கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் தெரியுமா? தண்ணீர் குறித்து நீங்கள் அறியாத பல அரிய தகவல்கள்…

  • தண்ணீர் தான் நம் உடம்பில் உள்ள உறுப்புகளுக்கு சக்திகளை எடுத்து செல்கிறது.
  • நம் எண்ணங்களை சக்தியாக்கி நீர் வழியாக நம் உடல் முழுவதும் பரவுகிறது. நீரை கொண்டே நம் உடல் அமைப்பு உருவாகிறது.
  • கோவில்களில் குளம் வெட்டியது, வீட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் குறித்த முழு தகவல்கள் இங்கே இருக்கிறது.

நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கு உணர்வுகள் உள்ளன என்றும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும், என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? தண்ணீரினால் அதன் மகிழ்ச்சி, கோபம், நன்றியுணர்வு மற்றும் உங்களுடன் அன்பைக் காட்ட முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இன்றைய அறிவியல்

ஜப்பானிய விஞ்ஞானியும், அறிஞருமான மசாரு எமடோ, நீர் பற்றிய தனது ஆராய்ச்சியில் 40 ஆண்டுகள் அர்ப்பணித்தார். அவரது கண்டுபிடிப்பு நம்பமுடியாதது மற்றும் அவர் ” தண்ணீரில் மறைக்கப்பட்ட செய்திகள் (The Hidden Messages in Water)” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார், இது நியூயார்க் டைம்ஸில் மிக அதிகமாய் விற்பனையான புத்தகமா கூறப்பட்டுள்ளது, இது அவரது கண்டுபிடிப்புகளை தெளிவுபடுத்துகிறது.

தனது ஆராய்ச்சியில், தண்ணீரானது எவ்வாறு ஒரு இசைக்கு ஏற்றார் போலும் மற்றும், கோபம், நன்றி, அன்பு, வெறுப்பு போன்ற பல உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்களுக்கு ஏற்ப தன் தன்மையை மாற்றிக்கொள்கிறது போன்ற சோதனைகளை அவர் மேற்கொண்டார்.
இனிமையான இசைக்கு நீர் மூலக்கூறுகளின் பதில் மிகவும் சுவாரஸ்யமானது. பாரம்பரிய இசை மற்றும் பீத்தோவனின் சிம்பொனி இசைக்கப்பட்டபோது, நீர் மூலக்கூறுகள் ஒரு மென்மையான மற்றும் அழகான படிக அமைப்பை (Crystal structure) உருவாக்கியது. அதில் பல அழகான விவரங்கள் இருந்தன. மறுபுறம், வேகமான, கனமான மேற்கத்திய இசை (Rock Music) வாசிக்கப்பட்டபோது, நீர்படிக அமைப்பு சிதைந்து, துண்டு துண்டாக இருந்தது.

நம் உடலமைப்பில் நீரின் பங்கு

நம் உடல்கள் தண்ணீரினால் ஆனவை. நாம் பிறக்கும்போது, நம் உடலில் 78% நீர் உள்ளது மூளை 90% தண்ணீரால் ஆனது.நாம் வயது வந்தவுடன், சதவீதம் 55-60%மாக குறைகிறது, மேலும் நாம் வயதாகும்போது, அது 50% க்கும் குறைவாக செல்கிறது. நம் வாழ்நாள் முழுவதும், நமது நல்வாழ்வுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலின் உள்ளே நீர் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

நம் எண்ணங்களின் வலிமை

ஒரு சிந்தனையோ அல்லது உணர்ச்சியோ நீரின் வேதியியல் கலவையை மாற்றாமல் நீரின் மூலக்கூறு கட்டமைப்பை மாற்ற முடியும் என்பதை இன்றைய விஞ்ஞானம் பல கணிசமான சான்றுகளுடன் நிரூபிக்கின்றன.
இதேபோல் எந்தவிதமான வேதியியல் மாற்றங்களும் இல்லாமல் ஒருநீரானது விஷமாகவும் இருக்கமுடியும். அது அந்த நீரானது எந்த வகையான நினைவகத்தை கொண்டு செயல்படுகிறதோ அதை பொறுத்தது, அதே நேரத்தில் நீரானது வாழ்க்கையின் அமுதமாகவும் இருக்க முடியும். உதாரணமாக நாம் யார் வீட்டுக்கு சென்றாலும் நம்மை முதலில் நீர் கொடுத்து வரவேற்கும் கலாச்சாரம் பொதுவாக அனைத்து தரப்பினரிடமும் உண்டு. இது நமது தாகத்தை தணிக்கும் செயலை தாண்டி அந்த வீட்டில் உள்ளவர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் நம்மை இணக்கம் ஆக்கிக்கொள்வது என்ற ஒரு விஷயமும் அடங்கும்.

நம் முன்னோர்கள் சிலர் இவ்வாறு சொல்வதை கேள்விப்பட்டு இருக்கலாம் நாம் யாருடைய கைகளில் இருந்தும் தண்ணீர் குடிக்கவோ அல்லது உணவை உண்ணவோ கூடாது என்பதுதான் அது. ஏனென்றால் நம்மை நேசிக்கும் நம் மேல் அக்கறை உள்ளவர்களிடம் இருந்துதான் நாம் எப்போதும் அதைப் பெற வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

இதனால்தான் இந்தியாவில் பாரம்பரியமிக்க வீடுகளில், மக்கள் ஒரு நல்ல பித்தளைக் பாத்திரத்தை வைத்திருப்பார்கள், அவர்கள் தினமும் சுத்தம் செய்து அதன்பின் பூஜை செய்த பின்னே அதில் தண்ணீர் நிரப்பி அதை பயன்படுத்துவார்கள். இதற்காகத்தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தீர்த்தம் என்ற ஒரு வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள் அந்த தீர்த்தமானது சாதாரண மனிதர்களிலிருந்து ஒரு மிகப்பெரிய செல்வந்தர்கள் வரையில் பிரசாதமாக பக்தியாக விரும்பி வாங்கும் ஒன்றாக இன்று வரை இருக்கிறது. இது அவ்விடத்தில் உள்ள தெய்வீக ஆற்றலையும் அதிர்வலையையும் தன்னகத்தே உள்ளடக்கியது என்பதுதான் அதன் சிறப்பு இதைத்தான் நாம் தீர்த்தம் என்று கூறினோம்.

இதையெல்லாம் நம்மில் சிலர் மூட நம்பிக்கை என்று நினைத்தோம் ஆனால் இப்போது இன்றைய விஞ்ஞானமும் விஞ்ஞானிகளும் அதையே நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
மேலும் தண்ணீரானது அதிகப்படியான அழுத்தத்தில் நாம் எடுக்கும் பொழுதும் மற்றும் குழாய்களில் வழியாக அது வந்து சேரும் பொழுதும் அதன் வேதியல் தன்மை மற்றும் மூலக்கூறு கட்டமைப்பானது மாற்றமடைகிறது என்பதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நம் உடலானது 72 சதவீதம் தண்ணீரால் ஆனது. சொல்லப்போனால் நாம் ஒரு நடக்கும் தண்ணீர் குடுவை.எனவே, ஒரு பாத்திரத்தில் உள்ள நீரின் தன்மையை நம்மால் மாற்ற முடிகிறது என்றால் நம் உடலில் உள்ள தண்ணீரின் தன்மையை இனிமையாக மாற்ற முடியாதா என்ன?

இந்து மதத்தில் தண்ணீரின் பங்கு
இந்து மதத்தில் தண்ணீர் இன்றி எந்த சடங்கும் இல்லை என்றே சொல்லலாம். யாகம் முடிந்து,ஹோமங்கள் முடிந்து தண்ணீரைத்தான் அனைத்து இடங்களிலும் தெளிப்பார்கள்.

இதற்காகத்தான் நம்முன்னோர்கள் ஆலயங்களில் தீர்த்தக்குளம் என்று வெட்டிவைத்தனர். இப்படியொரு ஆழமான புரிதலும், அறிவும், ஞானமும் நம் கலாச்சாரத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இதை உணர்ந்தவர்கள் இதை பயன்படுத்தி தன் வாழ்க்கையை வலப்படுத்திக் கொண்டனர்.

மேலும் நதிகளையும் நீர் நிலைகளையும் கடவுளாக கருதி அதன் தன்மையை அறிந்து புண்ணிய நதிகளாகவும் தீர்த்தக்குளங்களாகவும் வழிபட்டு வந்தனர்.

சொற்கள் அல்லது இசை நீரின் மூலக்கூறு கட்டமைப்பை பாதிக்கக்கூடும் என்றால், நம் எண்ணங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, மேலும் இது உடலுக்குள் இருக்கும் தண்ணீரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் இருக்கும் நீரின் மூலக்கூறு கட்டமைப்பில் உடனடியாக வெளிப்படுத்தப்படுகின்றன.

வெளியில் நேர்மறையாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ இருப்பது நம் உள்ளே நல்ல பலனளிக்கும். இது நம் அன்றாட வாழ்க்கையில் தெரிந்துகொள்ளவும் பயிற்சி செய்யவும் கூடிய ஒரு அருமையான விஷயம்.

நன்றியுணர்வு

உங்களுக்கு உதவும் ஒருவரின் முயற்சிகளுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்கும்போது, அவர்கள் உங்களுக்கு அதிக உதவியாக இருப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நீங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்றால், அடுத்த முறை உங்களுக்கு உதவுவதற்கு முன்பு அவர்கள் இரண்டு முறை யோசிப்பார்கள். நன்றியுணர்வாக இருப்பது மிகவும் பொதுவான மனித உணர்ச்சியாகும். நீரும் அதன் தன்மையையும் அறிந்து நாம் நம்மில் ஏற்றுக்கொள்ள இதுவே சிறந்த தருணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here