கோவை, ஜனவரி 09
கோவையில் உபயோகித்த கார்கள் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பயனுள்ள வகையில் ‘வண்டி மண்டி’ எனும் புதிய செயலி உதயம்…
தற்போது பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்குவதற்கு என பல்வேறு தளங்கள் இருந்தாலும்,அதில் பாதுகாப்பில்லாத பல்வேறு விதமான நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.இந்நிலையில் கார்களை விற்பதற்கும்,வாங்குவதற்கும் இரு தரப்பினரையும் இணைக்கும் வகையில் புதிய செயலி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
வண்டி மண்டி என அழைக்கப்படும் இந்த செயலியில் கார்களை விற்பவர்கள் நேரடியாக பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட யூஸ்டு கார் டீலர்களின் கண்காணிப்பில் செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ள இதற்கான அறிமுக விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இதில் கோவையை சேர்ந்த பல்வேறு முன்னனி யூஸ்டு கார் டீலர்கள் கலந்து கொண்டனர்.செயலி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் அசைன் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் கூறுகையில்,கார்களை விற்பவர்களின் கார்களின் உண்மை தன்மையை முழுமையாக பரிசோதித்த பிறகே இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும்,தமிழக அளவில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட இந்த வண்டி மண்டி செயலி கார்களை விற்பவர்களுக்கும்,வாங்குபவர்களுக்கும் நல்லதொரு இணைப்பு பாலமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்