குறையவில்லை பாதிப்பு: புதிதாக 10,584 பேருக்கு கரோனா தொற்று

3

கரோனா பாதிப்பு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் நாடுமுழுவதும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10,584 ஆக உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,10,16,434 ஆக அதிகரித்துள்ளது.


கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,12,665 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 13,255 குணமடைந்துள்னர்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதேசமயம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,47,306 ஆக உள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 78 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,463 ஆக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் மொத்தம் 1,17,45,552 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here