குளித்ததும் முதலில் முதுகை துடைக்க வேண்டும் என்பது மூடநம்பிக்கையா?

குளித்தபின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை.
இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷயம் அடங்கியிருக்கின்றது. நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. அவை நன்மையையும், தீமையும் ஆகும். ஸ்ரீதேவி நன்மையென்றும், மூதேவி தீமையென்றும் உணர வேண்டும்.
நாம் தலையில் குளிப்பதற்காக நீர் ஊற்றும்போது ஸ்ரீதேவியும், மூதேவியும், நம் உடலிலிருந்து வெளியேறுகின்றனர்.

குளித்து முடிந்தவுடன் தமக்குள், யார் முதலில் நம் உடலில் திரும்ப நுழைய வேண்டுமென போராட்டம் நடத்திக்கொண்டிருப்பார்கள். இந்தப் போட்டியில் மூதேவியே வெற்றி பெறுவாள், ஏனெனில் தீமைதான் முதலில் நம்முள் சுலபமாக முதலில் நுழைந்து விடுவதை நாம் அனுபுவபூர்வமாக காண்கிறோம்.

உடலில் எந்தபாகத்தில் முதலாவதாக ஈரம் துடைத்து சுத்தமாகிறதோ அந்தப்பக்கம் மூதேவி நுழைந்து விடுவது வழக்கம். ஆகையால் முதுகுப்பக்கம் முதலில் துடைத்தால் மூதேவி முதுகுப்பக்கம் நுழைந்து நம் முன்பக்கமகிய முகத்தில் ஸ்ரீதேவி வந்து தங்கி நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்தை நமக்கு அளித்திடுவாள்.

இதன் மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியதுதான். அதாவது அன்றய நாள் அம்போ! இதை மனத்தில் வைத்து நம் முன்னோர்கள் முதலில் முதுகை துடைக்க வேண்டுமென்ற போதனையை சொல்லி பின் தலைப்பக்கம் துடைக்கக் கூறியுள்ளனர்.இதை கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்றெண்ணி தள்ளிவிட வேண்டாம். இந்த நம்பிக்கையின் பின்னால் ஒரு மகத்தான அறிவியல் அடங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் ஆசாரியர்கள் இந்த போதனையை நமக்குத் தந்திருக்கமாட்டார்கள்.

குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவிகின்றது. மிக அதிகமாக குளிர் அனுபவப்படுவது முதுகுப்பக்கம். முதுகெலும்பு அதிக நேரம் குளிர் ஏற்கவேண்டி இருப்பதால் நோய்வாய்பட வாய்ப்புண்டு.

இதனால் உண்டாகும் தீங்கை தவிர்க்கவே குளித்தவுடன் முதுகை துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர் என்றும் சொன்னால் மிகையாகாது. ஆனால் ஒரு வாளி குழாய் தண்ணீரில் குளித்து முடிப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது. பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளுமையாக ஒழுகும் நதியிலோ, குளத்திலோ, நெடு தூரம் நடந்து, நெடு நேரம் நன்கு மூழ்கிக் குளிப்பவர்களுக்காக வகுக்கப்பட்ட விதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here