குளிர் காலத்தில் குளிக்கச்சிறந்தது ஆற்று நீரா? கிணற்று நீரா?

குளிர் காலத்தில் நதிகளிலுள்ள நீருடன் ஒப்பிடும் போது கிணற்று நீர் குளிர் குறைந்ததாக இருப்பதனால் குளிர்காலத்தில் கிணற்று நீரில் குளிக்கவே விரும்புவர்.மெதுவாகச் சூடாகுவதும், மெதுவாகக்குளிர் வதும் நீரின் தன்மை. நீர் மெதுவாக ஆவியாகும் போது குளிர் கூடுதலாயிருக்கும்.

பெரிய பாத்திரங்களிலும் நதிகளிலும் நீர் விரைவில் ஆவியாகும். வாயுமண்டலத்தை நீர் மேல் பரப்பு சார்ந்திருப்பதால் ஆவியாதல் விரைவில் நிகழ்கின்றது. ஆவியாதலுக்கு வேண்டிய வெப்பம் நீரிலிருந்து எடுத்துக்கொள்வதால் நீர் அதிக குளிரடைகின்றது,ஆனால் குளிர் காலத்தில் வெப்பநிலை குறைந்திருப்பதால் ஆவியாதலும் குறைவாக நிகழ்கின்றது.

ஆவியாதல் குறைவானதால் கிணற்று நீரிலிருந்து சிறிது வெப்பமே நஷ்டமாகின்றது. நீர் மேல் பரப்பு வாயு மண்டலத்தை சார்ந்திருக்கும் நதிகளில் நீர் அதிக குளிருள்ளதாயிருக்கும். ஆனால் ஆறுகளுக்குள் மனசாட்சியே இல்லாமல் கழிவு நீரை விடுவதும், கிணற்றில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் வற்றிப்போயிருப்பதும் பாத்ரூம் குளியலையே நமக்கு தருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here