‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அநேகமாக அது படத்தின் சிங்கிள் டிராக் அல்லது பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here