கோயில் அடிமை நிறுத்து இயக்கம் வெற்றி! எதிரிகள் பீதி!!

ஒரு இந்து வழிபடுவதற்கு கோயிலுக்கு செல்லும்போது, ஒன்றிற்கு நான்கு மடங்காக செலவளிக்க வேண்டும். தேங்காய், பழ பூஜை தட்டு வெளியே வாங்கினால் ரூ.30க்குள் அடங்கிவிடும். ஆனால் அதே கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் கடைகளில் ரூ.100க்கு விற்கப்படும். மாலைகள், பிரசாதங்கள் என்று அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை. இதையெல்லாம் தாண்டி சென்றால், அர்ச்சனைக்கு, தரிசனத்திற்கு என்று கடவுளை பார்த்து வணங்கவும் சாமானிய இந்து தமிழர் செலவளித்தாக வேண்டும். இதெற்கெல்லாம் பணம் இல்லாத பக்தர், தூரத்தில் நின்று கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று வண ங்கிவிட்டு செல்வதும் உண்டு.

சாமானிய பக்தர்களுக்கு எட்டாத விஷயங்களும் உண்டு. திருக்கோயில்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சில தனிநபர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்க உரிய நடவடிக்கை ஏதும் இந்து சமய அறநிலைத்துறை எடுத்ததாக தெரியவில்லை. தனிநபர்கள் சிலர் நீதிமன்றங்களில் வாதாடி சிலவற்றை மீட்டு வருகின்றனர். இவற்றை தாண்டி, ஒரு புதிய மாவட்டம் உருவானால், அந்த மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், காவல்துறை அலுவலகம், குடியிருப்புகள் உள்ளிட்ட பல அரசு பயன்பாட்டிற்கு கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு இழப்பீடாக பெயரளவிற்கு ஒரு தொகை ஒதுக்கப்பட்டாலும், அது அதே அரசு துறையான இந்து சமய அறநிலைத்துறையின் அதிகாரிகளின் வசதியான வாழ்க்கைக்கே பயன்படுத்தப்படுகிறது.

இப்படி கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுவதால், பல புராதானக் கோயில்கள் சிதிலமடைந்தும், நெல் கொட்டி வைக்கும் கிடங்குகளாகவும் காட்சியளிக்கின்றன. அறநிலைத்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்களுக்கான பலவித சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்க, அந்த கோயிலில் பூஜை உள்ளிட்ட கைங்கர்யங்களை செய்யும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்டவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது.

பண்பாட்டையும், இந்து தர்மத்தையும் போதிக்கும் கோயில்கள், இதன்காரணமாக மெல்ல மெல்ல நலிவடை ந்து வருகிறது. அதேசமயம் இந்துக்களை மதமாற்றம் செய்யும் பிற மதங்கள் தங்கள் வழிபாட்டு ஸ்தலங்களை தாங்களே நிர்வாகம் செய்கின்றனர். அரசு சலுகைகளையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களின் மதச்சொத்துக்களை ஒரு சதுர அடி நிலத்தைக் கூட அரசு எடுத்துக் கொள்ளாது.

எல்லா மதத்தின் மீதும் ஒரேவிதமான அணுகுமுறையை வைத்துள்ள அரசு தானே, மதச்சார்பற்ற அரசாகும்? இந்து மதத்தின் திருக்கோயில்கள் மீது மட்டும் ஆதிக்கத்தைச் செலுத்தும் அரசு எப்படி மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும்?

இப்போது இந்த கேள்வி சாமானிய இந்துக்கள் முதல் சத்குரு ஜக்கிவாசுதேவ் போன்ற ஆன்மீக தலைவர்கள் வரை எழுப்பத் தொடங்கியுள்ளனர். சத்குரு ஜக்கிவாசுதேவின் ‘கோவில் அடிமை நிறுத்து’ இயக்கத்திற்கு இந்து தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இது இந்து சமயத்தை அழித்துவிடத்துடித்துக் கொண்டிருக்கும், இடதுசாரிகள், நாத்திகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே கோயில்கள் மீட்பு இயக்கத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று முயற்சிகளை துவங்கியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐயின் தயாரிப்பும், தீவிர இடதுசாரியுமான முன்னாள் ஐகோர்ட் நீதிபதியுமான சந்துரு, கோயில்கள் மீது தனக்கு பற்று இருப்பதைப்போல கட்டுரை எழுதியுள்ளார். பல தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, கோயில்களை அரசு நிர்வகிப்பதே சரி என்று கூறியுள்ளார். தன்னை நீதியரசர் என்று அழைத்துக் கொள்ளும் இவர், சிதிலமடைந்திருக்கும் கோயில்கள் குறித்தோ, சிலைகள் கடத்தல் குறித்தோ, பக்தர்களிடம் தரிசனக்கட்டணக் கொள்ளை வசூலிப்பது குறித்தோ, கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்தோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. கம்யூனிஸ்ட்டான இவர், எல்லா மதங்களையும் சமமாக பாவித்து, கிருஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டு ஸ்தலங்களையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்று கூறும் துணிச்சல் உள்ளதா என்று தெளிவுப்படுத்த வேண்டும்.

கோயில் நிர்வாகங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டதால், அரசு ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறும் இவர், சர்ச் நிர்வாகங்கள், மசூதி நிர்வாகங்களில் பல இடங்களில் பூசல்கள், முறைகேடுகள் ஏற்பட்டு, நீதிமன்றங்களில் வழக்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கோயில்களுக்கான அதே அளவு கோல் இவற்றிற்கு பொருந்தாதா என்று தான் கற்ற சட்டங்களை கரைத்துக்குடித்துவிட்டு கருத்து கூற வேண்டும்.

இவரைத்தவிர, தீவிர பொதுவுடமை வாதியான மணியரசன் என்பவர் திடீரென தெய்வ தமிழ் பேரவை என்ற பெயரில் ஆன்மீக வேஷம் போட்டு, சத்குரு ஜக்கிவாசுதேவ், கர்நாடக மாநிலத்தவர், அவர் தமிழக கோயில்களை கைப்பற்ற திட்டமிடுகிறார் என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார். மணியரசன் முதலில் தான் எத்தனை கோயில்களில் உழவாரப்பணியை செய்துள்ளார் என்பதையும், தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறைகளை காப்பாற்ற இதுவரை அவர் ஆற்றியப்பணி என்ன என்பதையும் விளக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் மீது குற்றம்சாட்டும் இவர், மதமாறிய தமிழர்கள் எந்த நாட்டு வழிபாட்டு முறையை ஏற்றுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டும். அவர்கள் வழிபாடு, மொழி, உடை, பண்பாடு போன்றவற்றில் தமிழ் தன்மையிலிருந்து மாறிவிட்டார்களே அதை மீட்க என்ன வழிமுறை வைத்திருக்கிறார், அல்லது முயற்சி எடுத்திருக்கிறார் என்பதை கூற வேண்டும்.

தமிழர்களை இந்து அடையாளத்திலிருந்து விலக்கி வைக்க, கோயில்களை அழிக்க வேண்டும் என்பது முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் முதற்கொண்டு அந்நிய மதத்தினரின் திட்டம். அந்த கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று இப்போது தமிழர்கள் விழிப்புணர்வு அடைந்திருப்பது, மாற்று மதத்தவர்களின் கைக்கூலிகளை அச்சப்படுத்தியுள்ளது. எதிரிகளின் அச்சம், இந்துக்கள்(உண்மை தமிழர்கள்) சரியான திசையில் செல்வதை உறுதி செய்துள்ளது. திருக்கோயில்கள் மீண்டும் பக்தர்கள் நிர்வாகத்தில் வரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

கோயில் நிலங்களை கைப்பற்றி அவற்றை ஏழை விவசாயிகளுக்கு அளிப்பதாகவும், கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அந்த இடத்தை பட்டா போட்டு தருவதாகவும் வாக்குறுதி அளிக்கும் கட்சிகள் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள். இவர்கள் மறந்தும் பிற மத சொத்துக்களை ஏழைகளுக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததில்லை. ஏன், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது கட்சியின் சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்ததாக வரலாறு இல்லை. தனது கட்சியில் எம்எல்ஏவாக இருந்து ஓய்வு பெற்றுள்ள நன்மாறன் போன்றவர்களின் ஓய்வூதியத்தைக் கூட பறித்துக் கொண்டு அவர் ஆட்டோவில் செல்வதற்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படும் நிலையில் வைத்துள்ளவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

3 COMMENTS

  1. சரியான பதிலடி அந்நியக் கைக்கூலிகள் மதமாற்றம் கும்பலுடன் பணம் பெற்றுக் கொண்டு தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இலைகிறார்கள் சத்குரு போன்றவர்கள் மட்டுமே இது மீட்டெடுக்க முடியும்

  2. மணியரசன் என்பவர் தீவிர கிருத்துவ மதத்தை சார்தவர் முதலில் அவர் உண்மை பெயரை குறிப்பிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here