மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 77 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதனால் ஆத்திரமுற்ற திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பாஜகவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் பாஜக தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே அங்கே வன்முறை சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக இருந்தது.
இதனை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலைமுன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசியமகளீரணி தலைவியான வானதி சீனிவாசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரூபா கங்குலி மற்றும் மேற்கு வங்க மாநில மகளீரணி தலைவி அக்னிமித்ரா பால் ஆகியோர் அறவழிப் போராட்டம் நடத்தினர். பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த அவர்களை காவல் துறையினர் கைது செய்து கல்கத்தா லால்பஜார் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.