கிருஸ்தவமயமாகும் ஆந்திரா! ஆதரவு தரும் மாநில அரசு!!

ஆந்திராவில், கடந்த சில வருடங்களாக இந்து கோவிலை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதில் காழ்புணர்ச்சியால் கோவில்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மாநில அரசோ மவுனம் காக்கிறது.

இந்து கோவில்களை முறையாக பராமரிக்க கோரும் உரிமைகளை, அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை. மாறாக கோயில் நிர்வாகங்களில் கூட கிருஸ்தவர்களை நியமித்து இந்துக்களுக்கு மன உளைச்சலை கொடுப்பதோடு, இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர மறைமுகமான ஆசியும் வழங்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் கிருஸ்தவரான முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியை மதமாற்ற கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது, ஆட்சி அதிகாரம் கிருஸ்தவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று வலுவான குற்றச்சாட்டை ஆந்திர இந்துக்கள் வைக்கின்றனர்.

புதிதாக கிருஸ்துவ மதத்துக்கு மாறியவர்கள் சிவாலயங்களை தாக்கினார்கள். பல கோயில்கள் இடிக்கப்பட்டன. மதச்சார்பின்மை பேசும் போலி மதச்சார்பின்மைவாதிகள் இது குறித்து முணுமுணுக்கக்கூட முன்வரவில்லை.

செயின்ட் பிரான்சிஸ் சேவியர், கோவாவில் இளைஞர்களை மதமாற்றம் செய்தபோது, இந்து ஆலயங்களுக்கு எதிராக ஈடுபட்ட காழ்ப்புணர்ச்சியை கடிதத்தில் விவரித்திருந்தார்.

அவர் எழுதிய கடிதத்தில்,

கிருஸ்துவர்களாக மாறியவர்களை இதன் மூலம் நீங்கள் புரிந்துக்கொள்ளலாம். எப்போதுமே ஞானஸ்தானம் செய்வேன், இதிலிருந்து என் கைகளை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஒரே நாளில் ஒரு கிராமத்தை கூட ஞானஸ்தானம் செய்துள்ளேன். இதனால் என் வலிமையை கூட இழந்துவிட்டேன். குழந்தைகளை ஞானஸ்தானம் செய்வதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி மூலம் இந்த பலவீனத்தை மறைத்துக்கொள்வேன். இந்த பிள்ளைகள், கடவுளின் கிருபையால் தங்களுடைய அப்பாவை விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள். நம்முடைய மதத்தை பரப்புவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். உருவ வழிபாடு பற்றிய அவர்களுடைய வெறுப்பு அருமையான விஷயமாகும். அவர்கள் இந்த உருவ வழிபாட்டை பற்றி மற்றவர்களிடம் சண்டையிடுகிறார்கள். அவர்களுடைய பெற்றோர், உருவ வழிபாட்டை திணிக்கும்போதெல்லாம் அதனை வெறுக்கிறார்கள். அவர்கள் பெற்றோர் காட்டிய வழியில் ஆசியை பெற்றதை விட, அவமானங்களையே அதிகம் பெற்றுள்ளார்கள். குழந்தைகளை மதிக்காமல் சிலைகளை மதிப்பதால் அவர்கள் வருத்தப்படுகிறார்கள், உடைக்கிறார்கள், மிதிக்கிறார்கள், அவர்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்கள்.

இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது. இதே நிலை தான் தற்போது ஆந்திராவில் நிலவுகிறது.

இது ஜப்பானிலும் இன்றைய கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கிருஸ்துவர்களாக பெரும்பாலானோர் மாறிய போது, நாகசாகி மாகாணத்தின் ஷிண்டோ கோயில்கள் அழிக்கப்பட்டன.

ஒரு மோசமான வரலாற்று சம்பவம், பிஷப் தியோபிலஸ் தலைமையில் அலெக்ஸ்சான்டராவில் நூலகம் இடிக்கப்பட்டதும், செராபிஸ் கோயில் அழிக்கப்பட்டதுமாகும்.

2011ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, ஆந்திராவில் 6.8 லட்சம் கிருஸ்துவர்களே இருந்தனர்.

குண்டூர் மாவட்டத்தில், 1971ஆம் ஆண்டில் 14.2 சதவிகித கிருஸ்துவர்களும், 2011 ஆம் ஆண்டில் 1 சதவிகிதத்துக்கு குறைவான கிருஸ்துவர்களுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது 4.2 லட்சம் கிருஸ்துவர்கள் 1971இலும் 90,000 மட்டுமே 2011 லும் இம்மாவட்டத்தில் இருந்துள்ளனர்.

இன்னொரு பக்கம், இதே மாவட்டத்தில் பட்டியலின மக்கள் 1971இல் 4.8 சதவிகிதமும் 2011இல் 19.59 சதவிகிதமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போதைய புள்ளிவிபரப்படி கிருஸ்துவர்களின் எண்ணிக்கை ஆந்திராவில் அதிகரித்தது தெரியவருகிறது.

பல்வேறு கிருஸ்தவ அமைப்புகளின் தரவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரபடி,

ஆந்திராவில் ரோமன் கத்தோலிக்க மற்றும் தென்னிந்திய தேவாலய கணக்குப்படி 26.8 லட்சம் கிருஸ்துவர்கள் இருப்பதாக காட்டப்படுகின்றன. இது 2020 ஆம் ஆண்டின் ஆந்திராவின் மக்கள் தொகையில் சுமார் 4.9 சதவிகிதமாகும்.

செவென்த் டே அட்வென்டிஸ்ட் தரவுப்படி 1,945 கட்டிடம், அவற்றில் 4,22,199 கிருஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெந்தேகோஸ்தே சபை, தெலுங்கு ஏவாஞ்செலிக்கல் லூத்தேரான், பப்டிஸ்ட், மெத்தடிஸ்ட் போன்றவை தங்கள் புள்ளிவிபரங்களை ரகசியமாக வைத்திருக்கின்றன. ஆனாலும் தெலுங்கு பப்டிஸ்ட் பிரிவில் 8.4 லட்சம் பேரிலிருந்து 10 லட்சம் பேர் வரை இருக்கின்றனர் என்று நம்பத்தகுந்த வட்டாரம் கூறுகிறது. தெலுங்கு ஏவாஞ்செலிக்கல் லூத்தேரான் பிரிவில் இதே எண்ணிக்கை 30 லட்சம் என்றும் தெரியவருகிறது.

இந்த இரு பிரிவை தவிர, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 13,000 பாதிரியார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் தோராயமாக 5-10 லட்சம் கிருஸ்துவர்கள் சிறிய சுதந்திரமாக செயலாற்றக்கூடிய சபைகள் மூலம் ஆந்திர பிரதேசத்தில் உள்ளது தெரியவருகிறது.

இதனடிப்படையில் பார்த்தால் ஆந்திராவில் தற்போது கிருஸ்தவர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தை தாண்டியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர பிரதேச அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆந்திர பிரதேச அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020 ஆம் ஆண்டில் 29,841 பாதிரியார்களும், 31,017 இந்து அர்ச்சகர்களும், 7,000 இமாம் மற்றும் மௌஸாம் இருப்பதாக கூறுகிறது.

இந்து மற்றும் கிருஸ்துவ மத குருக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரிசமமாக உள்ளது.

கிருஸ்துவ குருக்களின் எண்ணிக்கை வைத்து பார்க்கும்போது ஆந்திர பிரதேச மக்கள் தொகையில் குறைந்தது 20 சதவிகிதமாவது கிருஸ்துவர்கள் இருப்பார்கள் என்பது தெரிய வருகிறது.

இந்து குருக்களுக்கு அந்த கோவில் நிர்வாகங்களின் வரவு செலவு திட்டத்தை பொறுத்து பணம் வழங்கப்படுகிறது. ஆனால், கிருஸ்துவ பாதிரியார்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசு நிதி வழங்குகிறது.

ஆந்திர பிரதேச அரசாங்கம், சுமார் 30,000 பாதிரியார்களுக்கு ஒவ்வொரு முறையும் நிதி வழங்குகிறது. அவர்களில் சி.எஸ்.ஐ, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த 6200 பாதிரியார்களை ஒதுக்கினால், ஒவ்வொரு சபைக்கும் ஐந்து போதகர்கள் என்ற விகிதத்தில், லூத்தேரான் மற்றும் பப்டிஸ்ட் பிரிவினர்களில் 23,800 பாதிரியார்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சில் ஒரு பாதிரியாருக்கும், சபையில் ஒரு ரோமன் கத்தோலிக்க பிரிவினருக்கும் இது கிடைப்பதாக வைத்துக்கொள்வோம்,

மேலோட்டமாக பார்த்தால், 1,255 முக்கிய ரோமன் கத்தோலிக்க பிரிவின தேவாலயங்களுக்கு இது கிடைக்கும். இதனை வைத்துக்கொண்டு நிலங்களை வளைத்துப்போட்டு முக்கிய நகரங்களில் கட்டிடம் கட்டப்படுகின்றன.

ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 195 நகர்ப்புற மற்றும் பாதி நகர்ப்புற பகுதிகள் உள்ளன. இவற்றுள் ஒவ்வொரு இடத்திலும் 2 பெரிய தேவாலயங்கள் உள்ளது என வைத்துக்கொள்வோம்.

2017 நிலவரப்படி ஆந்திராவில் மட்டும் 16,158 கிராமங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு 18 கிராமங்களுக்கும் ஒரு முக்கிய பெரிய தேவாலயமும் அமைந்திருந்தது.

23,800 பாதிரியார்கள் என வைத்துக்கொண்டால், 23,800 தேவாலயங்கள் கூடுதலாக இருக்கும். ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தேவாலயங்கள் நிச்சயம் இருக்கும் என தெரிய வருகிறது.

3.8 கோடி மக்களை கொண்ட போலாந்து நாட்டு தேவாலயத்துடன் 5.4 கோடி மக்களை கொண்ட ஆந்திரா தேவாலயம் ஒப்பிடப்படுகிறது.

போலந்தில் 97 சதவிகித மக்கள் கத்தோலிக்க பிரிவினத்தவர். மக்கள் தொகையில் 42 சதவிகித பேர் வழக்கமாக சர்ச் செல்வோர்.

ஆந்திராவில், கிருஸ்துவ மதம் இரு நூற்றாண்டுகளுக்கு குறைவானது. ஆனால், 1200 வருட கிருஸ்துவ வரலாறை கொண்ட போலந்தை விட எப்படி ஆந்திராவில் இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதே பலரது சந்தேகம்.
ஆந்திராவில் தீவிரமாக போட்டிப்போட்டு கிருஸ்துவ மதம் பரப்பப்பட்டு வருகிறது.

சில கேள்விகளும் எழுப்பப்படுகின்றன…

ஆந்திராவில் மக்கள் தொகையை விட தேவாலய எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த அளவுக்கதிகமான தேவாலயங்களின் நோக்கம் தான் என்ன?

இந்த கட்டிடங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? பழைய தேவாலயங்கள் காலனித்துவ நிர்வாகத்தால் கட்டப்பட்டது. ஆனால், இப்போது வாங்கப்பட்டுள்ள, கட்டப்பட்டுள்ள தேவாலயங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? பொது நிதி திரட்டி கூட கட்ட இது சாத்தியமில்லையே!

இந்த கட்டிடங்களின் உரிமையாளர் யார்? சந்தேகத்துக்குரிய ரியல் எஸ்டேட் பண பரிவர்த்தனைகளை மறைக்க பினாமி பேரில் வாங்கப்பட்டதா இந்த சொத்துக்கள்?

தேவாலயங்கள் குறித்த இது போன்ற சந்தேக கேள்விகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அவ்வப்போது செய்து இது போன்ற செயல்பாடுகள் மறைக்க பார்க்கப்படுகிறதா என்ற கேள்வியும் பலர் மனதில் எழுகிறது.

ஆந்திராவில் தேவாலயத்துக்கு யாராவது சென்றால் காட்டப்படும் கிருஸ்துவர்களின் எண்ணிக்கை கணக்கு 12 சதவிகிதம் தான்.

ஆனால் காணப்படும் மத போதகர்களும், பாதிரியார்களும், தேவாலய கட்டிட எண்ணிக்கையையும் வைத்து பார்க்கும்போது மாநிலத்தின் 20 சதவீதம் பேர் கிருஸ்தவர்களாக்கப்பட்டுள்ளனர்.

எது எப்படியோ, மாநில அரசின் துணையோடு இந்து மதம் அழிக்கப்பட்டு வருவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இந்து இயக்கங்களும் இந்து மக்களை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக இறங்க வேண்டும். இந்து மக்கள் மதமாற்ற அரசாங்கத்தை அடுத்த தேர்தலில் தூக்கி எறிய வேண்டும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here