டிசம்பர் 25
பிற்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக பொத்தானை அழுத்தியவுடன் 2,000 ரூபாய் உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரே சமயத்தில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பதிவு செய்த 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணையைப் பெறுவார்கள்.
இதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.
இந்த நாள் நாட்டின் அன்னதானம் செய்யும் விவசாயிகளின் வாழ்வில் முக்கியமான நாள் என்று பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.