தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் கொடுத்தது வருகின்றனர். குறித்து நீதிபதிகளே ஆய்வு செய்ய நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
இது தொடர்பான பொதுநல மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “தமிழகத்தில் மதுபானம் உரிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த முதல் கட்டமாக 3000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மது வாங்க வரும் பெரும்பாலானவர்களும் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருவதாகவும், கூடுதல் விலைக்கு மதுவை விற்பது, அவர்களிடமே கொள்ளையடிப்பது போல உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.