கொரோனா அவலங்கள்..யார் காரணம்?

கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்களின் மரண ஓலம், நகரங்களை கடந்து இப்போது கிராமங்களையும் அடைந்துவிட்டது. எல்லா இடங்களிலும் ஆம்புலன்ஸ் அலறல் சத்தம் 24 மணிநேரமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. என் தந்தைக்கு ஒரு படுக்கை தாருங்கள், தாயிற்கு ஒரு படுக்கை தாருங்கள், மகனுக்கு, மனைவிக்கு, மகளுக்கு என்று தங்களது சொந்தங்களை காப்பாற்ற மருத்துவர்களின் காலை பிடித்துக் கொண்டு கதறும் கூட்டம் நாடெங்கும் உள்ளது. 24 மணிநேரமும் தொழில் உற்பத்தி நடந்த இந்த தேசத்தில் தற்போது 24 மணிநேரமும் மயானங்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த அவலத்திற்கு யார் காரணம்?

ஒரு நாட்டின் சுயநலம், உலகின் சொத்தையெல்லாம் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற குள்ளநரித்தனம், யார் இறந்தால் என்ன, என் நாட்டிற்கு மற்ற நாடுகளின் செல்வங்கள் குவிய வேண்டும் என்ற கொடூர எண்ணம். இத்தனை கொடூர எண்ணங்களையும் உடைய நாடு சீனா!

ஆம் சீனா என்ற கொடுங்கோல் நாட்டின் சுயநலமே உலகளவிய இந்த அவல நிலைக்கு காரணம்.

சர்வதேச அளவில் சர்வ நாசத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட் -19 என்ற கொரோனா (சீன)வைரஸ் பரவலை 31.12.2019 அன்று தான் சீனா முதன் முதலில் உலகிற்கு அறிவித்தது. ஆனால் அதற்குள் அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இதைத் தான் சீனாவும் எதிர்பார்த்திருந்தது. கோவிட்-19 வைரஸ் சீனாவின் யுகான் நகரின் இறைச்சி மார்க்கெட்டிலிருந்து பரவியது என்று அந்நாடு கூறினாலும், உண்மையில் அது யுகான் நகரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே பரப்பப்பட்டுள்ளது என்று அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் பகிரங்கமாக குற்றம் சாட்டின. ஆனால் அதை சீனா கடுமையாக மறுத்தது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் லீ மெங் யான் என்ற 37 வயது பெண் விஞ்ஞானி சீனாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அப்போதிருந்து அவர் தொடர்ந்து கோவிட் வைரஸ் சீனாவின் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் தான் உருவாக்கப்பட்டது, அதை வேண்டும் என்றே பரப்பினர் என்று கருத்தை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பாரம்பரியமற்ற உயிரி ஆயுதங்கள் என்பது சீனாவின் நீண்டகால திட்டம்.

இந்த உயிரி ஆயுதங்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் வென்று விடலாம் என்று ஒரு திட்டத்தை சீனா வகுத்துள்ளது. சீன ராணுவத்தின் ஆய்வு மையத்திலிருந்து இந்த வைரஸ் வெளியாகியுள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவும் போது, அதை கடுமையாக மறுக்க வேண்டும் என்றெல்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்பே சீன அரசு திட்டமிட்டிருந்தது. கொரோனா வைரஸ் வுகான் சந்தையிலிருந்து வரவில்லை. சீனா ராணுவ ஆய்வகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு, அங்கிருந்து தான் வெளியாகியுள்ளது. இதற்கு மிக அதிகளவில் சீனா முதலீடு செய்து வைரஸ்சை கண்டுப்பிடித்துள்ளது. எதிரிநாடுகளின் மருத்துவ கட்டமைப்பை சிதைப்பது, பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவது என்பதெல்லாம் அதன் நோக்கம்.

எனது வாதத்திற்கான மறுக்கமுடியாத ஆதாரங்களை நான் வழங்கியுள்ளேன். ஆனால் சீன அரசு தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகிறது. இதை உலக சுகதார அமைப்பு நிராகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் மீதும் இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா நேரடியாகவே குற்றம்சாட்டி, உலக சுகாதார அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தி வைத்தது.

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிய ஒரு ஆண்டிற்கு பிறகு (போகாமலேயே இருந்திருக்கலாம்.) ஜனவரி 2021 ல் குழு ஒன்றை டபிள்யூ எச்ஓ அனுப்பியது. தனி மனிதன் ஒருவன் குற்றம் செய்தாலே அவனால் தடையங்களை சுலபமாக அழித்துவிடமுடியும் இந்த காலத்தில், சீனா போன்ற கம்யூனிஸ சர்வாதிகார நாட்டில் சொல்லவே வேண்டியதில்லை. எந்த ஆதாரமும் இல்லாத இடத்திற்கு சுற்றுலா சென்று வந்தது போல அந்த குழுவும் சீனா சென்றுவிட்டு திரும்பி, சீனாவின் மீது எந்த குற்றமும் இல்லை என்று கிளிப்பிள்ளை போல வாசித்தனர்.

ஆனால் உண்மையில் சீனா எதிர்பார்த்தது என்ன?

கொரோனா வைரஸ் உலகளவில் பரவும் போது உலகமே முடங்கிவிடும். பொருளாதார ரீதியில் பலத்த அடியை சந்திக்கும். ஆனால் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை முன்னெச்சரிக்கையாக தயாரித்து வைத்திருந்த சீனாவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அப்போது உலக நாடுகளின் நிறுவனங்களை கபளீகரம் செய்துவிடலாம் என்பதும், கொரோனா வைரஸ்சிற்கான தடுப்பு மருந்தை வாங்க உலக நாடுகள் வரிசையில் நிற்கும், அதில் வாரி சுருட்டலாம் என்றும் சீனா எதிர்பார்த்திருந்தது. ஆனால் அதன் நோக்கம் பாதி தான் நிறைவேறியது. பொருளாதார ரீதியாக பாதிப்புகளைச் சந்தித்தாலும், தங்கள் நிறுவனங்களை சீன நிறுவனங்கள் வாங்குவதை முன்கூட்டிய கணித்து இந்தியா உட்பட உலக நாடுகள் தடுத்து நிறுத்திவிட்டன.

கொரானாவிற்கான தடுப்பு மருந்தை இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தாங்களாகவே தயாரித்துவிட்டன. இது சீனாவிற்கு பெரும் அடியாக அமைந்தது. தான் உற்பத்தி செய்து வைத்திருந்த மருந்துகளை, தனது நட்பு நாடான பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சீனா அளித்தது. குறிப்பாக மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தனது கொரோனா தடுப்பூசிக்கு மிகப்பெரிய தேவைஇருக்கும் என்று சீனாவின் எதிர்பார்ப்பிற்கு பாரத் பயோடெக், சீரம் நிறுவனங்களின் கண்டுப்பிடிப்புகள் முற்றுப்புள்ளியை வைத்தன. ஆனாலும் அந்த தடுப்பு ஊசிகள் மீது மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த, இந்தியாவில் உள்ள தனது கைத்தடிகள் மூலம் முயற்சித்தது. அதுவும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. மாறாக இந்தியா ஏழை நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கியது. இது இரண்டாவது அலை பரவியபோது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களாகவும், மருந்து பொருட்களாகவும், தடுப்பூசிகளாகவும் திரும்ப வந்துக் கொண்டே இருக்கிறது.

கொரோனா பரவலுக்கு பின்னர் நாட்டின் மொத்த உற்பத்தியில் குறைந்த இழப்பை சந்தித்த நாடு சீனா தான். ஆனால் உலகம் முழுவதும் வேலை இழப்பு, கோடிக்கணக்கான மக்கள் மரணம் என்று மற்ற நாடுகள் இழந்தது ஏராளம். ஏன் உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சீனாவின் கொரோனா வைரஸ்சிற்காக இழப்பைச் சந்தித்துள்ளது. இதில் வளர்ச்சியடைந்த ஒரே துறை மருந்துபொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தான். ஒரு சில நிறுவனங்கள் ஆயிரம் மடங்கு வளர்ச்சியை பெற்றுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவின் முதல் அலையை மத்திய, மாநில அரசுகள் மிகச்சிறப்பான முறையில் கையாண்ட. குறிப்பாக பிரதமர் மோடி கொரோனா பரவலை தடுப்பதை தவமாகவே மேற்கு கொண்டு வருகிறார். எத்தகைய விமர்சனங்களுக்கும் அவர் பதிலளிப்பதில்லை. ஆனாலும் அவரது முயற்சிகளை மீறி இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளது.

இதில் ஒவ்வொரு தனிமனிதனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் உற்றார், உறவினர்களை இழந்துள்ளனர். பல மகாத்மாக்களையும் இந்நாடு கொரோனாவிற்க பலி கொடுத்துள்ளது.
இந்த கொடூர நிலைக்கு சீனா என்ற கம்யூனிச நாட்டின் சுயநலமும், உலகை ஆள வேண்டும் என்ற வெறியும் தான் காரணம். நமது இழப்புகளை பார்க்கும் போது நமக்கு சீனா மீது தான் வெறுப்பு வரவேண்டும். ஆனால், நம் நாட்டிற்குள் இருக்கும், தேசவிரோத சக்திகளும், சீனவின் மறைமுக, நேரடி ஆதரவாளர்களும் இந்த வெறுப்பை பிரதமர் மோடி மீது திருப்ப முயற்சித்து வருகின்றனர்.

நம்மை காக்க முன்களத்தில், முதல் வரிசையில் நின்று போராடிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம் பிரதமராக கிடைத்திருப்பது நம் பாக்கியம். அதனால் அவர் பின்னால் நின்று போராடி இந்த கொடூர சீன வைரஸை விரட்டியடிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here