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை அமேஷான் தவிர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்கள் வீடுகளில் இருக்கும்போது கார் ரேஸ், ஐ.பி.எல் போட்டி, நல்ல தொடர்கள் போன்றவற்றை பார்க்க விரும்புவது இயல்பான ஒரு விஷயம். அதனை தரமாக, மற்றவர் மனம் புண்படாத வகையில் இருக்கும் பொழுபோக்கு அம்சத்தை மட்டும் ஒ.டி.டி தளங்கள் அனுமதிப்பதே அதன் மீதான நம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்பதே எல்லோருடைய கருத்து.

நல்ல கதைகளை ஊக்குவிப்பதும் திறமைசாலிகளை ஊக்குவிப்பதும் மட்டுமே ஒரு துறையின் தார்மீக பொறுப்பு. ஒருவர் மனதை புண்படுத்தி அதில் குளிர் காய்ந்து கல்லா கட்டுவதென்பது ஒரு நல்ல படைப்புக்கு என்றுமே அழகல்ல. நிதி திரட்டி எடுக்கப்படும் சிறந்த படைப்பையே எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள். எல்லோரும் அதை கொண்டாடுவார்கள். இழிவுப்படுத்தி எடுக்கப்படும் எந்த படைப்பும் ஆக சிறந்த படைப்பாக இருக்கவே முடியாது.

தண்டவ் தொடர் அமேஷான், டிஸ்னி, நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் சட்டத்துக்கு புறம்பாக வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால் இது நல்ல ஒரு படைப்பாளரை நாளை உருவாக்காது. மாறாக, இப்படி வெளியிட்டு நாமும் பணம் சம்பாதிக்கலாம், யார் மனம் புண்படுவது பற்றிய கவலை எமக்கில்லை என்ற தவறான வழிகாட்டியாகவே இது அமையக்கூடும்.

இது போன்ற பிறர் மனம் புண்படும் கதைகளுக்கு ஆஸ்கார் பரிந்துரைக்கப்படாத வரை மகிழ்ச்சியே.

Source : Swarajya magazine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here