காது மூக்கு குத்துவது உள்ள அறிவியல் பின்னணி !!!

நாம் பிறந்தது முதல் பல்வேறு வகையான சடங்குகள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்து ஒரு அங்கமாக உள்ளது. அறிவியலில் பல மாற்றங்கள் வந்துவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் பின்பற்றும் ஒவ்வொரு சடங்கையும் சிலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர், சிலர் கேலி செய்கின்றனர். இன்னொருபுறம் இதில் விஞ்ஞானம் அடங்கியுள்ளதா என்ற இன்றைய இளைய தலைமுறையினரின் கேள்விகளுக்கு நம்மில் பலருக்கு சரியான பதில் இல்லை. இப்படி நாம் பின்பற்றும் ஒவ்வொரு சடங்கிற்குப்பின் இருக்கும் அறிவியலை இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறையினருக்கும் எடுத்துரைக்கும் கடமையின் வெளிப்பாடாக இந்த கட்டுரை அமையப் பெற்றிருக்கிறது.

ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளை மட்டும் வேட்டையாடி இருந்த காலத்திலே, இங்கே நாம் விவசாய வளர்ச்சியும் நமக்கென்று ஒரு மொழியையும் இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து உருவாக்கிய மாபெரும் கலாச்சாரத்துடன் நாம் வாழ்ந்தோம் என்பதை நம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக நம் முன்னோர்கள் காலத்தில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அடிப்படை சூழ்நிலையை உருவாக்குவதில் தான் கவனம் செலுத்தினார்கள். அப்படி கவனித்து உருவாக்கிய ஆரோக்கியத்திற்கான பல படிகளில் அனைவரும் எளிமையாக பின்பற்றும் விதமாக இதனை நாம் ஒரு சடங்குகளாக உருவாக்கினோம்.
இதில் நாம் பிறந்து ஒரு சில வருடங்களில் செய்யும் காது குத்துதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து செய்யும் மூக்கு குத்துதல் நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பல வழிகளில் உதவி செய்கிறது.
நம் உடலின் சக்தி மண்டலங்களை சீராக வைப்பதற்கு காது குத்துதல் என்பது ஒரு மிகப்பெரிய பங்காற்றுகிறது. நம் உடலின் சக்தி மண்டலங்களில் காது, மூக்கு, தொண்டை குழி, மோதிரவிரல், கால்களில் சில விரல்கள் போன்றவை முக்கியமான மையமாக இருக்கிறது. எனவே இதற்காக இந்த இடங்களில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் (ஒரு உலோகத்தின் உதவியுடன்) நமது சக்திமண்டலம் தூண்டப்படுகிறது.

எனவே காது மற்றும் மூக்கு குத்துதல், காலில் மெட்டி அணிதல், மோதிர விரலில் மோதிரம் போன்ற உலோகங்களை பயன்படுத்தி இந்த அழுத்தத்தை தொடர்ந்து தக்கவைக்க இந்த சம்பிரதாயங்களை நம் உருவாக்கினோம். இதனால் நமது ஆரோக்கியம், மனஉறுதி, சமநிலை ஆகியவை மேம்படுகிறது.
அறிவியல் பின்னணி

சீன மருத்துவ முறையான அக்குபஞ்சரின் கூற்றுப்படி, காது மடலுக்குப் பின்னால் இயற்கையான, நுண்ணிய சக்திமையப் புள்ளி உள்ளது, இது ஆஸ்துமா, இருமல் மற்றும் காசநோய் போன்ற நோய்களுடன் தொடர்புடைய நரம்பு முடிவுகளைக் கொண்டுள்ளது. மேலும் சில நோய்களுக்கான மூல காரணம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் நுட்பமான புள்ளிகளில் இருப்பதாகவும், அந்த புள்ளியில் குறிப்பிட்ட அழுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் அது தொடர்புடைய நோய் நீக்கப்படும் என்றும் அக்குபஞ்சர் மருத்துவம் கூறுகிறது.
இதன் அடிப்படையிலேயே அலகு குத்துதல் என்ற ஒரு வழிபாட்டு முறையும் உருவானதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது பக்தியின் காரணமாக அது மிகைப்படுத்தி புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் மேற்கத்திய அறிவியலிலும் பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

மேற்கத்திய அறிவியலின் ஆராய்ச்சி

ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டியின் மருத்துவ துறை (School of Medicine) தலைமையிலான ஒரு ஆய்வு, இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படுத்தப்படும் அழுத்தத்தின் மூலம் எவ்வாறு உயிரணுக்கள் ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று ஒரு ஆய்வு நடத்தியது. இதன் மூலம் அழுத்தம் ஏற்படும் நேரத்தில் அட்ரீனல் சுரப்பிகளால் வெளியிடப்பட்ட மூன்று ஹார்மோன்களால் உடல் முழுவதும் உயிரணுக்களின் நோயெதிர்ப்பு சக்தியானது பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை ஆய்வு ரீதியாக கண்டறிந்து கூறியுள்ளனர்.
எனவே காது குத்துதல் உடலில் ஆன்டிஜென் – ஆன்டிபாடி எதிர்வினையைத் தொடங்குகிறது, அவ்வாறு செய்வதன் மூலம் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது.
மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை, ஹிப்போகிரட்டீஸ், (கி.மு 470) காது குத்துதல் மற்றும் காதணி அணிவது மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாகவும், சிகிச்சையாகவும் இருக்கும் என எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேதங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த விஞ்ஞானம்

நம் பாரத கலாச்சாரத்தில், இது கர்ணவேதா (Karna Vedha – காது குத்துதல்) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஒரு மனிதனுக்கு நிகழ்த்தப்படும் 16 சடங்குகளில் ஒன்றாகும். பண்டைய இந்தியாவில் ஆயுர்வேத ஆராய்ச்சியாளரும் அறுவைசிகிச்சை நிபுணருமான சுஸ்ருதா (கிமு 6 ஆம் நூற்றாண்டு) “குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மற்றும் அலங்காரத்துக்காகவும் காதணி இட வேண்டும்.” எனக் கூறுகிறார். ஹைட்ரோசெல் மற்றும் குடலிறக்கத்தைத் தடுக்க காது குத்துதல் மற்றும் காதணி அணிவதன் முக்கியத்துவத்தை அவர் வெளிப்படையாக பரிந்துரைக்கிறார். மேலும் அவர், இந்த சடங்குகள் எந்த முறையில் நடக்க வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.

மூக்கு குத்துதல்

நம் கலாச்சாரத்தில் காது குத்துதல் என்பது குழந்தை பிறந்த ஒன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள்ளாக ஆண் பெண் என இருபாலினருக்கும் செய்யப்படுகிறது, ஏனெனில் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டல வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான உதவிகளை செய்கிறது, ஆனால் மூக்கு குத்துதல் என்பது ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னே அதுவும் குறிப்பாக பெண்களுக்கான ஒரு சடங்காக அது இருக்கிறது. அது ஏன் இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதில்தான் நம் முன்னோர்களின் மெய்ஞான அறிவியல் ஓங்கியிருக்கிறது.

நம் உடலின் ஆறு உணர்வு உறுப்புகளில் ஒன்றான மூக்கு பல்வேறு நறுமணங்களை சுவாசிக்கவும், வாசனைகளை நுகரவும் உதவுகின்ற ஒரு உணர்வு உறுப்பு மட்டும் அல்ல, இது கூடுதலாக வெவ்வேறு உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, எடுத்துக்காட்டாக, நம் உடலின் ஆற்றல், உணர்வுகள் மற்றும் பாலியல் உணர்ச்சிகள். மூக்குத்தியுடன் கூடிய பெண் உணர்ச்சி ரீதியாக திடமானவராகக் காணப்படுகிறார்., மூக்குத்தி அணியும் பெண்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, ஹிப்னாடிஸ் செய்வது அல்லது மயக்குவது மிகவும் கடினம், ஏனெனில் இது மூளையின் அதிர்வலைகளின் நீளத்தை இது கட்டுப்படுத்துகிறது, இதனால் ஹிப்னாடிஸ் செய்ய முயற்சிப்பவரிடம் இருந்து அவர்களை பாதுகாக்கிறது.

கருப்பை பலப்படுத்துகிறது

நாசியில் துளையிடும் புள்ளி கருப்பையை வலுப்படுத்துகிறது, இதன் மூலம் ஒரு பெண்ணின் பாலுணர்வில் நேர்மறையான மாற்றங்களையும், அவரது உடலில் குழந்தை பிறப்பதற்கு சாதகமான நிலைமைகளையும் கொண்டுவருகிறது. ஒரு பெண் திருமணத்திற்குத் தயாரானபோது, பெரும்பாலான கலாச்சாரங்கள் நாசியின் புள்ளியில் துளையிடுவதையும் மூக்குத்தி அணிவதையும் வலியுறுத்துகின்றன.

மூக்கில் துளையிடப்படும் இடம் பிரசவத்துடன் தொடர்புடைய அக்குபிரஷர் புள்ளியாகும், மேலும் இந்த இடத்தில் மூக்கு குத்தும்போது பெண்கள் குறைவான சிக்கல்களுடன் பிரசவத்தின்போது குறைந்த வலியை உணர்கிறார்கள்.
ஆண்களுக்கு மூக்குத்தி அணிய எந்த காரணமும் இல்லை. அவர்களுக்கு சமாளிக்க மாதவிடாய் பிரச்சினைகளும் இல்லை அல்லது குழந்தை பிறப்புக்குத் தேவையும் இல்லை.
இன்றைய மருத்துவ முறைகளில் கூட, மனிதர்களின் பாலியல் உற்சாகத்தின் போது மூக்கில் பஞ்சுபோன்ற திசுக்களின் வீக்கம் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுகின்றன என்று சந்தேகம் இல்லாமல் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் நாசிப் பகுதிகள் மாதவிடாய் காலத்தில் வீங்கி, அவ்வப்போது இரத்தம் வருகின்றன. டாக்டர் சிக்மண்ட் பிராய்டின் கூட்டாளியும் நெருங்கிய நண்பருமான திரு. வில்ஹெல்ம் ஃப்ளைஸ் (மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், கி.பி. 1858-1928) மூக்கிற்கும் பெண் பாலியல் உறுப்புக்கும் இடையில் ஒரு விசித்திரமான தொடர்பை கண்டறிந்தார், மேலும் மூக்கினை சரியாக வைத்திருப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பலவித நோய்களில் இருந்து அவர்களை குணப்படுத்த முடியும் என்று கருதினார்.

காது மற்றும் மூக்கு குத்துதலில் உள்ள பொதுவான பலன்கள்

ஆயுர்வேதத்தின்படி, இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான உதவிகளை செய்கிறது. மேலும் பெண்களின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியையும் பராமரிக்க உதவுகிறது.
குழந்தைகளின் சிறு வயதிலேயே காது குத்துவது சரியான மூளை வளர்ச்சியை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
காதுகளின் மையப் புள்ளி என்பது பார்வைக்கான மையம் அமைந்துள்ளது. எனவே, இந்த புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பது கண்பார்வை மேம்படுத்த உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here