கேரளாவில் வலுவாக காலூன்றும் பா.ஜ.க!!

235

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு சட்டசபைத்தேர்தலிலும் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் மாறிமாறி ஆட்சியை பிடித்து வருகின்றனர். ஆனால் இந்த தேர்தலில் மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் வலுவான அடித்தளம் உள்ள மாநிலம் என்றாலும் இதுவரை பா.ஜ.க பெரும் வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தியே வந்துள்ளது. 2016 தேர்தலில் முதன்முதலாக எம்எல்ஏ சீட் ஒன்றையும் கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சி வலுவிழந்துவிட்ட நிலையில், இந்த தேர்தலில் பா.ஜ.க ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன.

கேரளாவின் 2 முக்கிய டிவி சேனல்களான ஏசியாநெட் நியூஸ் மற்றும் 24 நியூஸ், நடத்திய கருத்துக்கணிப்பில், 68 முதல்78 சீட்களையும் இடது ஜனநாயக முன்னணி கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. 2011, 2016 தேர்தல்களின் போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் சரியாக இருந்ததால், இந்த முறை இடது முன்னணிக்கு 80 சீட்களுக்கு மேல் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

ஏபிபி நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் வரும் தேர்தலில் இடது முன்னணிக்கு 83-91 சீட்கள் வரை கிடைக்கும் என கூறுகிறது. இடது ஜனநாயக முன்னணிக்கு 40% வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 33% வாக்குகளும், பா.ஜ.கவுக்கு 13% வாக்குகளும் கிடைக்குமென இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

கேரளாவின் மற்ற கட்சிகளுக்கு 15% வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறது.

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று எந்த கருத்துக்கணிப்பும் கூறவில்லையா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் ஏற்பாட்டில் ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 73 இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது.
அப்படி என்றால், இந்த தடவை, ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிக்கு வெற்றி வாய்ப்பே இல்லையா?

இதன்படி பார்த்தால், இனிமேல் காங்கிரஸ் கூட்டணியால் 1991 (90 சீட்கள்) மற்றும் 2001 (99 சீட்கள்) பெற்றது போன்ற மகத்தான வெற்றியை பெற முடியாது என்பது தெள்ள தெளிவாகிறது. இக்கட்சி மெல்ல, இந்து ஓட்டுக்களை பா.ஜ.க-விடமும், முஸ்லீம் ஓட்டுக்களை இடது ஜனநாயக முன்னணி கட்சியிடமும் பறிக்கொடுத்து வருகிறது.

பெரும்பாலும் தேர்தல்களில் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை கணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், கேரளாவில் இதுவரை சர்வே முடிவுகள் சரியாகவே இருந்து வந்துள்ளன.

பா.ஜ.க, போன முறை வெற்றி பெற்ற இடமான நேமம் தொகுதியை தக்கவைத்துக்கொள்ளுமா என்பது பெரிய கேள்வி. அதே சமயம், 2016-இல் வெறும் 89 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் (பா.ஜ.க-வின் தற்போதைய மாநில தலைவர் சுரேந்திரன் நின்ற இடம்) தோற்றது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நேமம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன், இடது ஜனநாயக முன்னணி கட்சி கடுமையாக போட்டியிடும் என தெரியவருகிறது. அதே சமயம், மஞ்சேஸ்வரம் தொகுதியில் பா.ஜ.க, முஸ்லீம் லீக் வேட்பாளருடன் நேருக்கு நேராக மோத வாய்ப்புள்ளது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க பெரிய வெற்றி ஏதும் பெறவில்லை. ஆனாலும் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் சவாலை கொடுக்கும். மஞ்சேஸ்வரம் தொகுதியில் பா.ஜ.க-வுக்கு 33.91% வாக்கும், ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிக்கு 33.66% வாக்கும் கிடைக்கலாம் என்கிறது. அதனால், மஞ்சேஸ்வரம் தொகுதியிலும் கடுமையான போட்டி உண்டாகும். அதோடு, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய வாய்ப்புள்ளது.

மஞ்சேஸ்வரம் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணிக்கு 31.5% வாக்குகள் கிடைத்தால், பா.ஜ.க 34% எடுத்தாலே வெற்றிப்பெற போதுமானது.

அதேசமயம் நேமம் தொகுதியில், ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதால் 16-17% வாக்குகளையே பெறக்கூடும் என தெரியவருகிறது. அங்கு வெற்றிபெற பா.ஜ.க, 41% வாக்குகளை பெற வேண்டும்.

மூன்றாவது இடத்தில் இருக்கும் கட்சி 16% வாக்குகளுக்கு மேல் பெறும்போது, வெற்றி பெற வேண்டிய கட்சியின் வாக்கு ஒவ்வொரு முறையும் 2 சதவிகிதம் குறைந்துக்கொண்டே வரும். அப்படி பார்த்தால் வெற்றிபெற வேண்டிய கட்சி 42% வாக்குகளுக்கு குறைவாக இருக்கக்கூடாது.

ஓர் உதாரணத்துக்கு, மூன்றாவது இடத்தை பிடிக்கும் கட்சி 24% பெறுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது பா.ஜ.க 38% வாக்குகளை இந்த தொகுதியில் பெறக்கூடும். ஏனென்றால், மூன்றாவது இடத்தை பிடித்த கட்சி 16%-க்கு கூடுதலாக 8% கொண்டிருக்கிறது. அப்படி என்றால், 42%-இல் இருந்து 4% (2%+2%+2%+2%) குறையும். அதனால் பா.ஜ.க 38% (42%-4% = 38%) வாக்குகளை பெறலாம்.

இந்த இடைவெளி, வட்டியூர்க்காவு மற்றும் பாலக்காட்டில் 3%மும், களக்கோட்டம் மற்றும் சாத்தனூரில் 4-5%-மும், கோழிக்கூடு வடக்கில் 8-9%மும் உள்ளது.

வட்டியூர்க்காவு: இடது ஜனநாயக முன்னணி 38%, தேசிய ஜனநாயக கூட்டணி 35%, ஐக்கிய ஜனநாயக முன்னணி 24.4% வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. இதே போல பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு விபரங்கள்:

பாலக்காடு: ஐக்கிய ஜனநாயக முன்னணி 35.2%, தேசிய ஜனநாயக கூட்டணி 32.4%, இடது ஜனநாயக முன்னணி 31%.

களக்கோட்டம்: இடது ஜனநாயக முன்னணி 38.6%, தேசிய ஜனநாயக கூட்டணி 34%, ஐக்கிய ஜனநாயக முன்னணி 24.15%.

சாத்தனூர்: இடது ஜனநாயக முன்னணி 38.2%, தேசிய ஜனநாயக கூட்டணி 33.8%, ஐக்கிய ஜனநாயக முன்னணி 26.2%.

கோழிக்கோடு வடக்கு: இடது ஜனநாயக முன்னணி 39.5%, தேசிய ஜனநாயக கூட்டணி 30.7%, ஐக்கிய ஜனநாயக முன்னணி 27.7%.

நேமம், மஞ்சேஸ்வரம், வட்டியூர்க்காவு, பாலக்காடு, களக்கோட்டம் ஆகிய பகுதிகளில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவே தெரிகிறது. சாத்தனூர் தொகுதியிலும் எதிர்பாராத வெற்றி கிடைக்கலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணி., திருவனந்தபுரம், கட்டைக்காடு, நெடுமங்காடு, அட்டிங்கள், வர்கலா, ஈரவிபுரம், கொல்லம், கொட்டராகரா, செங்கன்னூர், கொடுங்கலூர், புத்துக்காடு, இரிஞ்சலக்கூடா, நட்டிக்கா, திரிச்சூர், மலம்புழா, சோரனூர், ஒட்டப்பாலம், காசர்கோடு போன்ற பகுதியையும் கைப்பற்ற முயன்று வருகிறது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ள 18 இடங்களில் 16 இடங்களில் இடதுசாரி கூட்டணிக்கும், இரண்டில் காங்கிரஸ் கூட்டணிக்கும் சவாலாக விளங்குகிறது.

சில டிவிட்டர் கணக்குகளில் வெளியான கருத்துக்கணிப்புகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி வெளிபட்டுள்ளது.

எப்போதும் ஆளுங்கட்சியின் மீதான எதிர்ப்பு ஓட்டுக்களை இடதுசாரிகள், காங்கிரஸ் என்று மாற்றிமாற்று கேரள மக்கள் ஓட்டளித்து வந்தனர். இதனால் பா.ஜ.கவிற்கு விழ வேண்டிய ஓட்டுக்கள் கூட ஆட்சி மாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் பா.ஜ.க, இந்த முறை இடது ஜனநாயக முன்னணி – ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக கடுமையான சவாலைக்கொடுக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஏன் தோற்றது என்பதற்கான உளவியல் காரணத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் தெரியும். மாநில அளவில் வெறும் 1 அல்லது 2 சீட்டுக்களை வைத்துக்கொண்டு யாராலும் ஆட்சியில் அமர முடியாது. இவ்வளவு ஏன் எதிர்க்கட்சியாக இருக்க கூட பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம்.

இந்த முறை மக்கள் இடது ஜனநாயக முன்னணி – ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வழக்கம்போல வாக்களித்து விட முடியாது. ஏனென்றால், ஜெயிக்கும் கட்சி அடுத்த 5 வருடத்திற்கு என்ன செய்ய போகிறதோ என்ற பயம் நிச்சயம் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்யும்.

எப்படி பார்த்தாலும், இடது ஜனநாயக முன்னணி, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை பயன்படுத்திக் கொள்ளவே பார்க்கிறது. ஆனால் அதற்கு பா.ஜ.க கடும் சவாலை அளிக்கும் என்று தெரிகிறது. றது.

‘மெட்ரோ மேன்’ என அழைக்கப்படும் ஸ்ரீதரன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி (ஊழல் ஒழிப்பு பிரிவு) ஜாக்கப் தாமஸ் மற்றும் பல ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தது அக்கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.

இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தால் 5 இடங்கள் முதல் 20 இடங்கள் வரை பா.ஜ.க பெற வாய்ப்புள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 30 சதவீதம் வரை தனது ஓட்டு வங்கியை பாஜக அதிகரித்துக் கொள்ளும் என்றே நம்பப்படுகிறது.

நன்றி : ஸ்வராஜ்ய

+3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here